Breaking News

தேவதையின் விழிகள் 12..


  


விழிகள் 


           சூரியன் தன் ஆளுமையை நிலை நாட்டிக் கொண்டிருந்த அழகான காலைப் பொழுதில் கண் விழித்தமர்ந்த மித்ரன் " முதல்ல ராஜிம்மா கிட்ட பேசணும். " என்று நினைத்தவனாய்  குளித்து விட்டு காகி உடையில் ஹாலுக்கு வந்தான்.


        அங்கு ராஜி அஜய்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள்.


       அஜயின் அருகில் வந்தமர்ந்த மித்ரன் " ஆ ஆ" என்று தனது வாயைத் திறந்து காட்ட சிரித்தவாறே அவனுக்கும் ஊட்டி விட்டாள் ராஜி .


மித்ரன்:" ராஜிம்மா நீ பார்த்த பொண்ணு வேனாமே, நான் ஒரு பொண்ண பாத்து" என்று ஆரம்பிக்க


இடையில் குறுக்கிட்ட ராஜி " யாரு அந்த கனவுக் கண்ணியா, அவளைத் தேடி கட்டிக்கிறதுக்குள்ள ஸ்ட்ரைக்டா அறுபதாம் கல்யாணம் தான்" என்று கேலி பேசியவள் தட்டை எடுத்து கொண்டு அடுக்களைக்குள் நுழைந்து கொண்டாள்.


 அஜய்"ஹா.....ஹா " என்று வாய் விட்டே சிரிக்க  அவனைப் போலியாக முறைத்த மித்ரன் "  உன் தலையில் போட்ட கட்ட வாய் ல போட்டுக்கலாம் " என்று கூறி சென்றான்.



          சிந்துஜா காலேஜ் கிளம்பி கொண்டிருக்க  " இன்னைக்கு உன்னை பொண்ணு பார்க்க வராங்க. அதனால் எங்கேயும் போகாம அடக்க ஒடுக்கமா வீட்லயே இரு " என்று லட்சுமி கூற


சிந்து : " ம்மா காலேஜ் மட்டும் போய்டு வந்துடறேன். "


லட்சுமி" என் பேச்ச கேட்க குடாது என்ற முடிவுல இருக்கியாடி". என்றதும் பேகை  தூக்கி போட்டவள் தனது அறைக்குள் அடைந்து கொண்டாள்.


         அறைக்குள் சென்ற சிந்து மித்ரனின் போடோவைப் பார்த்து   " நீ மட்டும் போலீஸா இல்லாமல் இருப்பி என் காதல அன்னைக்கு சொல்லிருப்பேன்டா " என்று மனதோடு பேசிக் கொண்டவள் கண்களில் இருந்து இரு துளி நீர் வடிந்தோடியது.


 உன்னால் உன்னால் உன் நினைவால் உலகில் இல்லை நான் தானே


முள்ளைக் கேட்கும் ஓசையிலே உன்னை என்னைக் கேட்டேன்


உன்னோடு சேர்ந்த நெடுந் தூரங்கள் காணாத நெடுந் தூரம் நடந்தேனே


உன்னிடம் தந்த இதயத்தை தேடி உன்னில் என்னை தொலைத்தேனே


    ஸ்டேஷனில் மித்ரன் " சாந்திக்கு இன்னும் மேரேஜ் ஆகல அப்புறம் எப்படி வயித்துல குழந்தை "


ருத்ரன் : " அவங்களுக்கு ஏதாச்சும் கமிட் மென்ட் இருந்துருக்கலாம் "


மித்ரன் : " அவ தூக்கு மாட்டிக்க ஒரு மாதம் முன்னாடி வரை ஆசிரமத்தில் தான் இருந்திருக்கா . அங்க நாளைக்கு இன்வெஸ்டிகேஷனுக்கு போலாம்."


ருத்ரன்: " சரிடா  டுடே ஈவ்னிங்? "


மித்ரன் : " எனக்கு கால் கட்டு போட நாள் குறிக்க போறாங்கடா" 

 

ருத்ரன்: "  சிரிச்சிட்டே சொல்லுடா "


மித்ரன் கையிலிருந்த பேனாவை அவனை நோக்கி எறிந்து விட்டு  வெளியே சென்று விட்டான்.


      ஸ்டார் ஹோட்டலில் அந்த உருவம் போனில் பேசிக் கொண்டிருந்தது.


அவ்வுருவம்: " டேய் அந்தப் போலீஸ் காரன் கேஸ ஓபன் பன்னிட்டான்டா."


" அவன் கண்டு புடிச்சான் நம்ம சாம்ராஜ்யத்தை மொத்தமா அழிச்சுருவான்"


".............."


அவ்வுருவம்:" இப்போதைக்கு ஆறப் போடலாம். அவன் தம்பிய தொட்டதுல நெருப்பா இருப்பான்"


"......................"


அவ்வுருவம் :" அந்த மாதிரி ஏதும் பன்னிறாத சாவடிச்சுருவான். இப்போதைக்கு ஆள் வச்சி க்ளோஸா வாஸ் பன்னு "


" ஓகே பாஸ் "



ஈவ்னிங் ராஜி , மித்ரன், அஜய் மூவரும் பெண் பார்க்க செல்ல அங்கே வேண்டா வெறுப்புடன் அழகுப் பதுமையாய் ரெடியாகி கொண்டிருந்தாள் சிந்துஜா.


 

சிந்து அறையில் அமர்ந்து இருக்க ஹாலில் ராஜியின் அருகில் அமர்ந்திருந்த அஜய் " இது சிந்து அம்மா மாதிரி இருக்கு" என்று நினைக்கும் போதே லட்சுமி " சுஜா அக்காவ அழச்சிட்டு வா " என்றாள்.


  சிந்துஜாவும் சுஜாவுடன் இனைந்து ஹாலுக்கு வர அங்கு நின்றவனை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.



✍️ Muhsina saththar.

கனவுகளின் இளவரசி Rs Musha 

நெல்லியகம பலாகல.

No comments