Breaking News

யாதும் நீயே.. 02

 

 

        அவனவள்   02  

           விட்டத்தை பார்த்து படுத்திருந்தவனின் கடை விழியோரம் நீர் சிந்த அவனது நினைவுகளோ ஐந்து வருடங்கள் முன்னோக்கி சென்றது.


ஐந்து வருடங்களுக்கு முன்னர்....


          கதிரவன் பூமா தேவியுடன் காதல் புரிந்து கொண்டிருந்த காலைப் பொழுதில்  கல்யானி மருத்துவ மனையில் இருந்து நைட் டியூட்டி முடித்து விட்டு வந்திருந்த ஆதி ( ஆதித்ய வர்மன்)   கடற்கரையில் காரை நிறுத்தி தென்றல் காற்றை ரசித்துக் கொண்டிருந்தான்.


 அப்போது  பச்சைக் கிளிகள் தோளோடு


பாட்டுக் குயிலோ மடியோடு பூலோகம் ஆனந்தத்தின் எல்லை


இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை


 என்ற பாடல் வரிகள் தென்றல் காற்றில் மிதந்து வர 


       அதில் மனம் மயங்கிய ஆதி காரை விட்டு இறங்கி  அந்தக் குரல் வந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். 


       சில நிமிடங்களில் அந்தப் பாடல் வரிகள் நின்று விட


சிறிது தூரம் நடந்த ஆதியின் கண்களில் கடல் அலையில் சிக்கி சின்னா பின்ன மாகிக் கொண்டிருந்த சில காகிதங்கள் தென்பட்டது. 


 " இது என்னவா இருக்கும்" என்று யோசித்த ஆதி அதைக் கையில் எடுத்ததும் புரிந்து கொண்டான்  அது சில சர்டிபிகேட் என்று 


    அதில் அபிநயா என்று பெயர் இடப்பட்டிருக்க  அவளது தொலைபேசி இலக்கம் அதன் கீழ் இருந்தது.


  அதை தனது போனில் சேவ் செய்து கொண்ட ஆதி  தன்னை அறியாமலேயே  " ஹனி" என்று பெயரிட்டு கொண்டான்.


         இதை சிந்தித்து பார்த்தவன் கண்கள் கண்ணீரை சொரிய


       அதைக் கலைக்க என்றே அவனது கன்னங்களில் வழிந்த  கண்ணீரை இரு பிஞ்சு விரல்கள் துடைத்து விட்டது.


 அதில் சிந்தனை கலைந்தவன் எழுந்தமர  அவனின் எதிரே 

மூன்று வயதே ஆன தித்யா டெடியை கட்டியனைத்த படி நின்றிருந்தாள்.


" ஏய் நீ பேட் பாய். குட் பாய் அழமாட்டாங்க. எங்க டேடி மாதிரி"


ஆதி: " தித்யா குட்டி நான் இனி அழமாட்டேன்." என்று அவளை இறுக்கமாக அனைத்துக் கொண்டான்.


       இந்தக் காட்சியை கண்ட ஜகனின் கண்கள் கலங்கிப் போக தனது நண்பன் ஆதியின் தோளைத் தட்டிக் கொடுத்தான்.  



ஜகன் தித்யாவிடம் திரும்பி " குட்டிமா அம்மா கிட்ட போடா. அப்பா அன்கில் கிட்ட பேசிட்டு வாரேன்"


தித்யா : " ஓகே டாடி"


    தித்யா போனதும் ஆதியிடம் திரும்பி"எதன்னாளைக்கு இப்படியே இருக்கப் போற"ஜகன் கேட்க


ஆதி :"   அவ என்னோட மூச்சுல கலந்திருக்கா மச்சி . என் கடைசி மூச்சு வரைக்கும் இப்படி தான் "  


     ஜகன் சொல்வதறியாது இருக்க ஆதியோ மேலும் தொடர்ந்தான்.


" டேய் கடைசியா கூட அவ முகத்தை பார்க்க எனக்கு குடுத்து வைக்கலடா. அவளுக்கு இறுதி காரியம் கூட என்னால் பன்ன முடியலடா


ஜகன்: " என்ன சொல்லுற எனக்கு புரியவில்லை"


             ஆதியின் நினைவுகளோ அபி இறந்த தினத்திற்கு சென்றது 


                   தொடரும்...


✍️  Muhsina saththar.

No comments