வெறுமையாகிப் போயுள்ள
ஒருவரின் இடைவெளிகளை
ஆசுவாசப்படுத்துவது அத்துனை அழகானது
சிலபோது வார்த்தைகள் தேவைப்படுவதில்லை அதற்கு
மௌனமான அருகிலிருப்பும் கூட
ஆறுதலாகிடும்
உங்களுடைய அருகாமை
ஒருவருடைய இதயத்துடன் பேசக்கூடியதென்றால்
நீங்கள் தான் அழகானவர்
அழகானவர்களாக இருப்போம்.
✍🏻பின்த் நசீர்...
கொழும்பு
No comments