Breaking News

யாதும் நீயே 08...

 



      அவனவள்  


   சூரியன் முழுவதுமாக மறைந்து நிலா மகள் தனது ஆட்சியை தொடங்க

 ஆதி   தன்னவளின் காதல் வரிகளுக்காக   கடற் கரைக்கு வந்திருந்தான்.

 சில நிமிடங்களில் கடல் அலையில்   ஒரு பெண்ணின் உடல்  அமிழ்ந்து மிதப்பதை கண்ட ஆதிக்கு   தன்னவள் நினைவு பின்னோக்கி செல்ல 


 நீரிலிருந்து தன்னவளை கையில் ஏந்திக் கொண்டு கரைக்கு வந்தான்

அவள் தன்னவள் என்று அறியாமல்

அபியின் கை கால்களை அவிழ்த்து விட்ட ஆதி

 அபியின் மூடிய இமைகளை பிரித்து பரிசோதித்தவன்

அவளது வயிற்றில் கைகளை ஊன்றி  நீரை வெளியேற்றியவன்   அவள் கண் விழிக்காமல்  இருக்க     

 அவளை கையில் ஏந்தியவாறே  காருக்கு விரைய 


      எங்கிருந்தோ ஓடி வந்த  வயது முதிர்ந்த பெண்  ஆதியின் கைகளில் மூச்சுப் பேச்சு இன்றி கிடந்த அபியை பார்த்து தனது வயிற்றில் அடித்துக் கொண்டு கதறி அழுதாள்.


"  இந்தப் பாவி மக வயித்துல பொறந்து இப்படி கஷ்டப் படுறியே தங்கமே"  என்று  அழுதாள்.


          அபியின் நிலையை பார்த்து ஏன் என்றே அறியாமல் அவன் மனம் பிசைந்து கொள்ள


" ஆண்டி  ஹாஸ்பிடலால் பக்கத்தில் தான்  முதல்ல போய் காருல ஏருங்க குவிக் "என்று கூறி காரை கிளப்பிக் கொண்டு சென்றான்.

         அடுத்த நாள் காலை அபி கண் விழிக்க  அவளது தாய் அம்பிகா அவளைப் பார்த்தவாறே இருந்தாள்.

         தாயை கண்டதும் ஏங்கி அழுத  அபி " ஏம்மா என்ன மட்டும் கடவுள் இப்படி படச்சிட்டாறு" என்று அழுக

  " இல்லடா கண்ணு உலகத்துல நிறையப் பேருக்கு இப்படி இருக்கும். ஆனால் நம்ம குடும்பத்துல தான் கவுரவம் பார்க்காங்க. நீ இப்படி இருந்தா அவங்களுக்கு ஊருக்குள்ள இருக்குற மதிப்பு குறைஞ்சிடும் என்று உன்னை கொல்ல பார்க்குறாங்க. நீ எங்காவது கண் காணாம போய்டு "என்று  மனதை கல்லாக்கிக் கொண்டு கூறியவர்

அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

      

       அம்பிகா கூறியதை கேட்ட அபி  " என்ன கூட வச்சிட்டு இருந்தாலே ஊர் சிரிக்குமா, அப்போ  அவர் என்ன கட்டிகிட்டா  அவர் கவுரவம் போய்டும் ல . நான் அவர பார்த்தா மட்டும் போதும். நான் எங்காவது போய்டுறேன்" என்று நினைத்துக் கொண்டாள்.

       

       ஹாஸ்பிடலில் அவனது அறையில் அமர்ந்து இருந்த ஆதி " அபி நேத்து பீஸ்கு போயிருப்பாளா, நம்ம தான் இங்கே வந்துட்டமா " என்று அவளைப் பற்றி சிந்தித்து கொண்டிருக்க


          அவனது சிந்தனையை கலைக்கும் முகமாக ஜகன் அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான்.

ஆதி: " என்னடா மச்சி ஹாஸ்பிடலால் வரைக்கும் வந்துருக்க.  உடம்பு சரியில்லை யா"

      ஜகன்" டேய் நீ புல் டே ஹாஸ்பிடல்ல தங்கிட்டா அதான்"

ஆதி: " இங்க ஒரு எமர்ஜென்சி, சரி என்ன விசயம் சொல்லுடா"

    ஜகன்: " டேய் எனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகிருக்கு டா

ஆதி" அத ஏன்டா மூஞ்ச தூக்கி வச்சிட்டு சொல்லுற "

ஜகன்" நீ மட்டும் தனியா இருப்பியடா "

ஆதி" நான் தனியா, என் கூட அபி இருக்கா மச்சி " 

          என்று பேசிக் கொண்டு இருக்க  அபியின்  உடமைகளுடன் உள் நுழைந்த அம்பிகா 

        " தம்பி  எனக்கு ஒரு உதவி பன்னுப்பா" என்று கண்களில் நீருடன் வினவ

ஆதி" சொல்லுங்க ஆண்டி "

 " இந்த பைல என் பொண்ணோட பொருள் எல்லாம் இருக்கு பா,  அவளுக்கு குணமானதும் அவள பஸ் ஏத்தி விட்றுங்க தம்பி "


ஆதி" ஓகே அண்டி  நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்க பீல் பன்னாம போங்க " என்று கூறி அவரை வழியனுப்பி வைத்தான்.

ஜகன்" நீ என்ன அவங்களுக்கு வேலைக் காரனா "என்று கோபப் பட

ஆதி" சும்மா இருடா, அவங்களுக்கு ஏதோ கஷ்டம் போல "என்று

கூறி திரும்ப

        அம்பிகா வைத்து விட்டு சென்ற கிழிந்த பையில் இருந்து காற்றுக்கு சில காகிதத் தாள்கள்  அறை முழுக்க பறந்தது.

    எழுந்து சென்று மின் விசிறியை நிறுத்தி விட்டு


     அந்தக் காகிதங்களை பார்க்க  அதில் அவனது காதல் வரிகள் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.


          தொடரும்.....



✍️  Muhsina saththar.

No comments