தேவதையின் விழிகள் 14..
விழிகள்
ஆஷிரமத்தில் வண்டியை நிறுத்திய மித்ரனின் தோளைத் தட்டிய ருத்ரன் " எதன்னாளைக்கு தான் டா இப்படி வீட்டுக்கு தெரியாம மறைவா "
மித்ரன் : " நான் போலீஸா இருக்குரதையே ராஜிம்மாவால ஏத்துக்க முடியில, அதான்டா இத சீக்ரெட் ஆ செஞ்சிட்டு இருக்கன்."
ருத்ரன் : " சரி , இன்ஜினியரிங் படிச்ச நீ ஏன்டா I.P.S செஞ்ச "
மித்ரன் :" முதல்ல வந்த வேலையை பார்க்கலாமா"என்று ஆஷிரமத்தில் நுழைய
" ஏன்டா இப்படி மர்மமா இருக்க" என்று புலம்பிய ருத்ரனும் அவன் பின்னே சென்றான்.
இங்கு காலேஜில் சிந்துவைச் சூழ்ந்து கொண்ட நண்பர் பட்டாளம் " என்னடி உனக்கு மாப்பிள்ளை பார்த்துக்கலாம். உன் தங்கச்சி தான் சொன்னா "
சிந்து : " அதையும் சொல்லிட்டாளா "
சரண்யா: "மாப்பிள்ளை யாரு டி"
" ஏ.சி.பி மித்ரன் சார் " என்ற குரலில் அனைவரும் திரும்பிப் பார்க்க அங்கு அஜய் நின்றிருந்தான்.
சக்தி: " உனக்கு எப்படி டா தெரியும். "
தியா : " சார் தான் மித்ரன் சாரோட தம்பி அப்படி தானே சாரே "
அஜய் ( M. Voice) : " ரொம்ப கோவமா இருக்கா போல எப்படியும் மலையிறக்கிடு டா "
தருன்: "ஏன்டா எங்க கிட்ட சொல்லல"
அஜய்: " அவன் ஏ.சி.பி னு ஆறு மாசம் முன்னாடி தான் டா எங்களுக்கு தெரியும்"
தருன் : "என்ன சிந்து போலீஸ் புடிக்காதுன்டு சொல்லிட்டு கடைசில மித்ரன் சார கைக போட்டு கிட்டயே " என்று கிண்டல் செய்ய ஏனையவர்களும் அவளை கலாய்த்து தள்ளினர் .
ஏனையவர்கள் களைந்து செல்ல அஜயும் தியாவும் தனித்து விடப்பட்டனர்
தியா : " ஏன்டா என் கிட்ட சொல்லல "
அஜய்: " ஒன்கிட்டயே மறைப்பனா செல்லம் . அவன் இன்ஜினியரிங் படிக்கரதா தான் பெங்களூர் போனான். ஆறு மாசம் முன்னாடி தான் இங்கே ட்ரான்ஸ்வர் ஆகி வந்தான் "
தியா : " ப்ராமிஸ் "
"செல்லக் குட்டி பிராமிஸ் என்றவன் அவள் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு சிட்டாய் பறந்தான்.
தன்னவன் அடாவடியில் சிரித்துக் கொண்ட தியாவும் அவன் பின்னே சென்றாள்.
இங்கு ஆஷிரமத்தில் ஓனர் அறையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான் மித்ரன்
அவனின் முன்னே பயத்தில் நடுங்கியவாறு இருந்த தன சேகர் மீது கைபோட்ட ருத்ரன் " சாந்திக்கு யார் கூடவும் பழக்கம் இருக்கா" என்று கேட்க
"இல்ல சார் அவ ரொம்ப நல்ல பொண்ணு" என்று அழுது கொண்டு கூறினார்.
மித்ரன் : " அப்ப ஏன் அவ இங்க இருந்து போனா"
தனசேகர்: " அது. அது. எனக்கு தெரியாது" என்று தடுமாறவும்
" சரி" என்று முடித்து கொண்ட மித்ரன் ருத்ரனை அழைத்து கொண்டு வெளியேறினான்.
