Breaking News

வேறொருவரின் வெற்றி உங்களை எப்படி உணர வைக்கிறது?


 அதே அளவு முயற்சி நீங்களும் செய்து இருப்பீர்கள். சில சமயத்தில் நம்மால் அடைய முடியாத இலக்கை மற்றவர்கள் அடையலாம். முடிவுகள் நபருக்கு நபர் வேறுபடும்.


 மற்றவர்கள் அவர்கள் விரும்பிய இலக்குகளில் வெற்றி பெறுவதைப் பார்க்கும்போது நாம் எங்கே தவற விட்டோம் என அடிக்கடி நினைத்திருப்பீர். சிலர் பொறாமை படுவதும் உண்டு. மற்றும் சிலர் பாராட்டுவதற்கு பதிலாக அவர்களின்  குறைகளை கண்டுபிடிக்கவே முயற்சிக்கின்றனர்.


 சில சமயம் இது கடினமாக இருந்தாலும், நீங்கள் அடைய  இருக்கும் இடத்தை யாராவது அடைந்திருந்தால் அவர்களின் முயற்சியை பாராட்டுங்கள். அவர்களின் வெற்றிக்கான காரணங்களை தேடுவதை தவிர்த்து, அதற்கு பதிலாக அவர்களின் அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்டு, உங்களை மேம்படுத்தி, அதை உங்களின் உந்து சக்தியாக மாற்றி, அந்த இலக்கை அடைய முயற்சி செய்யுங்கள்.


நான் நுஸ்ஹா அஸீம்

 

No comments