தேவதையின் விழிகள் 01..
விழிகள் 01
மங்கையவள் பூமியின் புத்துணர்ச்சி யை மீட்டெடுக்க காதலனவன் கதிரவன் தன் ஒளிக் கதிர்களை பூமியில் வீசிக் கொண்டிருந்தான். அந்த பெரிய வீட்டின் ஒரு அறையில் ஜன்னல் கண்ணாடிகளினூடாக சூரியக் கதிர்கள் ஊடுருவிக் கொண்டிருக்க கட்டிலில் தலை முதல்
கால் வரை பெட்ஷீட்டால் மூடி தூங்கிக் கொண்டிருந்தான்.
அந்த அறை கதவை திறந்து கொண்டு வந்த மங்கையவளின் கொழுசொலி செவிகளை தீன்ட கண்விழித்தான். ஈரக் கூந்தலை டவலில் அள்ளி முடிந்தவாறு இளஞ்சிவப்பு நிறத்தில் புடவை அனிந்து கையில் காபி கப்புடன் உள்ளே வந்தாள் .
"மித்ரா காபி குடிக்க"என்ற குரலில் தலை நிமிர்ந்து அவளது விழிகளை கண்டவன் முகத்தில் ஒரு ஜாக் குளிர்ந்த நீர் தெறிக்க வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தமர்ந்தவன் இடுப்பில் கையை குற்றியவாறு முறைத்துக் கொண்டிருந்த தனது அண்ணையை கண்டு "ஓ கனவா" என்று தலையில் அடித்து கொண்டு "ஏ ராஜிம்மா இப்படி பன்னிட்ட "ஏன்று கனவு களைந்த கடுப்பில் கேட்டான். ராஜி : "ஏன்டா". மித்ரா : "போம்மா ஒரு தேவதை வந்தாம்மா " ராஜி : "அவ முகத்த பாத்தியாடா இல்லை எப்போதும் போல கோட்ட விட்டியா ". மித்ரா : " ம்மா அதுக்குள்ள தான் நீ வந்துட்டயே" என்று ராஜியின் கைப்பிடித்து இழுத்து கட்டிலில் அமரவைத்தவன் இடுப்பை சுற்றி அனைத்துக் கொண்டு மடியில் முகம் புதைத்து விட்ட தூக்கத்தை தொடர்ந்தான். மகனின் சிறுபிள்ளை தனத்தில் சிரித்தவாறு அவனின் தலையை கோதிக் கொண்டே "டேய் கண்ணா எந்திரிடா அந்த சொட்டையன் வேற விடாம கால் மேல் கால் பன்னிட்டே இருக்கான்" சொட்டையன் என்றதில் ஒரு நொடி திகைத்தவன் பின்பு சிரித்து விட்டு எழுந்தான்.
அப்போது தான் கையில் நீர் குவளையுடன் கட்டிலின் மறைவில் நின்றிருந்த அஜயை கண்டவன் முறைத்துக் கொண்டே "எல்லா ஓ வேலை தானா" அஜய் : " ஈஈஈ அண்ணிய கனவுலயும் கரெக்ட் பண்ண முடியலயா " என்றதும் பாய்ந்து சென்று அவனது தோள்களை தட்டியவாறே " வாடா ராசா வா " என்று அவனை இழுத்தவாறே பாத்ரூமிற்குள் நுழைந்தான். " அம்மா காப்பாத்தும்மா " என்று கத்தியவாறே அண்ணனின் பின்னால் இழுபட்டுச் சென்றான் அஐய்.
மகன்களின் விளையாட்டை பார்த்து சிரித்துக் கொண்டே " ஏ புள்ளைங்க எப்பவும் இப்பிடியே சந்தோஷமா இருக்கனும்" என்று கடவுளுக்கு அவசரமாக ஒரு வேண்டுதலை வைத்து விட்டு அடுக்குகளைக்குள் நுழைந்தான்.
ராஜி சமைத்தவற்றை டைனிங் டேபிளில் பரத்திக் கொண்டுருக்க காகி உடையில் மிடுக்கான தோற்றத்துடன் வந்தான் மித்ரன். அவனின் பின்னே கேப்பை தலையில் அனிந்து கையில் துப்பாக்கியுடன் செல்பி எடுத்தவாறே வந்தான் அஜய்.
தம்பியின் சேட்டையில் சிரித்த மித்ரன் அவனது தலையில் கொட்டி விட்டு ராஜி பரிமாறிய உணவை உண்டான். ராஜியின் சேலைத் தலைப்பில் கைதுடைத்துக் கொண்டு " பாய் மாம்" என்றவன் அஜயின் தோளில் கை போட்டு சென்று ஜீப்பை ஸ்டார்ட் செய்து அஜயை காலேஜில் இறக்கி விட்டு போலீஸ் ஸ்டேஷன் நோக்கி வண்டியை செலுத்தினான்.
✍️ Rs musha
No comments