Breaking News

உங்களுடைய அன்புக்கு தகுதியில்லாதவங்களுக்காக..

 

உங்களுடைய அன்புக்கு தகுதியில்லாதவங்களுக்காக தற்கொலை செய்து உங்களை நீங்களே காயப்படுத்தி  உங்களுடைய பெற்றோரை தண்டிக்க வேண்டாம்.

உண்மையான உறவுகளுக்கு தான் வலிக்கும்;நீங்கள் யாருக்காக உங்களை காயப்படுத்தினீர்களோ தற்கொலை செய்ய நினைத்தீரோ முயற்சித்தீரோ அவர்கள் உண்மையாக உங்களை நேசித்திருந்தால் இப்படி விட்டு சென்று இருக்கமாட்டார்கள்.

உங்களுக்கு இவ்வளவு பெரிய வலியை தந்திருக்கமாட்டார்கள்.உங்கள் அருகில் இப்போது அவர்கள் உங்களுக்காக இருந்திருக்க வேண்டும் அல்லவா?ஆனால் அவர்களை காணோமே...

ஆனால் இப்போது உங்கள் அருகில் இருப்பவர்கள் பெற்றோர் தான்;அப்போதும் எப்போதும் உங்கள் அருகில் உங்களுக்காக இருப்பவர்கள் அவர்கள்தான்.அவர்களுக்கு நீங்கள் தான் உயிர்.

பொய்யான உறவுகளுக்காக உங்களை காயப்படுத்தி உங்களை அழித்து உங்களுடைய பெற்றோருக்கு அந்த உண்மையான அன்புக்கு தண்டனையை எப்போதும் கொடுத்துவிடாதீர்கள்

அ.பாத்திமா சிமாறா நிந்தவூர்

No comments