யாதும் நீயே 04....
அவனவள்
சூரியன் தனது பூமிக் காதலியை முத்தமிட்டுத் தழுவிக் கொள்ளும் காலைப் பொழுது பூமியில் உள்ள சகல உயிரினங்களுக்கும் புத்துணர்ச்சியை மீட்டெடுக்க
ஆதியோ முழு பார்மல் உடையில் தன்னவளின் மடி தேடிச் சென்றான்.
அந்தக் கல்லறையை தன்னவளுக்குப் பிடித்த வெள்ளை நிற ரோஜாக்களால் அழங்கரித்தவன்
" அபி மா நீ இந்த உலகத்துல இல்லைன்னாலும் எனக்குள்ள தான் எப்பவுமே இருக்க டி
இந்த ஜென்மம் உன் வாசம் எனக்குள்ள இரண்டு வருசம் ஆனால் இரண்டு ஜென்மம் வாழ்ந்த பீல் வருது டி " என்று தன்னவளுடன் மானசீகமாக பேசிய ஆதி கடமை தவறாதவனாக ஹாஸ்பிடலுக்குச் சென்றான்.
ஜகன் வீட்டில் ....
தித்யாவுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த ஷீபா ஜகனிடம்" உங்க பிரன்ட நினச்சா ரொம்ப பாவமா இருக்குங்க. அவருக்கு என்று ஒரு வாழ்க்கைய அமைச்சி கொடுத்தா அவரும் சந்தோஷமா இருப்பாருல "
ஜகன்: " இந்த இரண்டு வருசத்துல அவன ரொம்ப கெஞ்சி பாத்துட்டன் டி. அவன் ஒத்துக மாட்டான் "
ஷீபா " அப்படி என்ன உலகத்துல இல்லாத காதல் நீங்க வேண்டா பாருங்க அடுத்த மாசமே ஒருத்திய இழுத்துட்டு வரத்தான் போறார் " என்றதும்
ஷீபாவின் கையில் இருந்த உணவுத் தட்டு கீழே சிதறிக் கிடக்க ஷீபா உணவு பிசைந்த கையால் கன்னத்தை பற்றியவாறு ஒரு மூளையில் சுருண்டிருந்தாள்
ஜகன் " அவனப் பத்தி, அவன் காதலப் பத்தி உனக்கு என்னடி தெரியும்" என்று விரல் நீட்டி எச்சரித்தவன்
" நம்ம லவ் மேரேஜ் தானே நீ எப்ப என்ன நேர்ல பார்த்த"
ஷீபா " ஐ டி கம்பெனில வர்க் பன்றப்போ"
ஜகன் " நீ என்ன நேர்ல பார்க்க முதல் காதலிச்சியா, இல்லை தானே ஆனா அவங்க காதலிச்சி கிட்டாங்க" என்று அவர்கள் காதலித்த விதத்தை சொல்ல ஆரம்பித்தான்.
அன்று ...
அபிநயாவின் போன் நம்பரை செவ் செய்த ஆதி அதை அன்றோடு மறந்து விட்டான்.
இடை இடையே அந்தப் பாடல் வரிகள் அவனை இம்சித்தாலும் அதை ஒதுக்கியவாறு தன் வேலைகளில் கவனம் செலுத்தினான்
இவ்வாறு ஒரு மாதம் கடந்திருக்கும்.
அன்று மாலைப் பொழுதில் சூரியன் மறையும் காட்சியை கடலோரத்தில் மணலில் அமர்ந்து ரசித்துக் கொண்டு இருந்தான் ஆதி .
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள சொர்க்கம் இருக்கு
அட சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு
என்ற பாடல் வரிகள் மீண்டும் அவனது செவிகளைத் தீண்ட
அந்தக் குரல் வந்த திசையை நோக்கி அவனது கால்கள் நகர ஆரம்பித்தன.
சிறிது தூரத்தில் ஒரு இளம் பெண் தனது முகத்தை மூடிக் கொண்டு பாடியவாறே
சில காகிதங்களை கடலினுள் வீசியவள் எழுந்து சென்று விட்டாள்.
மிகத் தொலைவில் இருந்து பார்த்த ஆதிக்கு அவளது வரி வடிவமே தென்பட்டது.அந்தக் காகிதங்கள் முழுமையாக நனைவதற்கு முன்பே
அதனை கையில் எடுத்துக் கொண்டான் ஆதி.
