Breaking News

உன் நினைவில் உருகுதே எனதுருவம்..


இன்று ஏனோ எனதுலகம் இறுகிய வனமாய்....

வலி நிறைந்த விழிகள்

வான் நோக்கி வழி தேட... 

பாரி தோன்றி பழி தீர்க்கும் பரவச பளிங்கினில்....


மறைந்தே மலர்கின்றன

விழி பிரிந்து வருந்தும் வாடா நீர் ஆருவி.....

இதயம் முழுதும்

பஞ்சம் நிறைந்த

பரவச முத்துக்கள் 


ஆனால் ஏனோ 

சிதறிய நிலையில்....

உதிரும் 

ஒவ்வோர் உயிரின் உமிகளும்


உன் ஓர் நாமத்தையே 

ஜனனமாய் பாடும்....

உன்னி்ல் ஓர் உயிர் உருவம் தேடினால் 


அது என் உயிராய் இருக்க 

உதிரம் இழப்பேன்....

இ்ல்லை என்றால் என் உலகம் கடப்பேன் 


இப்படிக்கு 

அவள் 

காவிய கண்ணகி

No comments