அணில்களின் குடும்பவியல் வாழ்வமைப்பு மிகவும் அற்புதமானது.
அணில்களின் குடும்பவியல் வாழ்வமைப்பு மிகவும் அற்புதமானது. அன்பு, பாசம், பரிவு, காதல், கவனிப்பு என நல்தோர் குடும்ப வாழ்வுக்கான அத்துனை குணாதிசயமும் பொங்கி வழியும் அணில் தம்பதிகளின் குடும்ப வாழ்க்கை மானிடமாகிய நமக்கு நல்லதொரு முன்மாதிரியாக திகழ்கின்றது.
பெண் அணில் எப்போதும் தனக்கும் தனது குட்டிகளுக்கும் உணவு தேடி களைப்போடு கூடு வரும் ஆண் அணிலை முத்தங்கள் கொடுத்தும்,கெஞ்சிக் குலாவியும் வரவேற்குமாம். ஆண் அணில் எப்போதும் பெண் அணிலுக்கு அழகிய மலர்களையும், பாதாம் கொட்டைகளையும் பரிசுகளாக கொடுத்து அன்பை வெளிப்படுத்துமாம்.
பெண் அணிகள் எங்கயாவது அனாதரவான குட்டி அணிலைக் கண்டால், உடனடியாக உணவு தேடி வந்து கொடுக்குமாம். மூன்று நாள் பார்த்து விட்டு, தாய், தந்தை அற்ற அநாதை என்று உறுதி செய்த பிறகு அதனை தனது கூட்டுக்கு அழைத்துச் சென்று உணவளித்து, தன் குட்டிகளில் ஒன்றுபோல குதூகலமாக வாழவிடுமாம்.
பொதுவாக அணில்கள் தாங்கள் மண்ணுக்கடியில் சேமித்து வைக்கும் விதைகளில் பாதி மரங்களாகவும், செடிகளாகவும் வளர்ந்து நமது பூமிக்கு வளம் சேர்க்கின்றன என்பது ஏற்கனவே நாம் அறிந்த விடயம்!
அணிலிடமிருந்து மனிதர்களாகிய நாம் எவ்வளவு பாடங்கள் கற்றுக
No comments