Breaking News

தேவதையின் விழிகள் 16...


 

விழிகள்


           மித்ரன் இவர்களை கடைக்கு அழைத்து வர அதற்கு முன்னமே ராஜியும் அஜயும் அவர்ளுக்காக  அங்கு காத்திருந்தனர்.


           லட்சுமியை அழைத்து கொண்டு ராஜி முன்னரே கடைக்குள் நுழைந்து கொள்ள


 சுஜா மித்ரனிடம் " மாமா நீங்க தான் எனக்கு ட்ரஸ் வாங்கி தரனும்"


மித்ரன்: " உனக்கு புடிச்சத வாங்கிக்கோ"


அஜய்: "  அப்ப எனக்கு "


மித்ரன்: " நீ எவ்வளவு எடுத்தாலும் என் பர்ஸ் தாங்கும் வாடா "


சுஜா :" அக்கா நீயும் கேளு "


சிந்து :" போலீஸ் காரன் பிராடு பன்னி சம்பாதிச்ச பணத்துல எனக்கு எதுவும் வேனாம் "


" செலவு மிச்சம் " என்ற மித்ரன் அஜய், சுஜாவுடன் கடைக்குள் நுழைந்து கொண்டான்.


மித்ரனின் வார்த்தைகள் சிந்துவுக்கு ஏமாற்றமாக இருந்தது.


அவள் மனசாட்சி: " நீ தானே சொன்ன"


சிந்து : " நான் சொன்னா போர்ஸ் பன்ன மாட்டாரா"


மனசாட்சி : " உனக்கு தான் போலீஸ் புடிக்காதே"


சிந்து " ஆனா எனக்கு அவர புடிக்கும்.நீ அடங்கு , ஆ ஊனா பஞ்சாயத்துக்கு வந்துடறது" என்று மனசாட்சிக்கு ஒரு கொட்டு வைத்தவள் கடைக்குள் சென்றாள்.

     பெண்கள் அனைவரும் புடவை பிரிவிற்கு செல்ல மித்ரன், அஜய் ஆண்கள் பிரிவிற்கு சென்றனர்.


       மித்ரன் வேஷ்டி சட்டையும், வரவேற்புக்கு நீ ல நிறத்தில் கோட் சூட் எடுத்து அஜய்க்கும் எடுத்து விட்டு வெளியே வர


       அவர்கள் அங்கு ஒரு புடவையை கூட தேர்ந்தெடுக்காமல் பட்டுப் புடவைகளை இழுத்துப் போட்டு கொண்டு இருந்தனர்


மித்ரன் : " இன்னும் எவ்வளவு நேரம்"


ராஜி: " எங்கள் எல்லாருக்கும் எடுத்துட்டம் . கல்யாண பொண்ணுக்கு தான் எதையும் பிடிக்க மாட்டிங்கிது."


சுஜா‌: " உங்க பொண்டாட்டிக்கு நீங்களே செலக்ட் பன்னுங்க."


 " சரி".  என்ற மித்ரன் சிந்துஜாவின் அருகில் சென்று அங்குள்ள புடவைகளை பொறுமையா பார்த்தான்.


    சில நிமிடங்களில் மெரூன் கலரில் தங்க நிற ஜரிகை வைத்த பட்டுப் புடவையைத் தேர்ந்தெடுத்தான் .


        அதன் விலை இருபதாயிரமாக இருக்க 


லட்சுமி :" தம்பி இது வேண்டாமே , விலை அதிகம்."


மித்ரன்: " அத்தை நீங்க இதுல தலையிடாங்க , அவள விட இது எல்லாம் ரொம்ப கம்மி தான்"

 

மித்ரன் பேச்சில் சிந்துவின் கண்கள் கலங்கிப் போக அதை யாரும் அறியா வண்ணம் மறைத்துக் கொண்டாள். 


        பின்னர் அனைத்து அடைகளுக்கும் பில் செய்து விட்டு நகை கடைக்குள் நுழைந்து கொண்டனர்.


       அங்கும் தன்னவளுக்காக மித்ரனே நகைகளை தேர்ந்தெடுத்தான்.


           அதில் ஒரு மோதிரம் அவன் கவனத்தை கவர அதை யாரும் அறியா வண்ணம் வாங்கிக் கொண்டான்.


            அனைத்தையும் முடித்து கொண்டு மதிய உணவிற்கு ஹோட்டலில்   சிந்துவும் மித்ரனும் நெருங்கி அமர்ந்திருப்பதை ஒரு ஜோடி கண்கள் பழி வெறியுடன் பார்த்துக் கொண்டு இருந்தது .


       இங்கு குருமூர்த்தி " கல்யாணம் பன்றியா, பன்னு உன் வாழ்க்கையில சந்தோஷத்தை அழிச்சி காட்டறேன்"

 என்று தனக்கு தானே கூறி கொண்டார்.


 "டேய் ஹரி அவன் கல்யாணத்துக்கு ஒரு பெரிய பரிசா குடுக்கனும் ஏற்பாடு பன்னு "  என்ற குருமூர்த்தி பெரிய திட்டத்தை வகுத்தார் .

   

           சிந்துவின் வீட்டில்


ராஜி : " கல்யாணத்தை கோவில்ல வச்சுக்கலாம். வரவேற்ப கொஞ்சம் பெருசா பன்னலாம். நீங்க என்ன சொல்றீங்க "


லட்சுமி: " நீங்க சொல்ற போல பன்னுங்க. எங்களுக்கு யாரும் இல்லை.நாங்க மூனு பேர் தான் "


 ராஜி : " எங்களுக்கும் சொல்லிக்கிற அளவுக்கு யாரும் இல்லை "


மித்ரன்:" ராஜிம்மா போலாம், டைம் ஆச்சு"


ராஜி: " உனக்கு போலீஸ் புடிக்காதா சிந்து அஜய் சொன்னான் "


   சிந்து அஜயை முறைத்து விட்டு " அப்படி ஏதும் இல்லை அத்தை"


ராஜி : " எனக்கும் இவன் பன்ற வேலை புடிக்கல, இன்ஜினியரிங் படிக்கறதா பொய் சொல்லி தான் போலீஸ் ஆகிறுக்கான் திருட்டு பய "


அஜய்: " ஹலோ உங்களுக்கு பிடிக்கலன்னா விடுங்க. அண்ணா தான் இந்த சிட்டியோட ஒன் ஒப் த ஹீரோ "


 மித்ரன் : " போலாமா எனக்கு வர்க் இருக்கு"


ராஜியும்   திருமணம் பற்றி சிறிது நேரம் பேசிவிட்டு  கிளம்பி சென்றார் .

          

         இவ்வாறு எந்தப் பிரச்சினையும்  இல்லாமல்  சுமுகமாக திருமண நாளும் விடிந்தது . 


     குருமூர்த்தி மித்ரனின் கல்யாணத்துக்கு கிளம்பி சென்றார்.

அங்கு  தனக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தெரியாமல்.

         

             இங்கு அம்மன் கோவிலில் அஜய் அங்கும் இங்கும் ஓடி ஆடி வேலை பார்க்க 


மித்ரனோ கல்யாண மாப்பிள்ளை என்ற பெயரில் கூலாக போனில் வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தான்


     

         விழிக்கும்.....


✍️ Muhsina saththar.

கனவுகளின் இளவரசி RS musha

நெல்லியகம பலாகல.

No comments