தேவதையின் விழிகள் 18...
விழிகள்
மனம் படபடக்க கையில் பால் சொம்பு டன் சிந்துஜா மித்ரன் அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டாள்.
கதவை தாழிட்டவள் திரும்பிப் பார்க்க பெட்டில் அமர்ந்திருந்த மித்ரன் லேப்டாப்பில் ஏதோ செய்து கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்தவாறே வந்த சிந்துஜா அருகில் உள்ள டேபிளில் பால் சொம்பை வைக்க அந்த சத்தத்தில் அவளை நிமிர்ந்து பார்த்தான் மித்ரன்.
பால் சொம்பை வைத்து விட்டு மித்ரன் அருகில் வர
மித்ரன் ( m.voice) " என்ன பக்கத்துல வர்ரா. காலையில வாய் கிழிய பேசுனாளே. ஓ ஒரு வேலை கால்ல விழுறதுக்கா இருக்கும்" என்று நினைத்து லேப்டாப் ஐ மூடி ஒரு ஓரத்தில் வைத்தவன் சிந்துவை நோக்கி கால்களை நீட்டினான்.
அவனது கால்களை பார்த்த சிந்துஜா" என்ன " என்பது போல் அவனைப் பார்க்க
அவள் பார்வையை புரிந்து கொண்டான் " கால்ல விழுறதுக்கு தானே பக்கத்தில் வர"
சிந்து" நான் போலீஸ் காரன தவிர யார் கால்லையும் விழுவன். நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் "
மித்ரன் " என்ன"
சிந்துஜா " எனக்கு போலீஸ் புடிக்காது .தாலி கட்டின உரிமையில பக்கத்துல வர்ர வேலை வச்சுக்க கூடாது "
மித்ரன் " நீ பெரிய உலக அழகி உன்கிட்ட மயங்கப் போறம். பேசாம போய் படுடி "
சிந்து" டி யா"
மித்ரன் " ஆமா டி " டி யை அழுத்திக் கூறினான்.
அவள் அவனை தீயாய் முறைக்க அவனோ அவளை கண்டு கொள்ளாமல் கண் மூடிப் படுத்துக் கொண்டான்.
சிந்துஜா அவனையே விடாமல் முறைக்க ஒற்றை கண் திறந்து அவளைப் பார்த்த மித்ரன்" மாமன இன்னும் எவ்வளவு நேரத்துக்கு சைட் அடிக்கிறதா உத்தேசம் " என்று கேட்க
சிந்துஜா " நம்ம முறைச்சி பார்த்தது சைட் அடிச்ச போலவா இருக்கு என்று நினைக்க
அவளது மனசாட்சி " நீ அவன கள்ளத்தனமா சைட் அடிச்சத கண்டுட்டான் போல " குரல் எழுப்ப
சிந்துஜா உடனே திரும்பி கண்ணாடியை பார்த்தாள்.
அவளது செய்கையை பார்த்த மித்ரன் " பக்கென" சிரித்து விட
சிந்துஜா அவனை மீண்டும் முறைத்து விட்டு அவன் மறு புறம் சென்று படுத்து விட்டாள்.
அவள் அப்படியே உறங்கி போக அரை மணிநேரம் கழித்து அவள் புறம் திரும்பிய மித்ரன் " இந்த செல்ல ராட்சசிய புரிஞ்சுக்க முடியலயே என்ன புடிக்கலன்டு சொல்லுறா . ஆனால் என் பக்கத்தில் வந்து படுத்திருக்கா"
அவள் அசந்து உறங்கியதை உறுதி செய்தவன் அவள் அருகில் நெருங்கி " என்ன புடிக்கலயா கண்மணி" என்று அவளது காதுகளில் கிசுகிசுத்தான்.
தூக்க கலக்கத்தில் இருந்த சிந்து " உன்னை புடிக்கும் டா ஈபில்டவர் போலீஸ் புடிக்காது." என்று உலறிவிட்டு திரும்பி படுத்து விட்டாள்.
" ஆக ராட்சசிக்கு என்ன புடிக்கும், போலீஸ் மித்ரன புடிக்காது." என்று நினைத்தவன்
" உனக்கு போலீஸ் மித்ரன கூடிய சீக்கிரமே புடிக்க வைக்கிறான் . அதுக்கு அப்புறம் என் காதல உன் கண்ணப் பார்த்து சொல்லுறேன் " என்று வாய் விட்டே கூறியவன் அவளது ஆப்பிள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு விலகினான்.
நீயே வாழ்க்கை என்பேன் இனி வாழும் நாட்கள் எல்லாம் நீயே போதும் என்பேன்
உயிரே என் உலகமே நீயே காதல் என்பேன் இனி ஜீவன் வாழும் உன்னால்
நீயே வேண்டும் என்பேன் உயிரே என் உலகமே
சிரிக்கிறாளோ கொஞ்சம் சிதைகிறேன் நடக்கிறாளோ பின்னால் அழைக்கிறேன்.
கதிரவன் தன் காதலியை காண வரும் முன்னரே கண் விழித்த மித்ரன் சிந்துஜாவின் நெற்றியில் முத்தமிட்டு தனது ரகசிய அறையில் நுழைந்து கொண்டான்.
அங்கு இருட்டறையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் தூங்கிக் கொண்டிருந்த ரவியை பார்த்தவன்
ருத்ரனுக்கு அழைத்து " டேய் இவன் இங்க இருக்குறது சேப் இல்ல டா .நீ வண்டியை எங்க வீட்டு பின்னாடி ஸ்டாப் பன்னி வை " என்று கூறி போனை கட் செய்தான்.
ரவியை தோளில் தூக்கியவாறு மித்ரன் ரகசிய அறையில் இருந்து வெளியே வர சிந்துஜா கட்டிலில் அமர்ந்திருந்தாள்.
விடியற் காலை நான்கு மணிக்கே கண் விழிப்பாள் என்று எதிர் பாராத மித்ரன் ரவியை தோளில் சுமந்தவாறே அதிர்ந்து நின்றான்.
விழிக்கும்....
✍️ Muhsina saththar.
கனவுகளின் இளவரசி RS musha
நெல்லியகம பலாகல.
No comments