Breaking News

புரியாத புதிர்

 

வலி உணராது 

வாழ வழியேது 

வாராய்.....! 


விருட்சமே ஆயினும் 

இறுகிய மண்ணில் 

குறுதி சிந்தினால் தான் 

இருப்பிடம் 

என்பது 

இடம் பிறக்கும்....


இரு விழி 

இன்னும் 

இறக்காமல் இருப்பது 


தென்றல் 

இடை விடாது 

தடை தாண்டி


உன் கூந்தல் 

அசைய வளைவதால் 

தான்....


முட்கள் முற்றிய 

பாதை தேடாதே 


முடிவில் 


முற்களே உன் முற்றமாகும்....


அடி மேல்

மீண்டும்

அடி விழுந்தால் தான்


இரும்பும் உயிர் 

பெற்று ஆயுதமாகும்....


ஒவ்வோர் நூலும் 

வேலி கடப்பதாய் 

தான் கடந்துபோகும்....


பாதை அமைத்தவனை கேள் 

அவன் அலறிய பிதற்றல்  

புரியும் என்பான்....


விரிசல் இல்லாத வழி கேள் 

விண்ணுலகம் தேடி செல் 

விரக்தியின்றி 

விடை பெறும்

 வரம் கிடைக்கும் 

என்பான்..........


காவிய கண்ணகி

No comments