Breaking News

தேவதையின் விழிகள் 20...


 

விழிகள்  


          போலீஸ் ஸ்டேஷனில் நுழைந்த மித்ரன் நேராக தன் அறைக்கு சென்று சேகரித்து வைத்த குருமூர்த்தி பற்றிய தகவல்களில் மூழ்கிப் போனான்.


மினிஸ்டர் வீட்டில்..


      குருமூர்த்தி யின் முன்னால் கை கட்டி நின்றவன் " சார் நான் நெற்றிக் கண் டிடெக்டிவ் ஏஜன்சில இருந்து வர்ரேன். நீங்க டூ டேய்ஸ் முன்னாடி ஒருத்தர பத்தின இன்பர்மேஷன் கலெக்ட் பன்ன சொல்லிருந்தீங்க."


குருமூர்த்தி : " ஹா தெரியும் சொல்லுயா"


" சார் அவங்க நேம் ராஜேஸ்வரி, எட்டு வருசத்துக்கு முன்னாடி தான் சென்னையில செட்டில் ஆயிருங்காங்க. அதுக்கு முன்னாடி ஊட்டில தங்கி இருந்துருக்காங்க "


குருமூர்த்தி : " யோ அவ இப்ப யார் கூட இருக்கா. தேவையில்லாத பேசிட்டு இருக்க"


" இவனுக்கெல்லாம்  இன்பர்மேஷன் கலெக்ட் பன்ன என்ன செருப்பாலயே அடிக்கனும் " என்று மனதில் நினைத்து கொன்டவன் வெளியே பவ்யமாக " சார் அவங்க அவங்களோட இரண்டு பையன் கூட தங்கி இருக்காங்க "


 குருமூர்த்தி : " அவ பையன் பாரின் ல இல்லையா " 


" நோ சார் "


 குருமூர்த்தி : "  அவனுங்க டீடெயில்ஸ் "


" சார் இவ்வளவு தான் கலெக்ட் பன்ன முடிஞ்சது "


குருமூர்த்தி : " நீ எல்லாம் என்ன ஏஜன்சி நடத்தற , தேவையான தகவல்களை விட்டுட்டு சல்லிக்காசுக்கு பிரயோஜனம் இல்லாத தகவல சொல்ற  போடா "


          இவ்வாறு சொன்னது தான் தாமதம்  விட்டால் போதும் என்று வெளியில் ஓடினான்.


      வெளியில் வந்தவன் தனது போனில் யாருக்கோ அழைத்து " சார் நீங்க சொல்ல சொன்னத அப்படியே சொல்லிட்டேன்"

என்றதும்


மறுமுனையில் என்ன சொல்லப் பட்டதோ  சிறிதாக புன்னகைத்தவன்  தனது பல்சரை எடுத்து கொண்டு கிளம்பி விட்டான். 


             போலீஸ் ஸ்டேஷனில் லட்டியால் மேசையை தட்டி யோசித்து கொண்டு இருந்த மித்ரன் "  எதுக்கு சாந்தியோட டேட் ரிப்போர்ட் இன்னும் கிடைக்கவில்லை. இது இப்படி லேட் ஆகுறத பார்க்க எதோ பெரிய இடம் சம்பந்தப் பட்டிருக்கும். ஏன் அது குருமூர்த்தி யா இருக்க கூடாது. நாளைக்கு நம்மளே நேர்ல போய் கேட்டு பார்க்கலாம்" என்று அவன் சிந்தனை ஓடிக் கொண்டிருக்க


     அவனது சிந்தனையை கலைக்கும் முகமாக  கதவை தட்டிக் கொண்டு வந்த ராஜேஷ் 


" சார் உங்கள தேடி ஒரு பொண்ணு வந்துருக்காங்க "


மித்ரன் நேரத்தை பார்க்க  மணி மூன்றை நெருங்கி கொண்டிருந்தது.


மித்ரன் " சரி வர சொல்லுங்க"


         " ஓகே சார்" என்று ராஜேஷ் வெளியேறியதும்


   தனது இருக்கையில் அமர்ந்த மித்ரன் கேஸ் பைலை பார்வையிட்டான்.


  சில நிமிடங்களில் ஒரு பெண்  உள்ளே வர  சாதரணமாக தலை நிமிர்ந்து பார்த்தவனின் முன்னால் சிந்துஜா கண்கள் சிவந்து உடல் நடுங்க நின்றிருந்தாள்.


                 விழிக்கும்..


✍️  Muhsina saththar.

கனவுகளின் இளவரசி RS musha

நெல்லியகம பலாகல.

No comments