Breaking News

யாதும் நீயே 03 ....


 

        அவனவள்  


           ஆதியின் நினைவுகளோ அபி இறந்த தினத்திற்கு அவனை அழைத்து சென்றது.

     அன்றைய தினம்...

          முற் பகல் வேளையில் ஹாஸ்பிடலில் இரண்டு மணி நேர விடுப்பு எடுத்து வீட்டுக்கு வந்திருந்தான் ஆதி.

  தனது அறைக்கு சென்றவன் கண்ணாடி முன் நின்று வெற்றி வகுட்டில் குங்குமம் வைத்த அபியை பின்னிருந்து அனைத்தபடி  அவளது மேடிட்ட வயிற்றை வருடினான் .

            அவளது காதருகே மீசை முடி உரசக் குனிந்தவன் "  ஐ.லவ்.யூ என்று கூறி கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

      சில நிமிடங்களில் அவன் புறம் திரும்பிய  அபியின் முகம் அவன் செய்த சேட்டையில் சிவந்து இருக்க " டைம் ஆச்சு வாங்க போலாம்"

" இது தான் லாஸ்ட் செக்கப். நெக்ஸ்ட் மன்த் நம்ம கூட நம்ம ஜூனியர் இருப்பாங்கல்ல அபி மா "  என்று அவளருகில் சென்று அவளது கண்ணத்தில்  அழுத்தமாக முத்தமிட்டான்.

( இது தான் அவளுக்கு அளிக்கும் கடைசி முத்தம் என்பதை அவன் அறியவில்லை பாவம்)

         அபியை காரில் ஏற்றி மெதுவாக காரை செலுத்திய ஆதி "  அபி மா  நம்ம ஜூனியர்ஸ்கு என்ன பேர் வைக்கலாம்"

அபி : " தித்யா , தினேஷ் " ( ஆம் அவள் வயிற்றில் வளர்வது இரட்டை உயிர்களே)

            இவ்வாறு இவர்கள் பேசிய படி செல்ல  இவர்களுக்கு முன்னே சென்ற லாரி ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து  இவர்கள் சுதாரிப்பதற்கு முன்னரே  இவர்களது காரில் வந்து மோதியது.

       மோதிய வேகத்தில்    அபி காரிலிருந்து வேளியே தூக்கி வீசப்பட  தனது உடல் முழுவதும் இரத்த வெள்ளத்தில் தனது இறுதி நொடிகளை எண்ணிக் கொண்டிருந்தாள்.     

     ஆதி தலை நெற்றியில் இருந்து இரத்தம் வழிய  கண்களில் கண்ணீர் ஆற்றாய் ஊற்றெடுக்க  ஓடிச் சென்று தன்னவளை மடியில் ஏந்திக் கொன்டான்.

   ஆதி: " அபி மா" என்றதும்  சிரமப் பட்டு கண்களை திறந்தவள் தன்னவனை தனது கண்களில் முழுமையாக நிறைத்துக் கொண்டு

" ஆதி நான் உன்னை விட்டு போனாலும் உன்னோட மூச்சு காத்துல கடைசி வரைக்கும் கலந்திருப்பன்" என்ற அபியின் உயிர் பறவை தன்னவனின் இரு உயிர்களுடன் அவளது உடலை விட்டுப் பிரிந்து சென்றது.

      அவளின் உயிர் உடலை விட்டு முழுவதுமாக பிரிய முன்னர் ஆதியின் தலையில் யாரோ பின்னிருந்து அடிக்க  அவன் அவ்விடத்திலேயே மயங்கிச் சரிந்தான்.

         அபியும்  தன்னவனை காப்பாற்றும் படி மானசீகமாக கடவுளிடம் வேண்டிய படி  தனது மூச்சை நிறுத்திக் கொண்டாள்.

        " அபி அபி  அபி மா" என்று முனுமுனுத்த ஆதி  கண்களை திறக்க   தலையில் பெரிய கட்டுடன்   ஹாஸ்பிடலில் ஐ சி யு

அறையில் படுத்திருந்தான்.


     தன்னவளின் கடைசி வார்த்தைகள் செவிகளில் அறைய 

கண்களில் கண்ணீர் சுரக்க" அபி மா" என்று எழுந்திருக்க முயன்றவனின்  கைகளை அழுத்தமாக பற்றிப் பிடித்த வார்ட் பாய் "  டாக்டர் சார் அவங்கள அன்னக்கே   அவங்க ரிலேடிவ் வந்து அடக்கம் பன்னிட்டு போய்டாங்க" என்றதும்

        ஆதியின் கண்கள் நாட் காட்டியில் பதிய விபத்து நடந்து இரு நாட்கள் கடந்திருந்தது.     

            ஆதி கூறி முடித்திருக்க   ஜகனின் கண்களும் கலங்கிப் போக தனது நண்பனை இருக அணைத்து கொண்டான்.  

    " மச்சி பீல் பன்னாதடா  "

ஆதி: " எப்படி டா பீல் பண்ணாம இருக்க சொல்லுற  என் அபி என்ன விட்டு போய் மூனு வருடம் ஆகுது . 

இந்த மூனு வருசத்துல அவளோட நினைவு இருந்தத்த விட அதிகமா தான் ஆயிருக்கு டா "

     ஜகன் :" அதனால் தான் என் பொண்ணுக்கு தித்யா ன்னு நேம் செலக்ட் பன்னியா "

     "ம்ம்" என்று முனுமுனுத்த ஆதி கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான்.

         அவனது  நினைவுகள் தன்னவளையே சுற்றி இருக்க

     அரை மணி நேரத்தில் அவனது சிந்தனையை கலைக்கும் விதமாக  கையில் உணவுத் தட்டுடன்  கட்டிலில் ஏறி அமர்ந்த தித்யா  தனது பிஞ்சுக் கரத்தில் உணவை அள்ளி ஆதியின் வாய்க்குள் திணித்தாள்.

     ஆதி அதை மென்றவாறு கண்களை திறக்க 

      அவன் கண்கள் கலங்கி இருப்பதைப் பார்த்த  தித்யா " என் டாடி தான் உன்ன அழ வைக்கிறாங்ஙளா."

என்று ஜகனின் புறம் திருபம்பியவள் பெரிய மனுசி தோரனையில் " ஏய் டாடி உனக்கு சமத்து பையனா இருக்க தெரியாது. என் டார்லிங்ங அழ வைக்கிற " என்று அதட்டியபடி 

ஆதிக்கு உணவை ஊட்டி முடித்தாள்.

       தித்யா        தான் அனிந்து இருந்த சட்டையை உயர்த்தி   அவனது வாயை துடைக்க  

         அபி அவளது சேலைத் தலைப்பால் அவனது வாயை துடைத்து விடுவது ஆதியின் நினைவுகளில் வந்து இம்சித்தது.

            ஆதியின் அழுத கண்கள் தூக்கத்திற்கு கெஞ்ச   தித்யாவை தனது கைகளுக்குள் வைத்த படி  படுத்துக் கொண்டான்.

        தித்யாவும் அவனது கேசத்துக்குள் விரல்களை நுழைத்து கோத  அவனை நித்ரா தேவியும் சுகமாக ஆட்கொண்டாள்.


                  தொடரும்.....


✍️  Muhsina saththar.

No comments