தேவதையின் விழிகள் 23..
விழிகள்
கதிரவன் தன் காதலியுடன் சரசம் புரிந்து கொள்ளும் காலைப் பொழுதில் முதலில் கண் விழித்த சிந்து தான் இன்னும் தன்னவனின் கை வளைவுக்குள் இருப்பதைப் பார்த்து வெட்கப் புன்னகையுடன் பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டாள்.
சிறிது நேரத்தில் அவள் குளித்து விட்டு
தூங்கிக் கொண்டிருந்த மித்ரனின் தலை கோதி நெற்றியில் இதழ் பதித்தவள்
அறையை விட்டு வெளியேறினாள்.
அவள் வெளியில் சென்றது தான் தாமதம்
தூங்குவது போல் பாசாங்கு செய்த மித்ரன் கட்டிலில் இருந்து பாய்ந்து எழுந்தவன் தனது ரகசிய அறையில் நுழைந்து கொண்டான்.
அந்த இருட்டறையில் தனக்கு வேண்டிய பொருட்களை சிறு பையினுள் எடுத்துக் கொண்ட மித்ரன் படுக்கை அறைக்கு வந்து அதை ஜன்னல் வழியாக வெளியே தூக்கிப் போட்டவன்
ஜாகிங் உடையில் ஹாலிற்கு வந்து " ராஜிம்மா நான் வரதுக்கு கொஞ்சம் லேட் ஆகும்" என்று வெளியில் ஓடியவன்
தூக்கிப் போட்ட சிறு பையையும் எடுத்துக் கொண்டு பூங்காவுக்கு சென்றான்.
அங்கு இவனுக்காக பல்சர் பைக்கோடு நின்றிருந்தான் ருத்ரன்.
அவனருகில் வந்த மித்ரன் கண்களாலே ருத்ரனிடம் விடை பெற்றுக் கொண்டு மின்னல் வேகத்தில் பைக்கை கிளப்பிக் கொண்டு சென்றான்.
மித்ரன் வீட்டில்...
டைனிங் டேபிளில் உனவை அடுக்கிக் கொண்டு இருந்ந சிந்து " அத்த அவர் எப்பவுமே ஜாகிங் போவாரா"
ராஜி " இல்லம்மா மாசத்துல இரண்டு மூனு வாட்டி போவான் மா. அப்படி எப்ப போனாலும் லேட் ஆ தான் வருவான்"
" ஜாகிங் போறதுக்கு எதுக்கு அவ்வளவு நேரம் ஹாப்பன் அவர் இருந்தா போதுமே " என்று சிந்தித்தவள் அதை
ஒதுக்கித் தள்ளி விட்டு
டிபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு அஜயுடன் காலேஜ் கிளம்பிச் சென்றாள்.
ஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்த காட்டுப் பகுதியில் வண்டியை நிறுத்திய மித்ரன்
அந்தக் காட்டுக்குள் இருந்த பாழடைந்த பங்களாவில் நுழைந்து கொண்டான்.
ஜாகிங் உடையைக் களைந்தவன் கொண்டு வந்திருந்த பையில் இருந்து கருப்பு ஜீன்ஸ் டீசர்ட் எடுத்து அனிந்தவன் காலில் ஸ்போர்ட்ஸ் சூ அனிந்து ஓவர் கோட்டுடன் கறுப்பு நிறத்தில் முகமூடி என்று தனது அடையாளங்களை முழுமையாக மறைத்த மித்ரன்
சற்றுத் தள்ளி இருந்த சுரங்க அறைக்குள் நுழைந்து கொண்டான்.
அங்கு ரவியுடன் புதியவன் ஒருவனும் இருக்கையில் சேர்த்து கட்டப் பட்டிருந்தான்.
காலேஜில் ....
அஜய் தியாவின் பின்னால் சுற்றிக் கொண்டு இருந்தான்.
"செல்லக் குட்டி நான் சொல்லுறத கொஞ்சம் கேளுடி"
தியா: " என்னடா சொல்லப் போற "
" பிஸியா இருந்தேன் அதான் உன் புறந்த நாள் மறந்து போச்சி அதானே"
அஜய் : " ஸாரி செல்லக் குட்டி "
தியா: " டேய் இனி செல்லக் குட்டி, பன்னிக் குட்டி சொல்லி பின்னாடி வந்த நறுக்கிடுவன் "
அஜய் (m. voice) "அடி ஆத்தி நம்ம செல்லம் சிந்து கூட சேர்ந்து டெரர் பீஸா மாறிட்டு வருதுடா விட்றாத மாப்பு" என்று நினைத்து
தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த தியாவை ஓடிச் சென்று வழி மறித்த அஜய் அவளின் முன்னால் ஒற்றைக் காலில் மன்டியிட்டு அமர்ந்தான்.
தியா அவனது செயலில் விழி விரித்து பார்க்க
அவர்களை சுற்றி மாணவர்கள் சூழ்ந்து கொண்டனர்.
அஜயோ அனைவரையும் சாட்சியாக வைத்து மண்டியிட்ட நிலையில் ஒரு மோதிரத்தை எடுத்து தியாவிடம் நீட்டி " வில் யூ மேரி மீ செல்லக் குட்டி" என்றான்.
அவனது ப்ரபோஸலில் சுற்றி இருந்த மாணவர்களின் கரகோஷம் வானை பிளக்க தியாவின் விரலில் அதை அனிவித்து சிறிதாக முத்தம் பதித்தான்.
தியா வெட்கச் சிரிப்பில் அனிச்சை மலர் போன்று நிலத்தை நோக்க
"ம்ஹூம்" என்று பெருமூச்சு விட்ட சிந்து " நம்மாளுக்கு இந்த மாதிரி ரொமான்ஸ் சுட்டு போட்டாலும் வராது. இதை பார்த்து சரி மனச தேத்திக்க பங்கு" என்று கவுண்டர் அடித்த படி அவர்களை பார்த்து கொண்டு இருந்தாள்.
இருக்கையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த ரவியும் அப் புதியவனும் மவுத்தோகன் வாசிப்பில் கண்களை திறந்தவர்களுக்கு எதிரில் தனது அடையாளங்களை மறைத்து நின்ற மித்ரனை பார்த்து பயத்தில் வியர்த்துக் கொட்டியது.
மித்ரனோ சாவகாசமாக தனது கால்களை விரித்து ஆறடி உயரத்தில் நிமிர்ந்து நின்று மவுத்தோகன் வாசித்துக் கொண்டு இருந்தான்.
ரவியோ "இங்க பாரு எங்க பிரன்ஸ்ஸ போட்டு தள்ளின மாதிரி என்னையும் எங்க பாஸையும் உன்னால எதுவும் பன்ன முடியாது" என்று பக்கத்தில் இருந்த அப் புதியவனையும் இனைத்துக் கூறினான்.
மேலும் தொடர்ந்த ரவி " ஏன்னா நாங்க மித்ரன் சார் கஸ்டடியில் இருக்கம்"
என்று கூறியதும் மவுத்தோகன் வாசிப்பதை நிறுத்தி விட்டு" ஹஹ்ஹஹ்ஹா "என்று பெரிதாய் சிரித்த மித்ரன் தனது முகமூடியை கலட்டி எறிய
கட்டப் பட்டிருந்த இருவரது கண்களும் தெறித்து விழும் படியாக அதிர்ச்சியில் உறைந்து இருந்தனர்.
விழிக்கும்.......
✍️ Muhsina saththar.
கனவுகளின் இளவரசி Rs Musha
நெல்லியகம பலாகல.
No comments