Breaking News

புன்னகை புரியுங்கள்...

 


நீங்கள் ஒரு பூந்தோட்டத்திற்கு போகின்றீர்கள் ஒரு பூ பூக்கிறது அடுத்த ஒரு பூ பூக்கிறது. இன்னொரு பூ பூக்கிறது. இப்படியே ஒவ்வொன்றாக பூக்கள் பூத்துக் கொண்டே இருக்கிறது.

உங்களை சுற்றி பூக்கள் பூத்துக் கொண்டே இருக்கின்றன இதனை பார்க்கும்போது எப்படி இருக்கும் அதேபோல் வானத்தை பார்க்கிறீர்கள் ஒவ்வொரு நட்சத்திரமாக பூத்துக் கொண்டே இருக்கிறது வானம் முழுதும் நட்சத்திரப்பூக்கள், இந்த நிகழ்வு எப்படி இருக்கும். 

உங்களைச் சுற்றி குழந்தைகள் ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் ஒவ்வொன்றாக புன்னகை பூக்கிறது. எவ்வண்ணம் இருக்கும் உங்கள் உணர்வு. 


உங்கள் முகத்தில் புன்னகை பூக்கும் பொழுது உங்களைச் சுற்றி புன்னகைப் பூக்கள் பூக்கும் அதன் அழகும் அற்புதமும் வார்த்தைகளால் வடித்துவிட முடியாது. மலர்ந்த முகமே மற்றொரு முகத்தை மலரச் செய்யும் மகா சக்தி. 

அந்த மகாசக்தி உங்களிடம் குடிகொண்டிருக்கிறது. எப்பொழுதும் மலர்ந்த முகத்துடன் இருங்கள். இன்னொரு முக்கிய விடயம் புன்னகை ஒன்றே போதுமே படைத்தவன் உனை காணவே... 

புன்னகையோடு நீ இருந்தால் இறைவன் உன்னைப் பார்ப்பான். அப்போது நீ என்ன கேட்கிறாயோ?. என்ன நினைக்கிறாயோ? அதை அவன் நிறைவேற்றிக் கொடுப்பான். ஆனால் நாம் கவலையுடன் அழுது புலம்பி இறைவனை வழிபட  முனைகிறோம்  இத்தருணங்களில் இறைவன் கண்டுப்பதில்லை .

கண்டு கொண்டால் இன்னும் கவலை அதிகரிக்கும். நீ என்ன நினைக்கிறாயோ அதையே அவன் அள்ளி வழங்குவான். என் செய்தாய்?. ஏன் செய்தாய்? வீண் செய்தாய். விண் செய்தாயா? 


என்பதே இறைவனின் கேள்வி.


விண் என்றால் புன்னகை. விண்ணில் நட்சத்திரம் பூப்பதைப் போல உன்னில் புன்னகை பூக்கவேண்டும். உன் ஒவ்வொரு அணுக்களும் சிரிக்க வேண்டும். சிலிர்க்க வேண்டும். புன்னகைக்கும் குணத்தை இயல்பாக்கு  உன்னைச் சுற்றியும் உன் வாழ்விலும்  மகிழ்ச்சி கூத்தாடும்.


 புன்னகையால் பூஜை செய்யுங்கள் .

No comments