தேவதையின் விழிகள் 15..
விழிகள்
அங்கு தனது கெஸ்ட் ஹவுஸில் பியர் பாட்டிலை கையில் வைத்தவாறு கத்திக் கொண்டு இருந்தார் மினிஸ்டர் குருமூர்த்தி.
" டேய் அவன் ரவிய தூக்கிட்டான் டா , அஜய கிட்னாப் பன்ன சொல்லி ஐடியா கொடுத்தது எந்தப் பரதேசி டா "
ஹரி: " இந்த தடவை அந்த போலீஸ் காரன தூக்கிடலாம் "
குருமூர்த்தி: " ஒருத்தன் இருபது பேர பந்தாடிருக்கான்.அவன் லேசிப்பட்டவன் இல்லை"
அப்போது வந்த அடியாள் ஒருவன்" தலைவரே அவன வேவு பார்த்ததுல எதையும் தெரிஞ்சிக்க முடியல. ஆனால் அவனுக்கு கல்யாணம் பேசி இருக்காங்க."
குருமூர்த்தி: " சரி நான் சொல்லுற வரைக்கும் எதுவும் பன்ன வேணாம்."
" உனக்கு சாவத் தவிர வேறு எல்லாத்தையும் காட்டறேன் டா" என்று பியர் பாட்டிலை வாயில் சரித்த குருமூர்த்தி யின் கண்கள் வேட்டை நாயின் கண்களைப் போல சிவந்திருந்தது.
கட்டிலில் அமர்ந்திருந்த மித்ரன் லேப்டாப்பில் பழைய கேஸ் பைல்களை ஆறாய இருபத்தி எட்டு கேஸில் குருமூர்த்தி யின் பெயர் இருந்தது.
இதைப் பார்த்து " உன்ன நான் மாமியா வீட்டுக்கு அனுப்புறேன்" என்று மனதோடு கூறிக் கொண்டான் மித்ரன்.
அவன் போன் ஒலியெழுப்ப அதை ஏற்றவன் " சொல்லு ருத்ரா"
ருத்ரன்: " தனசேகர் யார் கூடவோ அதிகமா போன் பேசறான் டா "
மித்ரன்: " இப்ப ஏதும் பன்ன முடியாது டா ஒரு வாரத்திற்கு அமைதியா தான் இருக்கனும். "
ருத்ரன்: " மேரேஜ் பிக்ஸ் பன்னி இருக்காங்களா "
மித்ரன்: " ம்ம் , குருமூர்த்தி டீடெயில்ஸ் கலெக்ட் பன்னி வைடா , அப்புறம் பார்க்கலாம்.
இவ்வாறு திருமண வேலைகளில் இரு நாட்கள் நெட்டித் தள்ள அன்று காலை ஸ்டேஷன் கிளம்பி கொண்டிருந்த மித்ரனிடம் வந்த ராஜி " இண்ணும் கல்யாணத்துக்கு மூனு நாள் தான் இருக்கு நீ என்ன பன்ற சம்பந்தி வீட்டுக்கு போய் அவங்க எல்லாரையும் கடைக்கு கூட்டி வந்துரு "
மித்ரன் : " ராஜிம்மா நான் எதுக்கு "
ராஜி :" நீ தான் போகணும்.அதான் டா முறை "
"சரி " என்ற மித்ரன் ஜீன்ஸ், டீசர்ட் உடன் சிந்துஜாவின் வீட்டுக்கு சென்றான்.
மித்ரன் " அத்தை" என்றவாறு வீட்டினுள் நுழைய அறை வாசலில் சிந்துஜா பிங்க் கலர் சில்க் சாரியில் மையிட்ட கண்களுடன் தேவதையேன நின்றிருந்தாள்.
அவளைப் பார்த்து இமைக்க மறந்து நின்றான் மித்ரன்.
"வாங்க தம்பி" என்ற லட்சுமியின் குரலில் நிகழ்வுக்கு வந்தவன் " அத்தை மேரேஜ் க்கு ட்ரஸ் எடுக்கனும். சீக்கிரம் கிளம்புங்க" என்றான்.
லட்சுமி : " ஒரு காபி குடிச்சிட்டு போகலாமே "
மித்ரன்: " முழு உரிமையோட வந்து விருந்தே சாப்பிடறேன் "
லட்சுமி : " சரிங்க தம்பி வாங்க போலாம் " என்று லட்சுமி சுஜா முன்னே செல்ல
சிந்து முறுக்கி கொண்டு நின்றாள். அவளின் பக்கத்தில் சென்ற மித்ரன் அவளின் காதில் மீசை முடி உரச " மேடம் வரலியா " என்றதும்
அவனின் அருகாமையில் அவள் உடல் சூடேற கண் மூடி நின்றாள்.
அவளைப் பார்த்து மென்மையாக சிரித்த மித்ரன்" என்ன மேடம் பதில கானும் "
சிந்து: " என் கழுத்துல தாலி ஏறினாலும் உனக்கு பொண்டாட்டியா இருக்க மாட்டான் ".
மித்ரன்: " ரொம்ப நல்லது. நீ எனக்கு இல்லை வெளி உலகுக்கு மிஸஸ் மித்ரனா இருந்தா போதும் " என்று விட்டு செல்ல
"திமிரு புடிச்சவன் " என்று முனுமுனுத்த சிந்துவும் காலைத் தரையில் உதைத்தவாறு அவன் பின்னே சென்றாள்.
விழிக்கும்...
✍️ Muhsina saththar.
கனவுகளின் இளவரசி RS musha
நெல்லியகம பலாகல.
No comments