Breaking News

தேவதையின் விழிகள் 13..


விழிகள்  


          " சுஜா அக்காவ அழச்சிட்டு வா" என்ற லட்சுமியின் குரலில் ஹாலுக்கு வந்த சிந்துஜா தனக்கு எதிரே அமர்திருந்த அஜயை கண்டு அதிர்ச்சி அடைந்தாள்.


       அஜயோ அவளைக் கண்ட அதிர்ச்சியில் எழுந்து நின்றவன் பின்னர் வாயேல்லாம் பல்லாக " வாங்க அண்ணி" என்று பவ்யமாக அழைத்தான்.


          ராஜியின் மறுபக்கத்தில் டிப் டாப்பாக இருந்த மித்ரன் யாருக்கு வந்த விருந்தோ என்று போனில் வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டு இருந்தான்.


          சிந்து " அஜயோட அண்ணா தானே பார்த்துக்கலாம்" என்று மித்ரனை பார்க்காமல் தலையை குனிந்து கொண்டாள்.


ராஜி : " என்னோட பெரிய பையனுக்கு தான் உங்க பொண்ண பார்க்க வந்துருக்கோம் " என்று மித்ரனை பார்க்க அவன் போனில் மூழ்கி இருந்தான்.


ராஜி : "  டேய் கண்ணா" பல்லைக் கடித்து கொண்டு அழைக்க


    அவனோ போனில் கவனத்தை பதித்தவாறு" என்ன ராஜிம்மா" என்றான்.


அப்போது தான் மித்ரனை நன்றாக கவணித்த சுஜாவும் லட்சுமியும் " எ.சி.பி மித்ரன் சாரா " என்று ஒருங்கே கூற


இவர்களின் குரலில் தலை நிமிர்ந்து பார்த்த மித்ரன் சிந்துஜாவின் கண்கள் ஒன்றையொன்று கல்விக் கொண்டது.


      அவளது விழிகளில் " இவனா" என்ற அதிர்ச்சியும் அவனது விழிகளில் " இவள் தானா"  என்ற வெற்றிச் சிரிப்பும் நிறைந்திருந்தது.


     அவனது கண்கள் சிரிப்பதை கண்டு கொண்ட சிந்து மித்ரனை தீயாய் முறைக்க 


மித்ரனோ "கொசுத்தொல்லை " என்று கைகளை தட்டி விட்டு அமர்ந்திருந்தான்.


ராஜி: " ஆமா இவனுக்கு தான் உங்க மகராசிய கேட்டு வந்துருக்கோம் "


லட்சுமி: " ரொம்ப சந்தோஷம்"


ராஜி: " பையனுக்கு பொண்ண புடிச்சிருக்கு பொண்ணுக்கு புடிச்சிருக்கா " 


லட்சுமி : " மித்ரன் தம்பியை யாருக்கு தான் பிடிக்காது.அதெல்லாம் அவளுக்கு பிடிச்சிருக்கு "


அஜய்: " என்னண்ணா உன்னக் கேக்கவே இல்ல" மித்ரன் காதில் கிசு கிசுக்க  மித்ரனோ " ராஜி கூட வந்துருக்கேன் " 

என்றான்.


ராஜி : " அப்புறம் என்ன தட்டு மாத்திக்கலாம்" 


என்று ராஜியும் லட்சுமியும் தட்டை மாற்றிக் கொண்டார்.


    சிறிது நேரத்தில் ராஜி சிந்துவின் தலையில் பூ வைத்து விட்டு நாள் குறித்து கூறுவதாக விடைபெற்றுக் கிளம்ப மித்ரனும் அஜயின் தோள்களில் கை போட்டு மீசையை முறுக்கி விட்டு சென்றான்.


  இரவில் டின்னர் முடித்து கொண்டு வந்த மித்ரன் தனது அறையில் இருந்த ரகசிய அறையில் நுழைந்து கொண்டான்.


         அவ்வேளையில் இருந்த ருத்ரன் " என்னடா இவ்வளவு நேரம்"


மித்ரன்: "என் ரூம்ல இப்படி ஒரு பிளேஸ் இருக்குறது யாருக்கும் தெரியாது"


ருத்ரன் : " சரி டா "


மித்ரன் : " என்னடா வாய் திறந்தானா " என்று இருக்கையுடன் சேர்த்து கட்டப் பட்டிருந்தவனை பார்த்தான்.


ருத்ரன் இல்லை என்றவாறு தன் கீழ் உதட்டை பிதுக்கினான். 


 மித்ரன்: " மரண பயத்தை காட்டினா கண்டிப்பா வாய் திறப்பான்."


ருத்ரன் : " அதுக்கென்ன காட்டிடலாம். இப்ப வா போகலாம். " என்று இருவரும் அவ்வறையில் இருந்து வெளியேறினர்.


  சூரிய பகவான் செயலால் அடுத்த நாள் காலைப் பொழுதும் விடிந்தது.


        நேற்றிரவு தூக்கம் இன்மையால் எரிந்த கண்களை சிரமப்பட்டு திறந்த மித்ரன்  பக்கத்தில் இருந்த ருத்ரனையும்  எழுப்பி மப்டியில் தயாராகி வீட்டின் பின்புறம் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பைக்கில் ஆஷிரமத்தை நோக்கி சென்றனர்.

         

                       விழிக்கும்.




  ✍️  Muhsina saththar.

கனவுகளின் இளவரசி RS musha

நெல்லியகம பலாகல

No comments