Breaking News

ஓர் சிறு தூசு கண்ணில் விழுந்து ...


 ஓர் சிறு தூசு

கண்ணில் விழுந்து முழு உடலையும்

வருத்தி எடுப்பது போல் 


ஓர் சிற்றெறும்பு

யானையையே காவு கொள்ளுமளவு

சக்தி பெருவது போல் 


சிறு கரையான்

மறைந்திருந்து புத்தக இராக்கையையே அடியோடு அழித்து விடுவது போல்


ஓர் துளி சந்தேகம் 

மாபெரும் பிரியத்தில் இலேசான விரிசலை ஏற்படுத்தி அதை அடியோடு வலுவிழக்கச்

செய்துவிடும் 


பருவத்தைப் பார்த்துக் கணக்கெடுக்காமல் விட்டுவிட்டீர்கள் என்றால்

உங்கள் நேசமே நாசமாகிவிடும் மறந்துவிடாதீர்...


✍🏻ஷபானா ஆதம்லெப்பை

          (ஓட்டமாவடி)

No comments