Breaking News

தேவதையின் விழிகள் 11..


  

 

விழிகள் 


        காகி உடையில் ஸ்டேஷன் நோக்கி ஜீப்பை செலுத்தியவன் சிந்தனை முழுவதும் நேற்று நடந்த சம்பவங்களிலே உழன்று கொண்டிருந்தது. " அஜய கிட்னாப் பன்னது யாரு. நேத்து பேசினவனுக்கும் இப்ப போய்கிட்டு இருக்குற கேஸ்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா. இல்ல இதுக்கு முன்னாடி முடிச்ச கேஸோட விட்டகுறையா, தொட்டகுறையா கண்டுபிடிக்குறேன் " என்று மனதோடு கூறிக் கொண்டான் மித்ரன்.


             அப்போது சரண்யாவுடன் பேசிக் கொண்டு வந்த சிந்துஜாவின் கண்களும் அவளுக்கு எதிர் முனையில் ஜீப் ஓட்டி வந்த மித்ரனின் கண்களும் ஒன்றோடொன்று உரசிக் கொண்டிருந்தது.


             " ச்சை முன்னெல்லாம் கனவுல வருவா , இப்போ நேர்ல வந்து இம்சை பன்றா " என்று மித்ரன் நினைக்க சிந்துவோ" இவனெல்லாம் போலீஸ் ஆவலனு யார் அழுதா . இந்த ஈபில்டவர காகி ட்ரஸ்ல பார்க்குறப்ப வெறி வருது " இவ்வாறு இவர்கள் தத்தமது சிந்தனையிலே உழன்று கொண்டிருக்க


     பஸ் ஸ்டாப்பில் சில கல்லூரிப் பெண்கள் கூச்சலிடும் சத்தம் கேட்டது.


        ஜீப்பில் இருந்து பாய்ந்து இரங்கிய மித்ரன் அவர்கள் அருகில் சென்று " என்னம்மா பிரச்சினை " என்று கேட்க அவர்களும் பக்கத்தில் அமைதியாய் நின்றிருந்த கயவர்களை சுட்டிக் காட்டி இவர்கள் தம்மிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சிப்பதாக கூறினர்.


        மித்ரன் இருந்த கோபத்தில் பக்கத்தில் இருந்தவர்களில் ஒருவன் கன்னத்தில் ஓங்கி அறைய அவன் தரையில் சுருன்டு விழுந்தான்.


       அதை கண்ட சிந்து " ஏ சார் போலீஸ் னா உங்க இஷ்டத்துக்கு கை வெப்பிங்களா . போலீஸ் எல்லாரும் அவங்க தேவைக்கு அடுத்தவங்களை அடிக்க வேன்டியது .இதுல உங்களுக்கு என்ன லாபம் இருக்கு சார்" என்று மூச்சுக் கூட விடாமல் பேசிக் கொண்டு போக


அவள் பேச்சில் மித்ரனின் கோபம் கிளர்ந்தெழ சிந்துவின் கழுத்தை பிடித்து அவளை துனில் சாய்த்து" ஓ உனக்கு போலீஸ்னா பிடிக்காதுல, இனி நீ விரும்பலாட்டியும் என்னோட தான் இருக்கனும்." என்றவன் அவள் கழுத்தை விடுவித்து அக்கயவர்களை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு சென்றான்.


   

      அவன் சென்றதைகூட உணராது அதிர்ச்சியில் நின்ற சிந்துவின் கையை பிடித்த சரண்யா" அவர் நல்லவரா தான் டி தெரியிராரு நீ ஏன்டி அவர்கிட்ட வம்பு வளர்கிற "


சிந்து : " அவன பத்தி பேசாதே.எவ்வளவு திமிரா பேசி போறான் பாத்தியா " 


சரண்யா :" சரி வா காலேஜ்கு டைம் ஆச்சு" என்று அவளை இழுத்துச் சென்றாள்.


      ஸ்டேஷன் சென்ற மித்ரன் நேற்று வந்த நம்பரை கொடுத்து அது பற்றி விசாரிக்க கூறியவன் ருத்ரனை அழைத்து கொண்டு சாந்தி தற்கொலை செய்து கொண்ட ஸ்பாட் குச் சென்றான்.


   வீட்டில் தனது அறையில் படுத்திருந்த அஜய் " நேத்து அவள பொண்ணு பார்க்க போயிருபாங்க. என்னால என் செல்லம் நம்பிக்கையை காப்பாத முடியல வந்தவர்களுக்கு அவளை புடிச்சு போயிருக்குமா" என்று தியாவின் நினைவுகளிலே இருந்தான் .



