புரிதல் இல்லா பயணம் பிரிதலே..
சிலவகைளை வேண்டும் என்று இறுக பற்றிக்கொண்டாலும் அவைகள் விட்டு செல்லத்தான் பார்க்கிறது எனும் போது அரை மனதோடாவது வழியனுப்பி வைப்பது தான் சிறந்தது.
காயப்படுத்திய வர்கள்/காயப்படுத்தியது தான் காயத்தை அழிக்கமுடியும் என்று அவைகளை ஏற்றுக்கொண்டால் மீண்டும் வரும் காயங்களும் அவைகளால் தான் என்பது தான் கசப்பான உண்மை
எவ்வளவோ ஆசைகள் ஆவல் அன்பு அக்கறை என்றெல்லாம் எமக்கு இருந்தாலும் புதைத்து விட்டு தான் இவ்வாறான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை எமக்கு உண்டாகுகிறது அல்லவா?
ஒரு வேளை மீண்டும் அவைகள் கிடைக்கும் போது ;அவைகளை முழு மனதோடு வழியனுப்பி வையுங்கள்.
மீண்டும் அது என்றோ உங்களை விட்டு செல்லத்தான் போகிறது அந்த வலியையும், ஏமாற்றத்தையும், கண்ணீரையும் தந்துவிட்டு.
எம்மை புரிந்தால் தான் அது எமக்கானதாய் என்றும் இருக்கும்... இல்லையென்றால் பிரிதல் தானே.
அ.பாத்திமா சிமாறா
நிந்தவூர்
No comments