Breaking News

யாதும் நீயே.. 07

 அவனவள்   


அடுத்த நாள்  கதிரவனவன் தன் காதலியை தேடி வருமுன்னரே 

         ஆதி தன்னவளை தேடிச் சென்று விட்டான் கடற் கரைக்கு  விடிந்தும் விடியாத காலைப் பொழுதில்

              இன்று அதே இடத்தில் ஒரு பெண் தனது முகத்தை சாலினால் மறைத்துக் கொண்டு அமர்ந்திருப்பது  தெரிய 

  அபியோ அது தனது நேசத்திற்கு உரியவன் என்று அறியாதவள்  

      அவனும் தன்னை ஏளனமாகப் பார்க்கக் கூடும் என்ற பயத்தில் அவ்விடத்தை விட்டே 

ஓடி மறைந்தாள்.

   அவளது வரிகளின் மூலம் தன்னவள் ஆதரவற்ற வள் என்பதை அறிந்தவன் 

  சற்று முன்னர்  அபி கை கால்களை குறுக்கி  தலை கவிழ அமர்திருந்த தோற்றமே  

 அவள் தன்னவள் என்பதை உணர்த்தியது 

   தன்னைக் கண்டதும் சற்று பூசிய உடல்வாகுடன்  தனது முகத்தை மறைத்துக் கொண்டு ஓடியவளைப் பார்த்து   தன்னவள் நிலையை ஊகித்தவனுக்கு இந்த சமூகத்தின் மீது தீராக் கோபம் எழுந்தது.

          அந்த இடத்தில்  கற்கள் பதித்த கவரிங் மோதிரத்தை டன்  காகித  வரிகளையும் வைத்தவன் தன்னவளை நினைத்து மனம் கணக்க  அவ்விடத்தை விட்டே அகன்று விட்டான்.

  அவன் சென்று சிறிது நேரத்தில் வந்தமர்ந்த அபிக்கு 

அங்கிருந்த மோதிரமும் காகிதத் துண்டும் தென்பட அதைக் கையில் எடுத்து மோதிரத்தை தன் கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொண்டு  காகிதத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தாள்.

அதில்....

     நீ தான் என் வாழ்வின் உடைய அத்திவாரம்.....


பல நிமிடங்கள் சில நாட்கள் உன் முகத்திற்கு திரையிட்டு என்னிடம் இருந்து நீ விலகிச் செல்வது வழக்கமாயிற்று.....

       நீயில்லா வாழ்க்கையில் உயிரில்லை எனக்கு

நீயே நான் என்றால் யாதும் தேவையில்லை எனக்கு....

     புரிந்தும் புரியாத சிலருக்காக கண்ணீர் வடிக்கிறாயா? .....

நீ எப்படி இருந்தாலும் உன்னை ஏற்பேனடி கண்ணே......

என்றும் உனக்கானவனின் வரிகள் இவை

        அபிநயா

என்று எழுதப் பட்டிருந்தது.

            அதைப் படித்தவள் மனதில்  தன்னை யாருக்கு பிடிக்கவில்லை என்றாலும் முகமறியா தன்னவனுக்காக வாழ்ந்திட வேண்டும் என்ற வைராக்கியம் எழுந்தது.

         இவ்வாறு இவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல ஆறு மாதங்கள்  எழுத்துக்கள் ஊடே காதலித்துக் கொண்டனர்.

        இவர்களது காதலும்   மிக ஆழமானதாகவே வளர்ந்திருந்தது.

           முகமறியாக் காதலின் ஆழத்தை நான் சொல்லத் தேவையில்லை

      ( ஏன் இது அக்காலம் போல் காகிதத்தில் காதல் செய்ய வேண்டும்  செல்போன் வசதி இருக்கும் போது என்று நீங்கள் நினைக்கலாம்.

 செல்போனில் காதல் செய்ய அவள் தான் தனது போனை ஆற்றில் தூக்கிப் போட்டாளே).

     என்றும் போல் அன்றும் சூரியன்  மறையும் மாலைப் பொழுதில் அபி கடலோரத்தில்  உலவிக் கொண்டிருந்தாள்.

        அப்போது அவளை மறித்த படி வந்த இரு இளம் பெண்கள்  

" ஹேய் திக்கிச்சி  இன்னும் நீ சாவல" என்று கூற

மற்ற பெண்ணோ " அக்கா விடுக்கா என்று கூறி அபியிடம் திரும்பியவள் " அ...அ...ம்மா இல்லை அம்மா சொல்லு என்று அவளுக்கு பழிப்புக் காட்டி  அவளை ஏளனப் படுத்த 

அபி:" ப்ளீஸ் இப்...டி. பன்.....னாதிங்க.  மனசு....வலி...க்கிது" என்று திக்கித் தினறி பேச  

அவர்களோ " இனிமே வலிக்காது என்று

    ஒருத்தி அபியின் கைகளை முதுகுப் புறமாக திருப்பிக் கயிற்றால் கற்ற 

அடுத்தவள் அவளது கால்களைக் கட்டினாள்.

அபி :" எ இப்படி.  .....பன்......றீங்க " என்று அழுதவாறே கூற

   அவர்கள் " என்ன பன்றது உன் கூடப் பிறந்து தொழச்சிட்டமே " என்று

அபியை இழுத்துச் சென்று  கடல் அலைகளுக்கு நடுவே தள்ளி விட்டு "  பாய் தங்கச்சி " என்று கூறி விட்டுச் சென்றனர்.


( இவர்கள் மனிதப் பிறவிகள் தானா? தன் தங்கையை கொல்ல முயற்சிக்கின்றனர்.காரணம் என்ன?)

        அபியோ கையும் காலும் கட்டப் பட்ட நிலையில்  கடல் அலையில் தத்தளித்துக் கொண்டிருந்தாள்.


           தொடரும்.....


✍️  Muhsina saththar.

No comments