Breaking News

வாசிகசாலை..


 

எழுதி விட்டு இறந்து போன பலரை சந்திக்க கிடைத்தது.


ஒவ்வொரு புத்தகத்திற்குள் இருந்தும் வெவ்வேறு மனிதர்கள் வெளியாகிக் கொண்டே இருந்தார்கள் .


இன்னுமும் அங்கே தான் 

அதே வாசிகசாலையின் 

ஒரு மூலையில்  தான் 

நான் பாரதியோடு கைகுலுக்கிக் கொண்டு நிற்கிறேன். 


இங்கே பாரதியும் இருக்கிறான் 

பாரதி தாசனும் இருக்கிறான். 


பித்தனும் இருக்கிறான் 

புதுமைப் பித்தனும் இருக்கிறான். 


கம்பனும் இருக்கிறான் காளமேகமும் இருக்கிறான்.


கண்ணதாசனும் இருக்கிறான்

வண்ணதாசனும் இருக்கிறான். 


அண்ணாவும் இருக்கிறான்,

அப்துர்ரஹ்மானும் இருக்கிறான்.


வால்மிகியும் இருக்கிறான், 

வள்ளுவனும் இருக்கிறான்.


கி.ராவும் இருக்கிறான்,

நா.முவும் இருக்கிறான் 


 ஐன்ஸ்டீனும் இருக்கிறான், அரிஸ்டோடிலும் இருக்கிறான்.


பிளினியும் இருக்கிறான்,

பிளேட்டோவும் இருக்கிறான்


தாமஸ்மோரும் இருக்கிறான், 

சாமுவேல் ரிச்சர்ட்சனும் இருக்கிறான்.


ஷேக்ஸ்பியரும் இருக்கிறான், 

சார்லஸ் டிக்கன்ஸும் இருக்கிறான்.


ஏன் முஹம்மதும் இருக்கிறார் புத்தனும் இருக்கிறார்.


அவர்கள் மட்டுமல்ல 

இன்னும் எழுதிவிட்டு இறந்து போன எத்தனையோ பேர் இங்கே உயிரோடு இருக்கிறார்கள்.


நீங்களும் வந்தால்  சந்தித்துக் 

கை குலுக்கிக் கொள்ளலாம் .


-அரூஸா ஜெவாஹிர்-

No comments