எண்ணமும் எழுத்தும்..
எழுதுங்கள்!!
எழுதிக் கொண்டே இருங்கள்!!
உங்கள் எழுத்துக்களுக்கு
சோர்வையும் சலிப்பையும்
தந்து விடாமல் எழுதுங்கள்!!
விருப்பக் குறீயீடுகளும்,
கருத்துகளும் கிடைக்கவில்லையென்று
உங்கள் எழுத்துக்களுக்கு
முற்றுப் புள்ளி வைத்து விடாதீர்கள்!!
எழுதுங்கள்!!
உங்கள் எழுத்துக்கள்
வாசித்துப் போகும் யாரோ ஒருவருக்கு
காயம் ஆற்றும் மருந்தாகலாம்!!
மன வலிகளுக்கு ஆறுதலாகலாம்!!
நிராகரிப்பைச் சந்தித்தவர்களுக்கு
அரவணைப்பைத் தரலாம்!!
அவமானங்களைத் தழுவியவர்களுக்கு
அமைதியைத் தரலாம்!!
தோல்வியைச் சந்தித்தவர்களுக்கு
வெற்றிக்கான விழிப்புணர்வைத் தரலாம்!!
அன்பில்லாதவர்களுக்கு
அன்பைக் கற்றுக் கொடுக்கலாம்!!
இப்படி வாசித்துப் போகும்
யாரோ ஒருவருக்கு
நேசமிக்கதாய் உங்கள் எழுத்துக்கள்
பலமிக்கதாய் இருந்திருக்கலாம்!!
ஆதலால் எழுதுங்கள்!!
எழுதிக் கொண்டே இருங்கள்!!!
✍️ ரசூல்நிஷா அலி
No comments