பெண் அவள்....
கரை காணாத கறைகளை களைப்பவள்....
யுகம் யுகம் ஏதோ அலை வீசி செல்லினும்
பெண் அவள்
முத்தின் கண்ணீர்
உலகம் இயங்கும் வரையில்
ஓடிக்கொண்டு தான் இருக்கும்....
இறக்கை அறுத்த
சிட்டுக்குருவி அவள்
அறைக்குள்ளே அடைக்கப்பட்டவள்
அழகிய சிலை அவள்....
ஆடவர் உந்தன் ஆரம்பம் அவளே!
இன்றும்
உன் ஆணவம் ஏன்
அவள் மீதே ஆசை கொள்கிறது !
காதல் என்ற மூடியில்
காமம் என்பதை மறைத்து
அவள்
காற்றோடு சேர்த்து காணாமல் போகிறாள்....
கற்பெண்பதை
கட்டிக்காக்க
கடல் தாண்டிய
ஆசைகளை
கண்ணீரால் புதைத்து
கதறலோடு கரைசை
ஆக்கினாள்....
அன்றும்
நீ ஆணாய் பிறந்ததில்
எவ்வாறு ஆணவம் கொள்கிறாய்!
செய்யும் செயல்
வினை தீர்க்கும்
கர்மமே
அன்றி
சோதனை அல்ல
சகோதரனே......!
காவிய கண்ணகி
No comments