Breaking News

தேவதையின் விழிகள் 22..


 விழிகள்..


           சிந்துஜாவுக்கு இதோடு பத்தாவது முறையாக அழைத்து அவள் அழைப்பை ஏற்காததால் டென்ஷனாக வீட்டுக்குள்ளே நடை பயின்று கொண்டிருந்தாள் ராஜி.

 அஜய் : " என்னம்மா உனக்கு பிரச்சினை. வீட்டுக்குள்ளேயே வாக்கிங் போயிட்டு இருக்க "

ராஜி: " நீ எப்படா வந்த. ரிஷப்ஸனுக்கு மண்டபத்துல ஏற்பாடு எல்லாம் எப்படி டா போயிட்டு இருக்கு."

அஜய்: " நான் வந்து ஒரு மணி நேரம் ஆச்சு. முதல்ல உங்களுக்கு என்னாச்சு "

ராஜி: " உங்கண்ணி கோவில்ல இருந்து இன்னும் வரலடா " என்று கூறி முடிக்க முன் வாசலில் ஜீப் சத்தம் கேட்டது.

          ராஜியும் அஜயும் வெளியே வந்து பார்க்க சிந்துஜா ஜீப்பில் இருந்து இறங்கினாள்.

           சிந்துஜாவை மித்ரனுடன் பார்த்ததும் ராஜியின் மனம் நிம்மதி அடைய  
" நீ எப்படி மித்ரனோட நீ போன் எடுக்கலன்டு பயந்து கிட்டு இருந்தேன்."

   சிந்து" அத்தை நான் " என்று ஏதோ கூற வரவும் 

இடையில் குறுக்கிட்ட மித்ரன் " என்ன பாக்கனும்னு சொல்லி ஸ்டேஷன் வந்திருந்தா " என்றவன் சிந்துவிடம் எதுவும் கூற வேண்டாம் என்று கண்களால் சைகை செய்தான்.

    அஜய் ஏதோ சொல்ல வாயேடுக்க " என்ன எல்லாரும் வெளியே நின்று விசாரிக்கிரீங்க வாங்க உள்ள போலாம்" என்று வீட்டுக்குள் சென்றான் மித்ரன்.

          "நல்லது பன்னம்மா அவன் சரியான காவல் கடை 
சரியான டைமுக்கு வர மாட்டான்." என்ற ராஜி அவளுடன் செல்ல

         " ரெண்டுங்க முழியும் சரி இல்லை ஏதோ பன்னுதுங்க " என்று என்னிய அஜயும் தனது பைக்கை எடுத்துக் கொண்டு மண்டபத்துக்கு சென்றான்.


          சிறிது நேரத்தில் மித்ரன் அடர் நீல வர்ண கோட்டில் கம்பீரமாக ஹாலுக்கு வர சிந்துவும் நீல நிறக் கட்கள் டாலடிக்க முடியை விரித்து விட்ட படி வானுலக தேவதையாக ராஜியுடன் இணைந்து வந்தாள்.    மித்ரனும் சிந்துவும் கைகளை கோர்த்து மேடையில் நிற்க அவர்களது ஜோடிப் பொருத்தம் கண்டு வந்தவர்கள் அசந்து தான் நின்றனர்.

         அணைவரும் மகிழ்ச்சியாக இருக்க
வயிறு எரிய நின்றது சிந்துஜா தான்.

போலீஸ் காரணுடன் சேர்ந்து நிற்பதை என்னி

     சிந்துஜா மித்ரனின் புறம் சாய்ந்து " உன்னோட ஜோடியா இருக்கிறத நினச்சாலே எரிச்சலாவுது" என்று கூற

       அதில் மித்ரனுக்கு கோபம் தலைக்கேற சிரித்தவாறே " இப்ப ஒன்னும் கேட்டு போகல உனக்கு எவன் கூட போகனுமோ போ " என்று வார்தைகளை விட்டு விட

       அவன் வார்த்தையில் சிந்துவின் கண்கள் கலங்கிப் போக அதை மறைத்தவாறு 
எந்த வித உணர்வையும் முகத்தில் பிரதி பலிக்காது இறுகிப் போய் நின்றாள்.

