Breaking News

தேவதையின் விழிகள் 21...விழிகள்  


       சாதாரணமாக தலை நிமிர்ந்து பார்த்த மித்ரன் சிவந்த கண்களுடன் 

உடல் நடுங்க நின்றிருந்த சிந்துஜாவைப் பார்த்து பதட்டமானான் .


    இருக்கையில் இருந்து எழுந்து அவளருகில் சென்றவன்


" சிந்து என்னாச்சு ஏன் இப்படி பயந்து போன மாதிரி இருக்க"  என்று கேட்கவும்


சிந்துஜா : "  அது    அது" அவளது உதடுகள் தந்தி அடிக்க


        அவளை அமைதிப் படுத்தும் பொருட்டு டேபிளில் இருந்த நீரை எடுத்து அவளிடம்" இத  குடி"

என்றதும்


     அந்த நேரம் அது அவளுக்கு தேவையாக இருக்கவும் மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிப் பருகினாள்.


          அந்த நீரும் அவளது நடுக்கத்தில் ஆடை முழுவதும் சிந்த  


       அவளைக் கவனித்த மித்ரன் " ஏதோ பெரிதாக நடந்துள்ளதாக ஊகித்துக் கொண்டான்.


           அவளைக் கைப் பிடித்து அழைத்து சென்று தனது இருக்கையில் அமர்த்தியவன்  டேபிளில் சாய்ந்து நின்று " எதுவானாலும் அவளே சொல்லட்டும்" என்று அவளையே பார்த்திருந்தான்.


            சில நிமிடங்களில் ரிலாக்ஸ் ஆகிய சிந்துவும் " எனக்கு போலீஸ் கிட்ட எதுவும் சொல்ல முடியாது " என்றதும்


          பல்லை" நற  நற"   வென கடித்த மித்ரன் தலையில் அனிந்து இருந்த தொப்பியை டேபிளில் கலட்டி வைத்து விட்டு" இப்ப ஒன் புருசன் கிட்ட சொல்றியா " என்றதும்


சிந்துஜா: "  மார்னிங் பத்து மணிக்கு நானும் அத்தையும் கோயிலுக்கு போனோம்.  என்று அங்கு நடந்தவற்றை கூற ஆரம்பித்தாள்.


கோயிலில்...


          ராஜி சந்நிதானத்தில் இருக்க சிந்துஜா அர்ச்சனை தட்டு வாங்க தெருக் கடைக்கு சென்றாள்.


            திடீரென வந்த மூன்று தடியர்கள்  அவள் மேனியோடு ஒட்டி உரசியவாறே  பொருட்கள் வாங்குவது போல் நின்று கொன்டனர்.


           உடல் நெளிந்து நின்ற சிந்து  அர்ச்சனை தட்டுக்களை வாங்கிக் கொண்டு விறு விறு வென கோயிலுக்கு சென்றாள்.


         ராஜி : "  என்னம்மா இப்படி வியர்த்து போய் வந்திருக்க "


சிந்து " ஒன்னுமில்லை அத்தை வெயில் அதிகம்" என்று அர்ச்சகரிடம் அர்ச்சனை தட்டை நீட்டினாள்.


               பூஜை முடிய அர்ச்சனை தட்டை பெற்ற ராஜி " அம்மாடி வா போகலாம்  " என்று முன்னே செல்ல


   சிந்து : " அத்தை நீங்க போங்க நான் கொஞ்ச நேரம் இப்படியே ரிலாக்ஸ் ஆ இருந்து வரேன் "


    " சரி மா ஆனா சீக்கிரம் வந்துடு " என்று கூறி சென்றாள் ராஜி


               சிறிது நேரம் அங்கிருந்து சிந்துஜா வெளியே வரவும் அம் மூன்று தடியர்கள் அவளை வேனில் ஏற்றி   சென்னை சிட்டி முழுக்க சுற்றிய வர்கள்  போலீஸ் ஸ்டேஷனில் ஃபேஷன் வாசலில் அவளை தள்ளி விட்டு 

சென்றனர்.


           இதை கூறிய சிந்துஜா பயத்தில் ஆழுக 


           இதை கேட்ட மித்ரனின் கை நரம்புகள் கோபத்தில் புடைத்தெழுந்தது.


         இது தன்னை திசை திருப்ப எடுக்கப் பட்ட முயற்சி  என்று அறிந்தவன் 

 " இப்போ வேகத்தை விட விவேகம் முக்கியம்" என்று என்னிய மித்ரன்


    சிந்துஜாவின் கண்ணீரை துடைத்து அவளை தோளோடு சேர்த்து அனைத்தவாறு ஸ்டேஷனில் இருந்து வெளியேறினான்.


           ஸ்டேஷனில் மித்ரனுக்கு கீழ் பனி புரிபவர்கள் " இது நம்ம மித்ரன் சாரா இது ஒரு பொண்ணோட இவ்வளவு க்ளோஸா போரது" என்று வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டு இருந்தனர்.


          குருமூர்த்தி " என்னடா நான் சொன்ன மாதிரி செஞ்சிட்டீங்களா"


" ஐயா கச்சிதமா செஞ்சிட்டம்  "


குருமூர்த்தி "  டேய் அவன சாதாரணமா எட போட்ர வேணாம். அவன் பதுங்கி இருந்து தான் பாய்வான். சரி நான் சொன்ன இரண்டு பேர் டீடெயில்ஸ் குவிக்கா கலெக்ட் பன்னுங்க " என்று இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக் கொண்டார்.


                  விழிக்கும்...


✍️  Muhsina saththar.

கனவுகளின் இளவரசி Rs Musha

நெல்லியகம பலாகல

No comments