           இங்கு காலேஜில் மதிய இடைவேளையில் காலேஜை சுற்றி வந்த தியா " என்ன இன்னைக்கு அஜய் காலேஜ் வரலியா. நேத்து வராதிருந்ததுக்கு பழிவாங்குறான இருக்கும். " என்று வாய் விட்டே புலம்பினாள்.


        அப்போது அவளை சுற்றி அமர்ந்த நண்பர்கள்" என்னாச்சு கண்ணெல்லாம் கலங்குது " என்று கிண்டல் செய்ய 


தியா : " இன்னைக்கு அஜய் வரல போல "


 தருன்: " ஆமா பா நேத்து கூட ஈவ்னிங் க்ளாஸ் கட் அடிச்சுட்டு எங்கயோ போனான்."


சரண்யா: " ஆஹ் இன்னைக்கு மார்னிங் அவன் பைக்கை ஒரு போலிஸ் வந்து எடுத்து போச்சி டி "


     என்றதும் தியா அலட்டிக் கொள்ள வில்லை. அவளுக்கு தான் அவன் அண்ணன் போலீஸ் என்று தெரியுமே.


    "  சரி அப்போ நாளைக்கு பார்க்கலாம்"என்ற தியா முகத்தை தொங்க விட்டு கொண்டு சென்றாள்.


 சிந்துவும் மித்ரனின் செயலை நினைத்தவாறே செல்ல  அவர்கள் நண்பர்களும் களைந்து சென்றனர்.


இரவு எட்டு மணிக்கு வீடு வந்த மித்ரன் உணவருந்தி விட்டு அஜயின் அறைக்கு சென்றான்.


         அஜயிடம் புது மாடல் ஐ போனை மித்ரன் நீட்ட அதை பெற்ற அஜய் " அண்ணா"


மித்ரன்: " உனக்கு தான் டா  " என்று போனை அவன் கையில் திணித்து விட்டு அஜயின் தலையை வருடினான்.


மித்ரன் செயலில் கண் கலங்கிய அஜய் அவனைத் தாவி அனைத்து கொண்டான்.


    அப்போது குரலை செறுமியபடி உள்ளே வந்த ராஜி " போதும் போதும் இந்த பாலை குடிங்க" என்று கிளைஸை நீட்டியவள் " அப்புறம் சொல்ல மறந்துவிட்டேன் நாளைக்கு ஈவ்னிங் பொண்ணு பார்க்க போறோம்.டேய் கண்ணா எப்பவும் போல ஸ்டேஷனில் இருந்துராத" என்று கூறி சென்றாள்.


     மித்ரனின்"ராஜிம்மா" என்ற அழைப்பு காற்றில் தான் கரைந்தது.



         தனது அறைக்கு சென்ற மித்ரன் " என்ன இம்சைடா அவள மறக்க முடியல" என்று அவள் நினைப்பிலேயே உறங்கிக் போனான்.


 இங்கு அறையில் அஜய் தியாவுக்கு அழைத்து " செல்லக் குட்டி பேசுடா"


தியா :".........."


அஜய்: " நீ இப்ப பேசல நான் போன் கட் பன்னிருவன்" என்று மிரட்ட


தியா : "ஏன்டா நாயே காலேஜ் வரல "


அஜய் : "அத விடு செல்லமே உன்னை மாப்பிள்ளை வீட்டுக்கு புடிச்சு போச்சா"


தியா : "  அதான் நான் மாப்பிள்ளைய பார்க்க முதலே நீ உன் அண்ணாவ அனுப்பி வச்சுட்டியே."


அஜய்: " என்ன அண்ணா அங்க எப்படி"


தியா :"நடிக்காதடா நாயே "


அஜய்: " மாமன பாத்து நாய் சொல்ற"


தியா : " அப்படி தான் சொல்லுவேன்.நாய் நாய் நாய்"


அஜய்: " கிட்ட இருப்பி என்ன பன்னி இருப்பன் தெரியுமா"


தியா: " சார் அப்படி என்ன பன்னி இருப்பீங்க."


அஜய்: " நாய் சொல்லுற உதட்டை கடிச்சு வச்சிருப்பன் "


           இவர்கள் இவ்வாறு ஸ்வீட் நத்திங்ஸ் பேசிய வாறே இரவை கழிக்க



சிந்துவும் நாளை நடக்கப் போவதை அறியாது மித்ரன் போடோவுடன் பேசிய படியே தூங்கிப் போனாள்.



✍️ Muhsina saththar.

கனவுகளின் இளவரசி RS musha

நெல்லியகம பலாகல.

No comments