ருத்ரன்: " டேய் அவன் பார்வை சரியில்லை "
மித்ரன்: " அவன வேவு பாரு " என்று கூறிச் சென்று விட்டான்.
வீட்டுக்கு வந்த மித்ரன் அதே போல வீட்டின் பின்புறம் இருந்தே தனது அறைக்குள் நுழைந்து கொண்டான்.
தன் ரகசிய அறையில் நுழைந்த மித்ரன் அங்கு கட்டப் பட்டிருந்தவனை பார்த்து " உனக்கு கடைசி சான்ஸ் தரேன் .ஒழுங்கா சொல்லிட்டன்டா சேதாரம் இல்லாமல் தப்பிப்ப "
அவன் : முடியாது உன்னால முடிஞ்சத பார்த்துக்க"
மித்ரன் கைகளில் ஒரு குப்பியை எடுத்து அதனுள் இருந்த ஆசிட்டை அவன் கால்களில் ஊற்ற அவனது அலறல் சத்தம் அந்த அறையில் எதிரொலித்தது.
ஆனால் அவன் சத்தம் அந்த அறையை மீறி வெளியே கேட்கவில்லை.
அவன் வலி தாங்க முடியாமல் "மினிஸ்டர் குருமூர்த்தி" என்று கத்தியவாறே மயங்கி சரிந்தான்.
"அப்போ அஜய கிட்னாப் பன்ன சொன்னது குருமூர்த்தி " என்று இரு நாட்கள் முன்பு நடந்ததை என்னிப் பார்த்தான்
அன்று...
அஜய் கடத்தப் பட்டதாக கூறப் பட்ட போன் நம்பரை ட்ராக் செய்ய கூற அது அனைத்து வைக்கப் பட்டிருந்தது.
அன்று மதியமே அந்த நம்பர் செயல் பாட்டில் இருக்கவும் அதன் மூலம் அன்று இரவே அவனை ஒரு ஆஷிரமத்தில் சுற்றி வளைத்திருந்தான்.
அதை என்னியவன் " இவன பிடிச்ச ஆஷிரமமும் சாந்தி தங்கியிருந்த ஆஷிரமமும் ஒன்னு தான். இவன் இரண்டு மாசம் முன்னாடி தான் கஞ்சா கேஸ்ல உள்ள வந்தான். ஜாமின் முடிய முதல்னா சாந்தி கேஸுக்கும் இவனுக்கு சம்பந்தம் இருக்கு " என்று ஏதேதோ கணக்குப் போட்டவன் தனது அறையில் இருந்து வெளியேறி ஹாலுக்கு சென்றான்.
ஹாலில் அமர்ந்திருந்த ராஜி ஜோசியர் இடம் " என்ன ஜோசியர் அய்யா சட்டுனு ஒரு நாள குறிச்சி குடுங்க" என்று கூற
ஜோசியர் : " வார வெள்ளி கிழமை நாள் நல்லா இருக்கு தாயி அன்னேக்கே கண்ணாலத்த வச்சி புடுங்க"
ராஜி : " இடைல ஒரு வாரம் தானே இருக்கு"
ஜோசியர் :" இந்த மாசத்துல அது தான் தாயி நல்ல நாள் என்று கூறியவர்
ஹாலுக்கு வந்த மித்ரனைப் பார்த்து " நான் வாரேன் அம்பி" என்று விடை பெற்றுச் சென்றார்.
"ராஜிம்மா இப்பவே என்ன அவசரம்" என்று கூறிய மித்ரனுக்கு இந்த வாரத்தில் முடிக்க வேண்டிய வேலைகள் இருந்தது .
"உனக்கு ஒன்னும் தெரியாது நீ சும்மா இரு , காலையில் எங்க போன" என்று ராஜி கேட்க
மித்ரன்: " அது ரூம்ல தான் கதவை லாக் பன்னிட்டு நல்லா தூங்கிட்டேன் "
"சரி கண்ணா " என்று அவரும் திருமண வேலைகளை பார்க்க சென்று விட்டார்.
விழிக்கும்..
✍️ Muhsina saththar.
கனவுகளின் இளவரசி RS musha
நெல்லியகம பலாகல.
No comments