Breaking News

தேவதையின் விழிகள் 17...

 

விழிகள் 


              லட்சுமியும்  சுஜாவும் சிந்துஜாவை நடுவில் விட்டவாறு படியேற சிந்துஜாவும் அவன் செலக்ட் செய்த பட்டுப் புடவையில்  சரசரக்க, கழுத்திலும் கைகளிலும் தங்க ஆபரணங்கள் ஜொலிக்க  தேவலோக சுந்தரியாக படியேறிக் கொண்டிருந்தாள்.


  அவளை இரு ஜோடிக் கண்கள் பார்த்து கொண்டிருந்தது.


     ஒரு ஜோடி கண்கள் ரசனையாகவும், மறு ஜோடி கண்கள் குரூரமாகவும்


           சில நாழிகையானதும் ஹோம குண்டத்தின் முன் அமர்ந்திருந்த அய்யர் " மாப்பிள்ளையை அழச்சி வாங்கோ" என்று குரல் கொடுக்க 

அஜய் மித்ரனின் அருகில் சென்றான்.


          சற்று தள்ளி இருக்கையில் வேஷ்டி சட்டையில் கம்பீரமாக இருந்த மித்ரனின் காதுகளில் அய்யரின் வார்த்தைகள் தெளிவாக கேட்டாலும் கையில் இருந்த போனில் சின் சீரியஸாக கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தான்.


அஜய்: " அண்ணா, நீ போலீஸ் தானே"


போனில் கண்களை பதித்தவாறு "  அதுல உனக்கேன்ன டவுட்"


அஜய் " உன்ன பார்த்த அப்படி தெரியல"


அஜயை ஏறிட்டுப் பார்த்த மித்ரன் " ஏன்டா போலீஸ்னா கேம்ஸ் விளையாட கூடாத வா போகலாம்" என்று மணவறையில் போய் அமர்ந்தான்.


அஜயோ" உனக்கு சிந்து தான் டா கரெக்ட் " என்று நினைத்து பிற வேலைகளை கவனிக்க சென்றான்.


           சில நிமிடங்களில் சிந்துவும் சென்று மித்ரன் அருகே அமர அய்யர் மந்திரம் சொல்ல மங்கல வாத்தியங்கள் முழங்க  மித்ரனும் தாலியை அவளது கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தனது சரிபாதி ஆக்கிக் கொண்டான்.


சிந்துவின் நெற்றி வகுட்டில் குங்குமம் இட்ட மித்ரன் அவளது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு" இந்த நொடியிருந்து வாழ்க்கையில என்ன கஷ்டம் வந்தாலும் உன்னோட இருப்பேன்." என்று வாக்குறுதி அளித்தான்.


          அந்த நொடி அவன் ஒரு போலிஸ் காரன் என்பது சிந்துஜாவிற்கு மறந்து போக மித்ரனின் கண்களை காதலாகப் பார்த்தாள்.


        இதை கண்ட பெரியவர்கள் மனது நிறைந்து போக 


அஜயோ : " ம்ஹூம்" பெரு மூச்சு விட்டு " "என் செல்லம் இருந்தா இத விட அதிகமாவே ரொமான்ஸ் பன்னிருப்பன் . போலீஸ் காரனுக்கு ரொமான்ஸ் சுட்டு போட்டாலும் வராது போல " என்று நினைத்து கொண்டான்.

 

            சிந்துஜாவும் மித்ரனும் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்


         அப்போது வந்த குருமூர்த்தி " என்னடா அதுக்குள்ள கல்யாணம் பண்ணிக்கிட்டான். இது தான் அவனோட வாழ்க்கையில் கடைசி சந்தோஷமா இருக்கும் "  என்று கூறி கன்னை கையில் எடுத்தார்.


         அங்கு அப்போது இருபது வருடங்களுக்கு முன்னர் அவரை விட்டு விலகிச் சென்ற அவர் மனைவி ஈஸ்வரி நின்றிருந்தாள்.


           அதில் அதிர்ந்து நின்றவர் மறைவாக சென்று ஈஸ்வரியின் கையை யாரும் அறியாதவாறு பிடித்து இழுத்து " எங்கடி என் வாரிசு"


ஈஸ்வரி :"  அதான் விட்டு போய்டியே மறுபடி என்ன "


குருமூர்த்தி: " அவங்க எனக்கு வேனும் என் ராஜ்ஜியத்தை ஆள"


ஈஸ்வரி : " அது அவங்க இப்ப இங்க இல்லை பாரின் அனுப்பிட்டன் ."


              என்று கூறி அங்கிருந்து பயத்துடனே நகர்ந்து சென்றாள்.


     குரு மூர்த்தியோ " யோ போலீஸு என் பையன வச்சே உன் கண்ல விரல விட்டு ஆட்டுறேன் டா " என்று மனதினில் சூளுரைத்து கொண்டார். 


        மித்ரன் வீட்டில்....


          ராஜி ஆரத்தி எடுக்க  மித்ரன் சிந்துஜாவின் கைகளை பற்றியவாறே வீட்டுக்குள் சென்றான்.


            அவனின் மார்பளவு இருந்த சிந்து மித்ரனை நெருங்கி " என்ன சார் லவ் பன்றீங்கள"


மித்ரன்: " உன்னப் போல ராட்சசிய எவனும் லவ் பன்ன மாட்டான்.  எங்க அம்மாவுக்காக தான் உன் கைய புடிச்சு இருக்கன்" என்று வெளியில் கூறினாலும் உள்ளுக்குள் " ஐ லவ் யூ கண்மணி "  என்று கொஞ்சிக் கொண்டான்.


          அவனது வார்த்தைகள் அவள் மனதை வாள் கொண்டு அறுக்க அதன் பின்னர் அவள் வாய் திறக்கவில்லை.


              பால் பழம் சாப்பிட்டு மித்ரன் அவன் அறையில் நுழைந்து கொண்டான்.


         சிந்துவையும் அவள் குடும்பத்தையும் கெஸ்ட் ரூமில் விட்ட ராஜி அஜயுடன் பிற வேலைகளை கவனிக்க சென்றாள்.


              இரவு எட்டு மணிக்கு ராஜியும் லட்சுமியும் சிந்துவை ரெடி பன்னி மித்ரனின் அறை வாசலில் விட 


கையில் பால் சொம்பு டன் மனம படபடக்க கால்கள் பின்னியவாறே மித்ரன் அறைக்குள் நுழைந்து கொண்டாள் சிந்துஜா .


               விழிக்கும்...


✍️ Muhsina saththar.

கனவுகளின் இளவரசி RS musha

நெல்லியகம பலாகல.

No comments