நான் தினமும் 12 மணி நேரம் வேலை செய்கிறேன். அதனால் புத்தகம் படிக்க இயலவில்லை. அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?
நான் தினமும் 12 மணி நேரம் வேலை செய்கிறேன். அதனால் புத்தகம் படிக்க இயலவில்லை. அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?
பாருங்கள். நீங்கள் ஒரு வகுப்பறையில் தனியாக அமர்ந்திருக்கிறீர்கள். அங்கு உலகின் முன்னணி உளவியல் நிபுணர் ஒருவர் வந்து மனிதர்களை எவ்வாறு கையாள்வது என்று கற்றுத்தருகிறார். சேமிப்பையும் முதலீட்டையும் எப்படி செய்வது என வாரன் பபெட் கற்றுத்தருகிறார்.
ஸ்டீவ் ஜாப்ஸ் வந்து மார்க்கெட்டிங் பற்றியும் எலோன் மஸ்க் கடின உழைப்பை பற்றியும் கற்றுக்கொடுத்தால் நாம் நேரமில்லை என்றா சொல்லுவோம்? இது சாத்தியமா? ஆம் புத்தகம் வாசிப்பதன் மூலம் இவை அனைத்தும் சாத்தியமே.
புத்தக வாசிப்பின் நண்மையைக் சொன்னால், அதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது? என்று சொல்பவர்கள் நிறைய பேர். ஆனால் உலகின் பிஸியான மனிதர்களாக கருதப்படும் பலரும் வாசிக்கிறார்கள். உண்மையில் வசிப்பதாலேயே அவர்கள் வெற்றிகரமான மனிதர்களாக மாறியிருக்கின்றனர்.
அப்படி வாசிப்பில் உயர்ந்த சில மனிதர்கள் இங்கே
▪️ பில் கேட்ஸ்
உலகின் பணக்காரர்கள் பட்டியலில் அதிக நாட்கள் முதலிடத்தில் இருந்தவர். கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தின் ஆணிவேராக திகழும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர். தினசரி வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் யோசித்து செலவு செய்பவர். ஆனாலும், அவர் ஓராண்டில் 50 புத்தகங்களையாவது படித்து விடுகிறார். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ஆண்டில் இரண்டு வாரங்கள் விடுமுறை எடுத்துக்கொண்டுதனியாக சென்று விடுகிறார். இந்த நேரம் முழுவதையும் வாசிப்பதற்க்காக செலவு செய்கிறார்.
▪️ வாரன் பபெட்
உலகின் முதல் 10 பணக்காரர்களில் ஒருவர். இவர் இதில் முதலீடு செய்தாலும் உலகமே அதில் முதலீடு செய்ய துடிக்கும். பங்கு முதலீட்டை பொறுத்தவரை இவர் தான் கடவுள். இவர் சொல்வது தான் வேதவாக்கு. தூங்குவது மீதமிருக்கும் முக்கால்வாசி நேரத்தை அவர் வாசிப்பதர்காக்ககவே செலவு செய்கிறார். தன் வெற்றி ரகசியமாக இவர் கூறுவது வாசிப்பை தான். ஒரு நல்ல முதலீட்டாளன் தினசரி 500 பக்கங்களையாவது வாசிக்க வேண்டும் என்று கூறுவார். ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு முன்பு அந்த நிறுவனத்தை பற்றி தெரிந்துகொள்ள வாசிப்பே உதவுகிறது என்கிறார்.
▪️ எலோன் மஸ்க்
தற்பொழுது உலகத்தில் வாழும் ஓய்வில்லாத மனிதர் என்றால் இவரை சொல்லலாம். ஏனென்றால் இவர் நிறுவிய நிறுவனங்கள் ஏராளம். ஒவ்வொன்றும் மனிதகுலத்தின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல போகும் நிறுவனங்கள். ராக்கெட் முதல் எலக்ட்ரிக் கார்கள் வரை பலவற்றை உருவாக்கும் தொழில் நிபுணர். வேலையை முடித்துவிட்டு சில நாட்கள் தனது கார் பட்டறையிலே உறங்கி விடுவார். அவ்வளவு பிசி. ராக்கெட்களை உருவாக்க எப்படி கற்றுக்கொண்டீர்கள்? என கேட்டபோது அவர் சொன்ன பதில் புத்தகங்களை படித்துக் கற்றுக்கொண்டேன் என்றார். இவருக்கு இல்லாத பரபரப்பா நம் வாழ்வில் இருக்க போகிறது.
இவர்களை போல இன்னும் பலர் தங்களது வெற்றிக்கு வாசிப்பு தான் காரணம் என கூறியுள்ளனர்.
எனவே, நேரம் என்பது அமையாது. நாம் தான் அமைத்துக்கொள்ள வேண்டும். நம் வாழ்வில் முன்னேற வேண்டுமா அல்லது அதே இடத்தில் இருக்க போகிறோமோ என்று தேர்வு செய்வது நாம் தான். ஒரு மணி நேரம் தூக்கத்திடம் கடன் வாங்கி வாசிப்பிற்கு செலவு செய்யுங்கள். அது இன்னும் உங்களை அதிக நேரம் வாசிப்பதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுக்கும்.
நேரத்தை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்பதிற்கும் புத்தகம் உள்ளது.
No comments