அந்தக் காகிதங்களில் முழுவதுமாக காதல் கவிதைகளே நிரப்பப் பட்டிருந்தது.
இந்த உலகம் மறைத்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் பல
அந்த ஆச்சரியங்களில் ஒரு அதிர்ஷ்டசாலி இருக்கிறான்......
அவன் தான் என்றவன்.
எங்கிருக்கிறான் என்பது தெரியவில்லை
சந்திப்பேனா மாட்டேனா என்பதையும் அறியவில்லை.....
சில சமயம் என்னைப் போல புறக் கணிப்பில் தள்ளப் பட்டிருப்பானோ.....
வாழ்வே வேண்டாம் என விரக்தியில் வாடியிருப்பானோ......
கண்ணீர் துளியால் கவிதைகள் எழுதி காகிதத்தை கிழித்திருப்பானோ....
நீ யாரென்று அறியாமலே என் விலா எழும்பால் படைக்கப் பட்ட உனக்கு நான் இருக்கிறேன் என சொல்ல ஆசை தான்.....
என்னைக் காண்பாயா நீ........
என்று அக் கவிதை முடிக்கப் பட்டிருந்தது.
அவளது எழுத்துக் களில் அவளையே நேசிக்க ஆரம்பித்து விட்டான்.
இருபது வருடங்கள் உறவின்றித் தவித்தவனுக்கு தனது எழுத்துக்கள் மூலம் தன்னையே பரிசலித்து விட்டாள் அவனவள்.
இரவு நேரம் வீடு சேர்ந்த ஆதி தனது அறையில் அடைந்து கொண்டு அந்தக் கவிதை களையே மீண்டும் மீண்டும் படித்தான்.
அப்போது வந்த ஜகன் " டேய் உன்னை எவ்வளவு நேரமா கூப்பிடுறேன் நீ என்னான்டா ஒரு பழைய பேப்பர் கூட குடும்பம் நடத்திக்கிட்டு இருக்க" என்று கத்தியது ஆதியின் செவிகளை அடையவில்லை.
காரணம் அவள் எழுத்துக்கள் தான் அவன் இதயத்தை அடைந்து விட்டதே.
அவன் கையில் இருந்த காகிதம் பறிக்கப் படவே சுற்றுப் புறம் உணர
தலை நிமிர்ந்து பார்த்தான்.
ஜகன் கையில் காகிதத்துடன் அவனை முறைத்துக் கொண்டிருந்தான்.
ஆதி " நீ எப்படா வந்த"என்று கேட்க
ஜகன் " நான் வந்தது கூட தெறியாத அளவுக்கு இந்த காகிதம் உனக்கு முக்கியமா" என்று அதைக் கிழித்து எறிய முற்பட
அதை நொடியில் கைப்பற்றிய ஆதி தனக்குள் ஏற்பட்ட உணர்வுகளை விவரிக்க ஆரம்பித்தான்.
" புதுசா லவ் பன்ன ஆரம்பிச்சாலே இதே தொல்லை தான் "என்று தலையில் அடித்து கொண்ட ஜகன்
" டேய் அடுத்த பேப்பரை படிச்சி பாருட , ஒருவேளை அவன பாத்துட்டாளோ என்னவோ " என்று கூற
" உன் வாயில நல்ல வார்த்தையே வராதடா கட்டையில போறவனே " என்று அவனை அர்ச்சித்த ஆதி அடுத்த பேப்பரை எடுத்து படிக்க ஆரம்பித்தான்.
அதில்....
கடல் மாதா என் சார்ந்த அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்து விட்டேன்.
இனி விரைவில் என்னையும் உன்னிடம் சமர்ப்பிக்கிறேன்.
என்னையும் ஏற்றுக் கொள்....
என்று அது முடிக்கப் பட்டிருக்க
அதைப் படித்த ஆதி
"கடல் மாதா உன்னை ஏத்துக்க முதல் நான் உன்னை ஏத்துக்க உள்ளேன்" என்று வாய் விட்டே கூறியவன்
அவளது தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்தான்.
தொடரும்...
✍️ Muhsina saththar.
No comments