Breaking News

யாதும் நீயே 11....


      அவனவள் 

ஆதி நேராக  அபியின் உறவினர்கள் வீட்டுக்கு செல்ல

அங்கு   அவளது தந்தை ராகவேந்திரன்  தின்னையில்  அமர்ந்திருந்தார்.


 அவரிடம் சென்ற ஆதி " என்னோட அபிக்கு  இறுதி காரியம் பன்னது நீங்க தானே"


ராகவேந்திரன் : " என்ன பன்றது   குடும்ப கவுரவம் போயிட கூடாதே 


" ச்சை   இவர் எல்லாம்  என்ன  மனுஷன் " என்று நினைத்த ஆதி 


" என் குழந்தைங்க எங்க," என்று கேட்க


      " அந்த சனியனோட பையன் இங்க தான் இருக்கான் , பொண்ண தான் எவனோ ஒருத்தன் தூக்கிட்டு போட்டான்"

என்றார்.


" சரி  எங்க இருக்கான்." என்று ஆதி கேட்க

 அவரும்  அடுக்களைப் பக்கம் கை நீட்டினார்.

அங்கு   மூன்று வயது குழந்தை  சட்டை இல்லாமல் " ம்மா பசிக்கிது " என்று அழுது கொண்டே இருக்க


        ஏனையவர்களோ " உனக்கு யார் டா அம்மா , அந்த ஓடுகாலி தான் செத்து போய்டாளே " என்று  சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.


         அதைப் பார்த்த ஆதியின் கண்கள் "என் புள்ளைக்கு இந்த நிலையா " என்று கலங்கிப் போக 


         தனது மகனை ஓடிச் சென்று கைகளில் அள்ளிக் கொன்டவன்


     ராகவேந்திரனிடம் வந்து   " என் குழந்தைய அப்பவே என் கிட்ட குடுத்து இருக்கலாமே " என்று கேட்க


அவரோ " ஊர் பேசும் அதுக்காக தான் " என்று முடித்து கொண்டார்.


         ஆதி  குழந்தை உடன் காரில் ஏறியதும்


" அங்கில் பசிக்கிது" என்று  மழலை குரலில் கூறி அழுதது அக் குழந்தை.


         காரை வேகமாக கிளப்பிக் கொண்டு சென்ற ஆதி    ஒரு தெரு ஓரக் கடையில் 


இட்லி வாங்கி பிட்டு பிட்டாக ஊட்டி விட்டான்.


       அந்தக் குழந்தை   " தேன்ங்ஸ் அங்கில் " என்று கூற


ஆதி : " அங்கில் இல்லை அப்பா " என்றதும்


அந்தக் குழந்தையும் மழலைக் குரலில் " ஐ  ப்பா    ப்பா"  என்று  குதூகளித்து   அவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டது.



     " டேய் அவனுக்கு அவன் குழந்தை உயிரோட இருக்குறது தெரிஞ்சிட்டு டா" என்று போனில் ஒருவன் கத்திக் கொண்டு இருக்க

 மறு முனையில் " பயப் படாதடா  அந்த எக்ஸிடன்ட நம்ம தான் பன்னது என்று யாருக்கும் தெரியாது"என்றது


இங்கு யாருக்கும் தெரியாமல் மறைந்து மறைந்து  அபியின் கல்லறைக்கு சென்ற ஷீபா   " சாரி அபி , உன் வாழ்க்கையில் நடந்த மர்மத்தை தெரிஞ்சிக்கிட்ட பிறகு தான்  எனக்கு உன்னோட   பொண்ண  ஆதி கிட்ட ஒப்படைக்க முடியும்.


        அது வரைக்கும் அவ என் கூட இருக்கட்டும் இல்லை அவளுக்கு தான் ஆபத்து" என்று   கை  கூப்பிய படி வேண்டிக் கொண்டிருந்தாள் ஷீபா.



               தொடரும்......


✍️  Muhsina saththar.

 

No comments