Breaking News

தேவதையின் விழிகள் 19...

விழிகள்   


         விடியற் காலை நான்கு மணிக்கே கண் விழிப்பாள் என்று எதிர் பாராத மித்ரன் ரவியை தோளில் சுமந்தவாறே அதிர்ந்து நின்றான்.


        நொடியில் சுதாரித்தவன் ரவியை கதவின் அடியில் சாத்தி அமர வைத்து விட்டு "ஐயோ  பாத்துருப்பாளா"

என்று நினைத்தவன் அவளிடமே கேட்போம் என்று   


" என்ன இப்பவே எந்திரிச்சிட்ட"


சிந்து: " புது இடம் தூக்கம் வரல. இப்பதான் எந்திரிச்சன்.  நீங்க எங்க போயிருந்தீங்க."

என்றது தான் தாமதம்.


இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த மூச்சை" உப் " என்று வெளியேற்றியவன் " பாத்ரூம் போய் இருந்தான்.  என்னை என் மேல உரிமை எடுத்துக் குறியா.கேள்வி எல்லாம் கேக்குற "


சிந்து" ஆமா பொல்லாத உரிமை, நீங்களே தந்தாலும் நான் எடுத்துக்க மாட்டேன். ஐ  ஹேட் போலீஸ்."


    " அப்ப என்ன ஏ பாத்துட்டு இருக்க "

   

சிந்து: " ஆமா இவர் முகத்துல மன்மதக் கலை தாண்டவமாடுது நாங்க பாத்திருக்க" என்று கழுத்தை தோள் பட்டையில் இடித்துக் கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டாள்.


    " ஐயோ வந்த இரண்டாவது நாளே நாக்க வெளியே தள்ள வைக்கிறா , எப்படியோ இப்ப தப்பிச்சம் என்று நினைத்த மித்ரன் ரவியை தூக்கி கொண்டு வீட்டின் பின்புறம் சென்றான்.


     ருத்ரன்: " என்னடா இவ்வளவு நேரம் "


மித்ரன்: " முதல்ல இவன புடிடா எருமை கணம் கணக்குறான் "


  ரவியை மித்ரனும் ருத்ரனும் ஜீப்பில் கிடத்தியதும் 


ருத்ரன் : " என்ன மச்சான் நேத்து நைட் அமோகமா முடிஞ்சதா"


மித்ரன்: " செருப்பால் அடிப்பன் நாயே அவளே போலீஸ் னா முறப் பொண்ணு ரேஞ்சுக்கு முறச்சிட்டு திரியுரா "


ருத்ரன்" சரி இவன இப்ப எதுக்கு இடம் மாத்தனும் "


" இவன் இங்க இருந்தா எப்படியும் ஒரு நாள் மாட்டிப்பன் டா . சரி நீ கிளம்பு ரொம்ப நேரம் இருந்தா யாருக்காவது டவுட் வர சான்ஸ் இருக்கு " என்று சிந்துவை

மனதில் வைத்து கூறினான்.


   சிந்து குளித்து வரவும் மித்ரன் அறைக்குள் வரவும் நேரம் சரியாக இருந்தது.


            எப்போதும் போல் அவளது கண்கள் அவனை மயக்க அவளது ஈரம் படிந்த உதடுகள் பித்தம் கொள்ள செய்ய அவளருகில் நெருங்கி சென்று அவளது நெற்றியில் இதழ் பதித்தவன் டவலை எடுத்து கொண்டு பாத்ரூமிற்குள் மறைந்தான் .


          அவன் முத்தம் பதித்ததில் அதிர்ந்து நின்றவள் பொருக்கி போலீஸ் என்று வாய்க்குள் திட்டிக் கொன்டாலும் 


       அவன் உதட்டின் ஈரம் தனது நெற்றியில் இருப்பதை உணர்ந்து 

வெட்கத்தில் முகம் செவ்வானமாய் சிவக்க அறையை விட்டு வெளியே ஓடினாள்.


 ஹாலில் சுஜாவும் அஜயும் பேசிக் கொண்டு இருக்க லட்சுயும் ராஜியும் சமையல் கட்டில் சமைத்துக் கொண்டிருந்தனர்.


    சிந்துஜா சமையலறைக்குள் நுழைய  அவள் கையில் காபி கப்பை கொடுத்த ராஜி " இத போய் மித்ரனுக்கு கொடுத்துட்டு வா மா ,  ஈவ்னிங் ரிஷப்ஸன் இருக்கு அவன அப்படியே வீட்லயே இருக்க சொல்லு "


சிந்து" சரிங்க அத்தை" என்று கூறி விட்டு அறைக்குள் நுழைய  மித்ரன் காகி உடையில்    தலை சீவிக் கொண்டிருந்தான். 


        " ஐயோ என் ஈபில் டவர் என்ன அழகு" என்று உள்ளுக்குள் ரசித்தவள் " ச்சை போலீஸ் காரன போய்  ஜொள்ளு விடற" என்று தனக்கு தானே திட்டிக் கொண்டு    அவனுக்கு பின்னால் சென்று "காபி" என்று நீட்ட 


 அதை வாங்கி ஓரு சிப் பருகியவன்  " சரி போய்டு வாரேன் " என்று வெளியில் செல்ல


" ஒரு நிமிடம் இருங்க" என்ற சிந்துவின் குரலை காதில் வாங்காமல் சென்றான்.


      அவன் வெளியே சென்று ஜீப்பை ஸ்டார்ட் செய்ய 


ராஜி : " இன்னைக்கு எங்கேயும் போக வேண்டாம்."


மித்ரன்: " ராஜிம்மா இந்த ஒரு வாரம் ஒழுங்கா ஸ்டேஷன் கூட போகல.ஒரு முக்கியமான கேஸ் பிளீஸ் மா "


ராஜி: " ஈவ்னிங் ரிஷப்ஸன் இருக்கு"


மித்ரன்: " ஈவ்னிங் கு முதல் வந்துருவேன் பாய் மாம்"

என்று கூறியவன் சிந்துவை பார்த்து கண் சிமிட்டி விட்டு

ஜீப்பை கிளப்பிக் கொண்டு சென்றான்.

         

                             விழிக்கும்....


✍️   Muhsina saththar.

கனவுகளின் இளவரசி Rs Musha

நெல்லியகம பலாகல

No comments