Breaking News

காலகட்டுக்களால் விலகியிருந்து ரசிப்பவர்கள் அவர்கள் தான்...


நம்மை புரிந்தவர்கள் மாத்திரமே நமது கோபத்தையும், விட்டுக்கொடுப்பையும்,

நமது மௌனத்தையும், அந்த மௌனத்தில் மறைந்திருக்கும் ஆயிரக்கணக்கான வலியையும் ,  அதன் காரணத்தையும் புரிந்து கொள்ள முடியும்.

இது போன்ற உறவும் எவ்வளவோ நாம் ஒதுக்கிய பின்பும், விரட்டிய பின்பும்,அவமானப்படுத்திய பின்பும்,ஒதுக்குகின்றார்கள் என தெரிந்தும் கூட  மீண்டும் மீண்டும் எல்லாம் சரியாகிவிடும் என்ற அதீத அன்பின் நம்பிக்கையிலும் ஒட்டிக்கொள்ள துரத்திக்கொண்டு ஆவலுடன் எதிர்பார்ப்புடன் வரும்  உறவும் எப்போதும் உண்மையான உறவாகும்....

உங்களிடத்தில் ஆயிரம் உறவுகள் இருந்தாலும் கூட இவ்வாறான உறவுகள் அதிலும் மேலானவை அல்லாவா? 

இதுபோன்ற உறவுகள் எதிலும் காணலாம் சாகோதரர்களில், பெற்றோர்களில், காதலர்களில், நட்பில் என...அது ஒரு உறவாக தான் இருக்கும் உங்களுக்கான உண்மையான உறவாக தான் இருக்கும்... 

இவ்வாறான உறவுகள் கிடைப்பது கடினம் இருப்பினும் கிடைத்தால் விட்டுவிடாதீர்கள்;அவர்களை புரிந்து கொள்ள முயற்சியாவது செய்யுங்கள்...

இல்லையென்றால், காலப்போக்கில் அவர்களும் நீங்கள் ஒதுக்க ஒதுக்க ஒதுங்கி போய்விடுவார்கள்.

நீங்களே தேடி போனாலும்- அதே அன்பும் அக்கறையும் புரிதலும் அவர்களிடத்தில் இருந்தாலும் கூட; விலகித் தான் இருப்பார்கள்.

ஆமாம்,

விலகியிருந்து ரசிப்பவர்கள் அவர்கள் தான்...!

அ.பாத்திமா சிமாறா

நிந்தவூர்


No comments