வெற்றி உன்னை அடைந்தே தீரும்..
நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு முயற்சியும் நமது வெற்றியை நோக்கியே செல்லுகிறது..
அதை நாம் இப்போது உணராமல் இருக்கலாம். ஆனால் நமது இலக்கை அடையும் போது கண்டிப்பாக உணருவோம். நமது முயற்சி இன்றி இவ்வெற்றி சாத்தியமில்லை என்பதை.
நாம் ஒரு வெற்றிக்காக முயற்சி செய்வோம் என்றால், அதற்கான பலனை உடனடியாக பார்க்க முடியாது.சில நேரம் நமது இலக்கை அடைய அதிக நேரமும் அதிக முயற்சியும் தேவைப்படலாம்.
அதற்காக உங்கள் தன்னம்பிக்கையை இழந்து விடாதீர்கள்.உங்கள் முயற்சி வீணானது என்று எண்ணாதீர்கள்.உங்கள் இலக்கை நினைவில் கொண்டு அதற்காக நீங்கள் வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனதோடும் தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லுங்கள்.
ஒரு நாள் உங்கள் இலக்கை அடைந்து உங்கள் பயணத்தின் ஒவ்வொரு நொடியையும் ரசியுங்கள்..
என்றும் நான்
நுஸ்ஹா அஸீம் ஓட்டமாவடி
No comments