Breaking News

எனக்குத் தெரியும் இது என்றோ ஒரு நாள் நடந்தேறும்..


 எனக்குத் தெரியும் இது என்றோ ஒரு நாள் நடந்தேறும் என்று,

ஆனால் சத்தியமாய் நினைக்கவில்லை அது இன்றே நிகழும் என்று. 

சில நியதிகளை அப்படியே ஏற்றுக்கொள்வது தான் எல்லோருக்குமே நல்லதில்லையா?


ம்ம் சரி இப்போதிலிருந்து இப்படியே 

யார் யாராகவோ இருந்து கொள்வோம்.


இனி  மேல் சந்தித்துக் கொள்ள வேண்டியதில்லை, 

நலம் விசாரிக்க வேண்டியதில்லை ,

நினைவிருக்கிறதா என அடிக்கடி நினைவு படுத்திக் கொள்ள வேண்டியதிலை,


நாள் முழுக்கப் பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை, 

இனி எதுவுமே வேண்டியதில்லை.

நடக்க வேண்டியவை தான் நடந்தாயிற்றே  இனி யாரோவாகக் கடக்க வேண்டியது தான் இல்லையா?


அப்படித்தானே?   சரி, புறப்படுங்கள்.


-அரூஸா ஜெவாஹிர்-

No comments