யாதும் நீயே..09
அவனவள்
அறை முழுவதுமாக சிதறிக் கிடந்த ஒவ்வொரு காகிதங்களிலும் அவனது காதல் வரிகள் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.
அதைக் கையில் எடுத்து பார்த்த ஆதியின் கண்கள் காத்திருந்த காதலை கண்டு கொண்ட மகிழ்ச்சியில் கண்ணீரை சொரிந்தது.
கையில் காகிதத்துடன் விறைத்து நின்ற ஆதியைப் பார்த்த ஜகன்
" என்ன இவன் ப்ரீஷாகி நிக்கிறான்" என்று நினைத்து
அவன் அருகில் சென்று அவன் தோள்களை பற்றி தன் புறம் திருப்பினான்.
அவன் கண்கள் கலங்கிப் இருப்பதைப் பார்த்து
" டேய் என்னாச்சு டா ,கண் கலங்கி இருக்கு"என்று கேட்க
"ச்சை இவன் ஒருத்தன் கொஞ்ச நேரம் பீல் பன்ன விடுறனா " என்று சலித்துக் கொண்ட ஆதி
தன்னவளின் பையை ஆறாய்ந்தான்.
அதில் சில பட்டுப் போன துணிகளுக்கு இடையில் ஒரு சிறிய கவரில் அவன் அவளுக்கு முதன் முறையாக பரிசளித்த மோதிரமும் அதனுடன் நான்காக மடித்து வைக்கப் பட்ட காகிதத் துண்டும் தென்பட
அம் மோதிரத்தில் சிறு முத்தம் பதித்து
அக் காகிதத்தைப் பிரிக்க
" டேய் ஆதி இது மேனர்ஸ் இல்லை, அந்தப் பையில என்ன புதையலா இருக்கு" என்று ஜகன் கேட்க
அவன் புறம் திரும்பாமலே " எனக்கான பொக்கிஷம்" என்றவன்
அதைப் படிக்க ஆரம்பித்தான்.
அதில்....
என் வாழ்க்கைப் பாதையில் கண்ணுக்குத் தெரியாத வண்ணம் அற்புதங்களை நிகழ்த்தி முடித்து சாதனை புரிவதே உன் சாமர்த்தியம்
என்னவன் எனக்களித்த காதல் சின்னம் அவன் விரல் தீண்டி உயிர் பெறும் வரை
எனது வரிகளால் அதற்கு உயிர் கொடுப்பேன்
என்று எழுதப் பட்டிருந்ததை படித்த ஆதியின் வதனங்கள் மென்னகை சிந்தியது.
மேலும் அவன் ஒவ்வொரு முறையும் வைத்த வெள்ளை நிற ரோஜாவின் இதழ்கள் அவனது வரிகளுடனே ஒட்டப் பட்டிருந்தது.
இதுவரை தான் மட்டுமே அவளை அதிகம் காதல் செய்வதாக நினைத்து இருந்த என்னம்
தற்போது சுக்கு நூறாக உடைந்து தன்னவள் காதல் அந்த ஆறடி ஆண்மகனையே பிரமிக்க வைத்தது.
மோதிரத்தை கையில் எடுத்து கொண்டு தன்னவள் இருக்கும் இடம் நோக்கி ஓடினான்.
அந்த இரண்டு நிமிடங்களும் அவனுக்கு இரண்டு யுகமாய் கழிந்தது என்றாலும் மிகையில்லை.
அங்கு அபிநயாவின் கைகளில் சேலைன் ஏறிக் கொண்டிருக்க
அவள் மருந்தின் வீரியத்தில் தூங்கி இருந்தாள்.
தன்னவளை தலை முதல் பாதம் வரை பார்த்த ஆதி
பெற்றவளே அவளை வேண்டாம் என்று நினைக்கும் அவளது நிலையை என்னி ஊமையாய் அழுதவன்
"என்னைக்குமே உன்கூட இருப்பேன் " என்று கூறும் விதமாக அவளது தலையை வருடி விட்டான்.
ஆதியின் தொடுகையில் கண் விழித்த அபிக்கு
அவனது அருகாமை பாதுகாப்பு உணர்வை அளிக்க
அவளது சிப்பி உதடுகளை திறந்து " நீ...ங்க யாரு" என்று தினறியவாறே கேட்க
அந்தக் காகிதத்தையும் மோதிரத்தையும் எடுத்து சுட்டிக் காட்டியவன் " இட்ஸ் மீ அபி மா " என்றான்.
இந்த உலகத்தில் தன்னை மட்டுமே முழுதாக நேசிப்பவனை கண்ட மகிழ்ச்சியில்
அவளது அழுகை சிறு கேவலாக வெளிப்பட
அதைப் பார்க்க முடியாத ஆதி அவளைத் தூக்கி தன் வயிற்றோடு சேர்த்து அனைத்தவாறு" அழாத அபி மா " என்று அவளது தலையை விடாமல் வருடிக் கொடுக்க
அவனது "அபி மா" என்ற அழைப்பு உயிரின் ஆழம் வரை இறங்கி தித்தித்தாலும்
" உங்களுக்கு நான் பொருத்தமானவ இல்லை , உ.....ங்கள பார்த்த சந்தோ....ஷம் மட்டும் போதும். நான் எங்க சரி போய்டுறேன் " என்று அவனது அனைப்பில் அழுகையுடனே கூறி முடித்தாள்.
" இந்த உலகத்துல நீ மட்டும் தான் டி எனக்கான பேஸ்ட் சாய்ஸ் என்ட் ஒன்னன் ஒன்லி சாய்ஸ் " என்று கூறி
அவளது முகத்தை நிமிர்த்தி அவளது
நெற்றியில் இதழ் பதித்த ஆதி அவளை தன் மார்போடு சேர்த்து அனைத்துக் கொண்டான்.
இவர்களைப் பார்த்த படி வாசலில் நின்றிருந்த ஜகன்
"சாரி மச்சான் , உன் அழகுக்கும் அறிவுக்கும் இப்படி ஒருத்திய உன் கூட சேர விடமாட்டேன்" என்று வன்மமாய் நினைத்துக் கொண்டான்.
தொடரும்.....
✍️ Muhsina saththar.
No comments