            பின்னர் வந்திருந்த விருந்தினரும் மணமக்களை வாழ்த்தி பரிசளித்து விட்டு செல்ல கடைசியாக வந்த கமிஷனர்

   " என்ன யங் மேன் சொல்லாம கல்யாணம் பன்னிகிட்ட . உன்னை எனக்கு மருமகனா கொண்டு வரப் பார்த்தன்.ம்ஹும் எனிவே கங்ராஜ்லேசன் . என்றவர் சிந்துவிடம் திரும்பி " நீ கொடுத்து வேச்சவ மா " என்று கூறிச் செல்ல " நான் எத கொடுத்து வச்சன் என்று மனதுக்குள் கவுண்டர் அடித்தாள்"
 சிந்து


       சிறிது நேரத்தில் மைக்குடன் வந்த அஜய் மித்ரனை பாடுமாறு வற்புறுத்த 

      மித்ரனும் மைக்குடன் மேடை இறங்கினான்

      சிந்துவோ " வந்தவங்கள பாடியே விரட்ட போறான் " என்று நினைத்து நிற்க

*உயிரைத் தொழைத்தேன் அட உன்னில் தானோ*

*இது தான் காணும் கணவோ நிஜமோ*

           என்று மித்ரன் பாட அவன் குரலில் ஈர்க்கப் பட்ட சிந்து அவனையே விழி அகலாது பார்த்திருக்க

      மித்ரனும் அவளது பார்வையை உணர்ந்து அவளைப் பார்த்தவாறே.

மீண்டும் உன்னை காணும் வரமே வேண்டும் எனக்கே மனம் ஏங்குதே.

விழியில் விழுந்தால் ஆ ஆ என்னில் எனதாய் நானே இல்லை.

என்னம் முழுதும் நீதானே என் கண்ணே.

உயிரைத் தொழைத்தேன் அட உன்னில் தானோ மீண்டும் உன்னை காணும் வரமே எனக்கே மனம் ஏங்குதே.

    என்று பாட போலீஸ் என்ற வெறுப்பை தான்டி மித்ரன் மீது கொண்ட காதல் மேல் எழ கண்களில் கண்ணீருடன் அவனை ஓடிச் சென்று அனைத்து கொண்டாள்.       அங்கு வந்திருந்த இள வட்டங்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்ய
           
          ரிஷப்ஷனும் இரவு பத்து மணிக்கு இனிதே நிறைவுற்றது.

   
    

     மித்ரன் அறையில்...

       " ஏன்டி என்ன கட்டி பிடிச்ச" என்று மித்ரன் போலிக் கோபம் காட்ட 

      அவளுக்கும் இனி தனது காதலை மறைத்து வைக்க முடியாது என்று தோன்ற 

" ஆமாண்டா உன்னை காதலிச்சு தொழச்சிட்டன் . இப்போ என்னாங்குற"

மித்ரன் " இது எப்போ இருந்து"

சிந்து " இப்பவும் சொல்றேன் எனக்கு போலீஸ் பிடிக்காது தான். ஆனால் உன்னை போலீஸ் னு தெரியமலையே மூனு வருசமா காதலிச்சுட்டேன் ."

மித்ரனுக்கு இது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

அவளை கட்டியனைக்க கூறிய கரங்களை கட்டுப் படுத்தியவாறு அவள் கூறி முடிக்கும் வரை காத்திருந்தான்.

மித்ரன் : " மூனு வருசமாவ"

சிந்து: " ஆமாண்டா, என்று அன்று நடைந்தவற்றை கூற ஆரம்பித்தாள்.

   மூன்று வருடத்திற்கு முன்பு.....

