வாழ்க்கை கற்றுத்தந்தது வாழ்வதற்கான கலையினை...
அவள் ஒரு புதுமைப்பெண் தான் ஏதுவாய் தானிருக்கேன் என்று கூறுவிட குலமற்று குயிலாய் வானில் சிறகு விரித்து பறந்தவள்.
எம்மைச்சுற்றி எத்தனை உறவுகள் இருந்தாலும் உதவிட ஆறுதலாக யாருமில்லாத போது மனதில் தோன்றும் ரணம். தான் மடிந்தாலும் நல்லதே நினைவூட்டும் ஒருகணம். அன்றும் ஆணவம் பிடித்த பிசாசுகள் கூறும். உன்னைக்காண்டால் விடியலும் இருளாகும். இவ்வாறு கூறுபவர்கள் ஒருஇரவேனும் இருளில் கழித்திருப்பார்களானால் புரிந்து கொள்வார்கள் விடியலும் வித்தைதான் என. அன்று கூறிய அவர்களை இன்று காணவில்லை ஆனால் விடியலின் துணையோ இவளிடம். உன்னால் என்னதான் செய்திட முடியுமென இன்னொரு ஒலி தெரிக்க.கண்ணால் நீரருவியும் ஊற்றாய் ஊர்ந்திட
உறங்குகிறாள் தன்னை மறந்து. விழித்திடும் நேரம் கண்ணீரும் கலைந்து காகிதமானதாம். இப்போது அவளிடம் காசும் காகிதமாய் கொட்டிட கதிகலங்கி நின்றார்களாம் கனைத்த கழுதைக்கூட்டமும். விதி அவள் முன் விளையாடிட சதி பின் தொடர்ந்து துரத்திட துயரம் தாங்க முடியாது சற்று நின்று சிந்திக்க விதியும் சதியும் தோற்றுவிலகி தோழமையாய் தோல்கொடுத்ததாம் வாழ்க்கைப்பாடமும். வலியில் வழிதேடி வல்லமை படைத்திட வாழ்ந்து காட்டிய அவளோ ஓர் புதுமைப்பெண் தானே....
வாழ்க்கைப்பயணத்தில் கற்றுக்கொள் வாழ்வதற்கான கலையினை...அவ்வித்தையில் உன்னை தாண்டி ஜெயித்திட வீரனுமில்லை உலகில்...
✍️ அன்ஷியா
No comments