கண்களுக்கு தெரியா பல வேர்களின் நிலை!
எவ்வளவு தான் பல எதிர்பார்ப்பும் அன்பும் வைத்து யுகயுகமாக காத்திருந்தாலும் காலம் போக போக அந்த தனிமையின் ஏமாற்றம் பழக்கமாகிறது.
காலம் கடந்த பின் அது கிடைத்தாலும் கூட
வலிக்கான மருந்தாய் அமைந்தாலும் கூட அதே அன்பும் ஆவலும் மாறப்போவதில்லை.
ஆனால் மனம் ஏதோ ஊமையாகி விடுகிறது.
காரணம்
எல்லாம் பழகிடுச்சு என்று தான்.
எவ்வளவோ வலிக்கான மருந்தாய் அமைந்தும் எவ்வளவோ பல்லாயிரக்கணக்கான மிஸ் யூ மிஸ் யூ என்று மனம் அடித்துக்கொண்டு இருந்த போதிலும் மீண்டும் கிடைத்துவிட்டது என்று மனம் துள்ளிகுதித்த போதிலும் அந்த சந்தோசத்தை மனம் ஒரு ஓரமாகவே தள்ளி வைக்க முயலுகிறது.
காரணம்
எல்லாம் பழகிடுச்சு என்று தான்.
இங்கு எந்த அன்பும் பொய்யாவதில்லை ஏமாற்றுவதுமில்லை மாறுவதுமில்லை
மாறாக அன்பானவர்களே பொய்யாகின்றார்கள் ஏமாற்றுகின்றார்கள் மாறுகின்றார்கள்.
காலப்போக்கில் இவைகளை மீட்டிப்பார்க்கும் போது அந்த அன்பின் துளிர் இன்னும் உயிரோடு இருப்பதை உணரலாம் ஏனென்றால் உண்மையான அன்பு என்றும் அழிவதில்லை அது ஏதோ ஒரு காரணத்தால் மறைக்கப்படுகிறது அவ்வளவு தான்.
அ.பாத்திமா சிமாறா
நிந்தவூர்
No comments