         அன்று இரவு சிந்துஜாவும் இன்னும் சில மாணவிகளும் பர்த் டே பாட்டி முடித்து விட்டு பஸ்ஸில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது மழையும் அதிகமாக பெய்து கொண்டிருக்க இவர்கள் வந்த பஸ்ஸும் பிரேக் டவுன் அகிவிட சிந்துஜா தங்கியிருந்த அபார்ட்மெண்ட் இரு ஸ்டாப் தள்ளி இருந்ததால் சிந்து தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

         மழையும் அதிகமாக பெய்து கொண்டிருக்க இவளும் நிற்காமல் வேகமாக நடக்க பின்னால் வந்த காமுகன் ஒருவன் அவள் இடையை பற்றி தூக்க முற்பட  
அவ்வழியே பைக்கில் வந்த மித்ரன் அவனை அடித்து விட்டு " பொண்ணுங்க இந்த நேரத்தில் தனியா வரக்கூடாது என்ற பேஸிக் அறிவு கூட இல்லை, ஸ்டுப்பிட் வுமன் " என்று திட்டினான்.

      அப்போது சிந்துஜா முகத்தை சோலால் மூடியிருந்த படியால் அவள் முகம் இவனுக்கு தெரியவில்லை.

    ஆனால் பைக் வெளிச்சத்தில் அவன் முகம் நன்றாகவே இவளுக்கு தெரிந்தது.

           பின்னர் சிந்துஜா முன்னே செல்ல அவளை பின் தொடர்ந்து சென்ற மித்ரன் அவள் பாதுகாப்பாக வீட்டை அடைந்ததும் அங்கிருந்து சென்றான்.

               இதைக் கூறி முடித்த சிந்து " அப்புறம் நீங்க எப்படி எனக்குள்ள வந்தீங்க எதுவும் தெரியவில்லை. உங்கள எங்க காண்கிறேனோ அங்க எல்லாம் உங்கள உங்களுக்கு தெரியாம ஃபோட்டோ எடுத்துப் பேன்.   

அதுக்கு அப்புறம் இரண்டு வருசம் நீங்க என் கண்ணுல படவே இல்ல.

    பிறகு அன்னைக்கு பஸ் ஸ்டாப் ல தான் பார்த்தேன்.

      நீங்க போலீஸ் னு தெரிஞ்சதும் என் காதல எனக்குள்ளயே மறச்சிட்டன் "
                என்று கூற அவளை பின்னிருந்து அனைத்த மித்ரன் "மூனு வருசமா விரட்டி விரட்டி காதலிச்சுருக்க என்ன இது அப்பவே தெரிஞ்சி இருப்பி உன்ன முன்னாடியே தூக்கிட்டு வந்துருப்பன் " என்று சொல்ல

       அவனை விட்டு விலகி நின்றவள் " அதா சொல்லிட்டியடா எவன் கூட வாச்சும் போனு "

" ஏன்டி நீ சொல்லும் போது நான் சொன்னா தப்பா "என்று கேட்டவன்.

    " உனக்கு போலீஸ் புடிக்காதே அப்ப என்ன பன்னலாம் "

 " அப்போ உனக்கு என்ன புடிக்குமாடா ஈபில்டவர் "

    மித்ரன்" எனக்கு இந்த உலகத்துலேயே எது ரொம்ப புடிக்கும் தெரியுமா?"

சிந்து" போலீஸ் ஜாப் தானே "

மித்ரன் சிந்துஜாவின் முகத்தை தனது கைகளில் ஏந்தி " அது செகன்ட், பஸ்ட் இந்த தேவதையோட விழிகள் தான் " என்று கூறி அவளது நெற்றியில் இதழ் ஒற்றி எடுத்தான்.

       சிந்துவும்" சரி நீ வெளியே காவலனா இரு எனக்கு காதலனா இரு ஓகேவா "

     " டபுள் ஓகே கண்மணி " என்றவன் அவளது செவ்விதழில் மென்மையாக முத்தமிட்டு அவளை கட்டியனைத்த படி கண்ணயர்ந்தான்.

            அவளும் காத்திருந்த காதல் கை கூடிய மகிழ்ச்சியில் அவனது கை வளைவில் சுகமாக உறங்கிப் போனாள்.

              விழிக்கும்....

*கனவுகளின் இளவரசி* RS musha

✍️ Muhsina saththar.

No comments