ஓர் பெண் போல் இருந்து கொள் என்கிறார்கள்..
ஓர் பெண் போல் இருந்து கொள் என்கிறார்கள்
ஓர் பெண்ணாய் இருத்தலென்பது
அவர்கள் பாணியில்,
அடக்கம் வேண்டாம் அடங்க வேண்டும்
என்பதே
கல்வி வேண்டாம் கண்ணைக்
கசக்கி நிற்க வேண்டும் என்பதே
ஆசைகள் வேண்டாம் நாம் கூறுவதை ஆமோதித்தல் போதும் என்பதே
பிடிக்க வேண்டாம் பிடித்துக்
கொடுத்ததைப் பிடித்ததாக்கிக் கொள் என்பதே
குரல் உயர்த்தலாகாது
குற்றக் குற்றக் குனிய வேண்டும் என்பதே
ஆக அவர்கள் பெண்ணாய் இரு என்பது
பெண்ணாய் அல்ல
ஓர் மண்ணாய்
ஓர் மரமாய் அத்தனையையும்
தாங்கிக் கொள் என்பதே
இன்னும்
அவள் ஆசைகள் அகற்றி
அவள் ஆனந்தம் துறத்தி
அவள் அடிமை ஒப்பமிட்டுக் கொள்ளத்
திணிக்கிறார்கள்
இதற்காய் அவர்கள் பயன்படுத்தும் ஓர் வார்த்தை "பெண் போல் இருந்து கொள்" என்பதே...
✍🏻ஷபானா ஆதம்லெப்பை
(ஓட்டமாவடி)
No comments