Breaking News

யாதும் நீயே...10

 


         அவனவள்  


  அந்தக் காதல் பறவைகள் கட்டியணைத்து கொண்டு இருக்க அவன்  அருகில் சென்ற ஜகன்   ஆதியின் தோளைத் தட்ட

அவனைப் பார்த்து முறைத்த ஆதி ஏன் டா  

" பூஜை வேலை கரடி மாதிரி  உள்ளே வர"என்று  அபியை விட்டு சற்று தள்ளி நின்று கொண்டான்.


   அதில் அபி வளையல்களை குழுக்கியது போல  " கலகல" வென சிரிக்க

 ஆயிரம் கண்கள் அவளை   வெறுப்பாகப் பார்த்தாலும்  ஆதியின் கண்களோ அவளை ரசனையாக பார்த்திருந்தது.


(  அழகு என்பது பார்வையை பொறுத்தது)

 

  எந்தப் பூவிலிருந்து வந்ததிந்த தேனோ என்று என்னி  வியக்கும் இதழ் அழகு


          அந்தி நேர வானம்  சிவந்ததைப் பேலே கன்னம்  எங்கும் தோன்றும் வெட்கம் அழகு


        தெற்றுப் பல்லு சிரிக்கையில்  தீராத அழகு

வீட்டின் காலிங் பெல் அடிக்கவே  நடப்பிற்கு திரும்பிய

ஜகன்    

கலங்கிய கண்களுடன்  தன்னையே பார்த்திருந்ந ஷீபாவை ஒரு  பார்வை  பார்த்து விட்டு  வெளியேறிச் சென்றான்.

    

தித்யா : " ஒய் ஷீபு உன்ன அந்த பேட் பாய் அடிச்சுட்டு போகுது என்று  மழலை  குரலில் கேட்க 


       அவளை ஓடிச் சென்று அனைத்துக் கொண்ட ஷீபா 


" மண்ணிச்சுரு அபிநயா ,  உன் வாழ்க்கையில நடந்த மர்மத்தை தெரிஞ்சிக்க  எனக்கு வேற வழி தெரியலை"   என்று நினைத்து  கண்ணீர் வடித்தாள்.


   ஹாஸ்பிடலில்....

     

           பேஸன்டை பார்த்து முடித்த ஆதி  தனது அறையில்  கைகளை தலைக்கு சேர்த்தவாறு  இருக்கையில் சாய்ந்து  கண்   மூடி அமர்ந்திருந்தான்.


      அவன் மூடிய இமைகளுக்குள் சூழலும் விழிகளே சொல்லியது. 

அவன் ஏதோ சிந்தனையில் இருப்பதை.


        " என்ன மிஸ்டர் ஆதித்யன் ஏதோ யோசனைல இருக்கீங்க போல" என்ற குரலில்  கண் விழித்தான் ஆதி.


      எதிரில் நின்றிருப்பவரை பார்த்து கண்களுக்கு எட்டாத புன்னகையை சிந்தியவன்


     எழுந்து நின்று கை குலுக்கி வரவேற்று

" கல்யாணி மேடம் ப்ளிஸ் சிட்"  என்றான்.


     இருக்கையில் அமர்ந்த கல்யாணி 

 அவனது டேபிளில் புன்னகை முகமாக   புகைப் படத்தில் வீற்றிருந்த  அபிநயாவை பார்த்து


" நீங்க செகண்ட் மேரேஜ்  பன்னிக்கலயா  ஆதித்யன் " என்று வினவ


" நோ மேம் , என்னைக்கும் என் மனசு அவள் ஒருத்திக்கு தான் "


கல்யாணி :" உங்களுக்கு  இல்லைன்னாலும் உங்க குழந்தைகளுக்கு அம்மா வேண்டாமா "

ஆதி: " வாட் , குழந்தை ங்க "


கல்யாணி :" எஸ், மிஸ்டர் ஆதித்யன்  உங்க ஒய்ஃப்கு நான் தான் பிரசவம் பார்த்தேன்.


(  வைத்தியக் குறிப்பு:   தாய் இறந்தாலும் வயிற்றில் இருக்கும் நிறை மாதக் குழந்தை   ஒரு மணி நேரம் உயிருடன் இருக்கும்)


ஆதி : "  என்ன மேம் சொல்றீங்க"


கல்யாணி : " இரண்டு குழந்தைங்க .  பேபிஸ பார்த்ததும் எனக்கே கஷ்டமா போச்சு , தாயில்லா குழந்தை ங்க.   அதுக்கு அப்புறம் இப்ப தான்  உங்கள பார்க்கேன்


 வராத போனை  எடுத்து பேசிய ஆதி " மேம் ஒரு சின்ன வர்க் இருக்கு"


கல்யாணி : " இட்ஸ் ஓகே  நானும் இப்போ கிளம்பிக் தான் " என்றாள்.


      காரிற்குள் உரிய ஆதி பர்ஸில் இருந்த தன்னவளின் புகைப் படத்தைப் பார்த்து 

" அபி மா நம்ம குட்டீஸ் இருக்காங்க.

நான் அவங்களை எப்படியும் என்கிட்ட கூட்டி வந்துருவேன் " என்று மானசீகமாக பேசியவன்  காரை கிளப்பிக் கொண்டு சென்றான்.


" டேய் அவனுக்கு அவன் குழந்தைங்க உயிரோட  இருக்குறது தெரிஞ்சிட்டு டா " என்று   ஒருவன் போனில் கத்திக் கொண்டு இருந்தான்.



    தொடரும்....



✍️  Muhsina saththar.

 

No comments