இதயங்களே.....
ஆழ்ந்த உறக்கத்தை தேடி
தலையணையை நாடும் இரவுகளில்
சில நினைவுகள் மனதில் ஊடுருவும் பொழுது
நம் சிந்தனைகளை நிம்மதியின் பக்கம் சாயவிடாமல் பரிதவிக்க விட்டுவிடுகிறது.
அந்த நினைவுகளை
மறக்கவும் முடியாமல்
மறைக்கவும் முடியாமல்
யாரும் அற்ற தனி அறையில்
கண்ணீரால் கதை எழுதும்
ஒவ்வொரு இதயங்களும் நினைவில் கொள்ளுங்கள்
உங்கள் இறைவன்
உங்களுக்காக இருக்கிறான் என்பதனை.
✍🏻அகீலா ஜவுபர்
ஏத்தாளை புத்தளம்.
No comments