ஹலோ! "நீங்கள் சாப்பிட்டீர்களா?"
தென் கொரியாவில், ஒரு நபரை சந்தித்தால், "எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்பதற்குப் பதிலாக, "நீங்கள் சாப்பிட்டீர்களா?" என்றுதான் கேட்பார்களாம்.
காரணம், பசி என்பது மனித மனநிலையுடன் தொடர்புடையது என்று அவர்கள் நம்புகின்றனர். (காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு) என ஏதாவது ஒன்றை தவறவிடுவதை உளவியலை பாதிக்கும் ஒரு அபாய எச்சரிக்க என்றே நம்புகின்றனர்.
"சாப்பிடவில்லை" என்று நீங்கள் பதிலளித்தால், நீங்கள் மோசமான மனநிலையில் இருக்கிறீர்கள் என்று உங்களை உங்கள் பாட்டில் விட்டுவிடுவார்கள். அல்லது முடியுமானால் உங்களுக்கு உணவைக் கொண்டு வந்து தருவார்கள்.
இந்த வழக்கம் வருவதற்கான வரலாற்றுக் காரணம் என்னவெனில், 1950 களின் முற்பகுதியில், கொரியப் போருக்குப் பிறகு பெரும் பட்டினியும் பஞ்சமும் ஏற்பட்டது. அவர்கள் யாரைச் சந்தித்தாலும் "நீங்கள் சாப்பிட்டீர்களா?" என்று கேட்பது வழக்கமாகியது. அவர் ஆம் என்று பதிலளித்தால், அவர் நலமாக இருப்பதை தெரிந்துகொள்வார்கள்.
இப்போதைய நிலமை கருதி எமது சிங்கார தேசத்திலும் மக்கள் இதனை அமுல்படுத்துவது நல்லது என நினைக்கிறேன்!
No comments