பேரழகி அவள் ..
காதிலும் கழுத்திலும்
பேராபரணம் கலகலக்க
மலர்ச்செண்டு போல்
மணம் கமழும் அழகியல்ல
அவள்
எதிரில் வருவோரை மீண்டுமோர்
முறைப் பார்த்திடச் செய்யுமளவு
அழகுமல்ல அவள்
வர்ணங்கள் களைகட்டும்
மயில்த் தோகை கருமையானது போல் கூந்தல் கொண்டவளுமல்ல அவள்
அமாவாசையில் ஊரே
ஒளியிழந்து கிடக்கச் சட்டனத்
தோன்றி வியக்க வைக்கும்
முழு நிலவு போன்ற கன்னங்கள்
கொண்டவளுமல்ல அவள்
அடர்ந்த புருவங்களும்
காந்தக் கண்களும்
பெற்ற அழகியுமல்ல அவள்
ஆனால் அவளோ
பேரழகி
பெண்ணினமே கண்டு வியக்கும்
நாணம் கொண்ட பேரழகி
கோபத்திலும் வார்த்தைகளைக்
கவனித்துப் பேசும் பொறுமை
கொண்ட தனியழகி
கருமைத் தோல் போர்த்திப்
பார்வையிலும் பணிவு தோன்றும்
ஓரழகி
ஆடையிலும் அடக்கம் பேணி
குரலிலும் தாழ்மை பூணும் ஒழுக்கம் கொண்ட மாறழகி
ஆக அவள் அழகியல்ல
பேரழகிதானே...
✍🏻ஷபானா ஆதம்லெப்பை
(ஓட்டமாவடி)
No comments