நாம் இன்று ரசித்துக் கொண்டிருக்கும்..
நாம் இன்று ரசித்துக் கொண்டிருக்கும் பட்டாம் பூச்சி ஆரம்பத்தில் அருவருப்பான கூட்டுப் புழுவாக இருந்தது தான்...
முடிந்தவரை கடினமான பாதைகளைக் கடந்து வர முயற்சி செய்யுங்கள்...
நீங்களோ நானோ அறியாதது தான் இனி வரப்போகும் நாட்கள்...
அழகிய பாதைகளை சில வேளைகளில் காண நேரிடும்...
நீங்கள் வடித்த கண்ணீரில் உங்கள் கால்களை ரணமாக்கிய முற்களே பூக்களாக மலர்ந்திருக்கலாம்...
படைத்தவனைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள்
எம் எதிர்காலத்தை..
முடிந்தவரை பொறுமையுடன் காத்திருப்போம்.
பிறர் பெருமைப்பட இறைவன் எமை வாழ வைப்பான்...
✍️ சுமையா சத்தார்.
No comments