யாதும் நீயே 05...
அவனவள்
"கடல் மாதா உன்னை ஏத்துக்க முதல் நான் உன்னை ஏத்துக்க உள்ளேன் "
என்று வாய் விட்டே கூறிய ஆதி
அவனது போனை எடுத்து அவளது நம்பருக்கு டயல் செய்ய அது முன்னமே" ஹனி " என்று சேவ் செய்யப் பட்டிருப்பதைப் பார்த்து மென்மையாக சிரித்தவன்
அவளுக்கு அழைப்பை ஏற்படுத்தினான்.
இங்கு காவேரி ஆற்றங் கரையில் இருளை வெறித்த படி அமர்ந்து இருந்தாள் அபிநயா
பிரம்மன் படைத்த பேரழகி அல்ல அவள்
மாநிறத்தை விட சற்று அதிகப் படியான நிறம் , பூசிய உடல்வாகு,
பிரம்மனே இவளை வேண்டாத படைப்பாக என்னினானே பேசும் போது சற்று என்ன அதிகப் படியாக திக்கிப் பேசும் தன்மை உடையவள்.
இதனாலேயே உறவுகளால் புறக்கணிக்கப் பட்டு வாழ்வே வெறுத்த நிலையில் அமர்ந்திருந்தாள்.
ஆனால் அப்போது அறியவில்லை மங்கையிவள் தன்னை தனக்காகவே நேசிக்க ஒருவன் இருக்கிறான் என்பதை.
அப்போது அவளது பழைய மாடல் நோக்கியா போன் ஒலியெழுப்ப " இப்படி பட்ட என்ன எல்லாரும் வெறுக்கத் தான் செய்வாங்க" என்று நினைத்தவள் போனைத் தூக்கி நீரில் வீசி எறிந்தாள்.
அவளது போன் சுவிட்ஸ் ஆப் என்று வரவே முகம் வாடிப் போனான் ஆதி.
ஜகன்" என்னடா டல்லா இருக்க "
ஆதி " அவ போன் சுவிட்ஸ் ஆப் என்று வருதுடா. அவளுக்கு ஏதாச்சும் ஆகி இருக்குமா
ஜகன் : " அப்படி இருக்காதுடா பீல் பன்னாத மச்சி நாளைக்கு இத எங்க எடுத்தியோ அங்க போய் பாரு "என்றான்.
அடுத்த நாள் விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் அவசரமாக கிளம்பிய ஆதி கடற் கடைக்குச் சென்றான்.
அங்கு அவள் நின்று பாடிய இடத்தில் அமர்ந்து இருந்த ஆதி தன்னவளுக்காக இரண்டு மணி நேரம் காத்திருந்தும் தன்னவள் வரவில்லை.
ஆதியை கடமை அழைக்கவே வேறு வழி இன்றி ஒரு காகிதத்தை எடுத்தவன் அதில் ஏதோ எழுதி அவளுக்காக கொண்டு வந்திருந்த வெள்ளை நிற ரோஜாவில் சுற்றி
அங்கு வைத்து விட்டு சென்றான்.
பல மணிநேரம் கடந்த பின்னர் கடலுக்கு தன்னையே பரிசளிக்க வந்த அபிநயாவின் கண்களில் கேட்பாரற்று காகிதத்தில் சுற்றுப் பட்டிருந்த வெள்ளை நிற ரோஜாவே தென் பட்டது.
அதைக் கையில் எடுத்த அபி காகிதத்தை பிரித்து படிக்க
நீ எப்படி இருப்பாய்
என்ன செய்து கொண்டிருக்கிறாய்....
என்னைப் போல உறவுகளை பாதியில் தொலைத்தாயா....
நான் என்றும் உனக்காய் இங்கு...
என்னை எப்போது காண்பாய் இல்லை உன்னைத் தான் நான் எப்போது காண்பேன்....
ஒரு வேளை இதற்கு முன்பு கண்டிருப்பேனா
புறக்கணத்தேனா
இல்லை இருவரும் சந்திக்கவே இல்லையா..........
தொலைதூரக் காதலாகி விடாதே.....
அபிநயா
என்று எழுதப் பட்டிருந்தது.
வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்தவருக்கு அவனது எழுத்துக்களே தொடர் கதையாகிப் போனது.
கண்களில் நீர் வடிய தனக்காகவே அன்பு செலுத்த ஒருவன் இருக்கிறான் என்ற நினைப்பே அபியின் மனதில் தித்திப்பாய்
இருக்க அந்தக் காகிதத்தை மடித்து கைகளுக்குள் வைத்துக் கொண்டு
தானும் ஒரு காகிதத்தில் சில வரிகள் எழுதி அதே வெள்ளை நிற ரோஜாவில் சுற்றியவள் அதே இடத்தில் வைத்து விட்டு சென்றாள்.
இங்கு ஒருவரையொருவர் அறியாமலே ஒருவருக்கு ஒருவர் காதலித்துக் கொண்டனர்.
தொடரும்...
✍️ Muhsina saththar.
No comments