யாதும் நீயே 06
அவனவள்
அபியும் காகிதத்தில் சில வரிகள் எழுதி அதே வெள்ளை நிற ரோஜாவில் சுற்றியவள் அதே இடத்தில் வைத்து விட்டு சிறிது தூரம் தள்ளி சென்று நின்று கொண்டாள்
தன்னவனைக் காணும் ஆசையில்
சிறிது நேரத்தில் அங்கு வந்த நடுத்தர வயதினர் ஒருவர்
அவளைக் கண்டு " ஏய் சனியனே நீ இன்னும் செத்து தோலையல, உன்னக் காணவே அறுவருப்பா இருக்கு"
அபி விசும்பிய வாறே " இல்....இல்....ல" என்று திக்கித் தினறி பேச வரும் முன்னரே
" அடச்சீ பேசாத உனக்கெல்லாம் உயிர் வாழ தகுதியே இல்லை."
" ஏண்டி உனக்கு என்ன அழகி என்ற நினப்போ. உடம்பக் காட்டி பத்து பேர மயக்க தானேடி கடக்கறையில சுத்துற" என்று கேவலமாக பேச
வருவோர் போவோர் என்று அவளைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து விட்டு செல்ல
அபியோ அவமானத்தில் நிலத்தில் புதைந்து விடமாட்டோமா என்று கூனிக் குறிகி நின்றிருந்தாள்.
( நம்மிடம் ஆயிரம் குறைகள் இருந்தாலும் அடுத்தவரின் சிறு குறையத் தான் சுட்டிக் காட்டுகிறது இந்த உலகம்)
அவர் அபிக்கு என்று ஓர் இதயம் இருக்கும் என்று கிஞ்சித்தும் பார்க்காமல் அவளை நோகடித்து விட்டுச் செல்ல
" இனியும் உயிர் வாழத்தான் வேண்டுமா" என்று நினைக்கையில்
நான் என்றும் உனக்காய் இங்கு...
தொலைதூரக் காதலாகி விடாதே...
அபிநயா
என்ற முகமறியாதவனின் நேசம் தான் அவளது உயிரைப் பிடித்து வைத்திருக்கிறது.
இங்கு ஹாஸ்பிடலில்....
நேரம் பின் மாலைப் பொழுதை நெருங்கிக் கொண்டிருக்க
ஆதிக்கு தன்னவள் தனது வார்த்தைகளை படித்திருப்பாளா.
தனது நேசத்தை ஏற்றிருப்பாளா
என்ற என்னமே நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டே இருந்தது.
எவ்வாறோ தனது டியூட்டி நேரத்தை முடித்தவன்
டீன் ஏஜ் பையன் போல காதல் அவஸ்தையை இதற்கு மேலும் தாங்க இயலாமல்
கடற் கரையை நோக்கிப் பயணமானான்.
யாருமற்ற அமைதி சூழ்ந்த கடற் கரையில் நிலா வெளிச்சமே அவனை வர வேற்றது.
தனது ஸ்மார்ட் போனில் டார்ச் லைட்டை ஆன் செய்த ஆதி தான் காலையில் அமர்திருந்த இடத்தை நோக்கி மனம் படபடக்க நடந்தான்.
அவ்விடத்தில் தான் காலையில் வைத்து விட்டு சென்ற
வெள்ளை நிற ரோஜா வாடிப் போய் காகிதத்தில் சுற்றுப் பட்டிருந்தது.
இவ்வளவு நேரம் இருந்த உற்சாகம் வடிந்தோடி துக்கம் நெஞ்சை அவனின் நெஞ்சை அடைத்துக் கொண்டது.
( அதற்குக் காரணம் தன் காதல் கை கூடவில்லை என்பதல்ல. தன்னவள் கடலுக்கு இறையாகி விட்டாளோ என்பது தான்)
தனது மொத்த தேம்பும் வடிந்தோட
கைகள் நடுங்கியவாறு குனிந்து எடுத்தான்.
நிமிந்தவனுக்கு அப்போது தான் அந்த வித்தியாசம் தேண்பட்டது
அதில் தனது ரோஜா வாடி இருக்க சுற்றப் பட்டிருந்த காகிதத் துண்டு வேறாக இருந்தது.
அதைத் தொட்டுப் பார்த்த ஆதியின் துக்கம் பனியாய் விலகிச் செல்ல
அதை எடுத்துக் கொண்டு காரிற்குள் ஓடிய ஆதி அதைப் பிரித்து படிக்க ஆரம்பித்தான்.
காரிற்குள் இருந்த மெல்லிய ஒளியில் எழுத்துக்கள் மங்கலாகத் தெரிந்தாலும் அதை படிக்க கூடியதாக இருந்தது.
அதில்
உன் முகம் பார்க்க தினமொரு ஏக்கம் உன்னை கற்பனைகள் செய்ய முடியவில்லை....
கனவுகளின் தேடல்கள்....
இந்தக் காதல் வெறும் காகிதக் கனவா...
என்ன சொல்வது வார்த்தை மொழிகளுக்கு அப்பாட் பட்டது நம் இருவரின் பயணம்...
உனக்கான இந்தக் கவி வரிகளில் மறைந்திருப்பது உன் மீதான என் காதல்....
முகமறியாக் காதலனுக்குச் சமர்ப்பணம்........
என்று எழுதப் பட்டிருந்ததை படித்த ஆதியின் மனம்
பட்டாம்பூச்சியாய் சிறகடித்துப் பரந்தது.
இத்தனை வருட காலம் காதலை அறியாமல் அன்பு செலுத்த நாதியற்று இருந்தவனுக்கு காதல் கரம் நீட்டுகிறாள் அவனவள்.
இங்கு காவேரி ஆற்றங்கரையின் தெரு ஓரத்தில் சிறு குடிசையில் தனது ஆடைகளைத் தலையனையாக்கி படித்திருந்த அபியின் கரங்கள் காகிதத்தோடு தன்னவனின் வார்த்தைகளையும் நெஞ்சோடு அணைத்து இருந்தது.
படித்திருந்த அபியின் கண்களில் நீர் கசிந்தது.
அது ஆனந்தக் கண்ணீரா, இல்லை தனக்கு இது நிலைக்குமா என்ற ஏக்கக் கண்ணீரா
இதை அவளே அறிவாள்.
வீடு வந்த ஆதியும் தனது மகிழ்ச்சியை ஜகனிடம் பகிர்ந்தவன் அவளது வரிகளை முணுமுணுத்தவாறு
தூங்கிப் போனான்.
தொடரும்...
.
✍️ Muhsina saththar.
No comments