தேவதையின் விழிகள் 10..
விழிகள்
ஐ.சி.யு அறையின் முன் போய் நின்ற மித்ரன் கண்ணாடிக் கதவு வழியாக, வெட்டி வீழ்த்திய மரம் போல் இருக்கும் அஜயைப் பார்த்து பேன்ஜில் கண்மூடி சாய்ந்தமர்ந்த மித்ரன் சற்று முன் நடந்தவற்றை நினைத்துப் பார்த்தான்.
அஜயை ஹாஸ்பிடல் அழைத்து வந்த மித்ரன் அவனை ஸ்ட்ரச்சரில் படுக்கை வைக்க அஜய் அவன் கைகளைப் பிடித்து கொண்டு கண்ணில் நீருடன்" அண்.. அண்ணா..,தியா " என்று திக்கித் திக்கி கூறியவன் மயக்க மடைந்தான்.
ஐ.சி.யு அறைக்கு வெளியே நின்று யாருக்கோ அழைத்தவன் " தியாவோட டீடெயில்ஸ் எனக்கு இப்போ கிடைக்கனும் குவிக்" என்று கட்டளை பிறப்பித்தான் அழைப்பைத் துண்டித்தான்.
மூன்றே நிமிடங்களில் அவளின் தகவல் அனைத்தும் மித்ரன் கைகளுக்கு கிடைக்க தம்பியின் கண்ணீரை நினைத்து அவளுக்கு ஏதோ ஆபத்து என்றே அவள் வீட்டை அடைந்தவன் அங்குள்ள சூழ்நிலையில் அஜயின் காதலை ஊகித்துக் கொன்டவன் மறைமுகமாக மிரட்டல் விடுத்து வந்தான்.
ஜ.சி.யு அறையில் இருந்து வெளியே வந்த மருத்துவர் " மிஸ்டர் மித்ரன்" என்று அழைக்கவும் சிந்தனை களைந்தவன் அவரை ஏறிட்டுப் பார்த்து "அஜய்" என்று கேள்வியாக நிறுத்த
மருத்துவர்:" உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை , தலையில் தான் பலமான அடி .ஒன் வீக் பேட் ரெஸ்ட்ல இருந்தா கம்ப்ளீட்டா குனமாயிரும் "
மித்ரன்: " போய் பார்க்கலாமா "
மருத்துவர்:" ம்ம் ஒப்சர்வேசன்ல வச்சிருக்கம் நாளை காலையில் தான் கண் விழிப்பாரு "
"ஓகே தேன்ங்ஸ் " என்ற மித்ரன் தம்பியை நாடிச் சென்றான்.
டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சிந்துஜாவின் தட்டில் தோசை வைத்த லட்சுமி " உனக்கு வரன் பாக்க இருக்கன் , ஒழுங்கு மருவாதியா ஒத்துக்க"
சுஜா : " ஐ ..ஜாலி அக்காவுக்கு கல்யாணமா "
"அடச்சீ வாய மூடு" என்று சுஜாவை அடக்கிய சிந்து லட்சுமியை பார்த்து" இப்ப என்னம்மா அவசரம் " என்று கேட்க" எதையும் கேட்க குடாது என்ற முடிவுல இருக்கியாடி" என்று கலங்கிய கண்களோடு கேட்டாள் லட்சுமி.
தாயின் அழுகையில் எரிச்சலான சிந்து " உங்க விருப்பம் என்று கூறி பாதி சாப்பாட்டிலே எழுந்து சென்று விட்டாள்.
தனது அறைக்கு வந்த சிந்துஜா தனது செல்போனை எடுத்து அதிலுள்ள மித்ரனின் படத்தை பார்த்தவள் அதை வருடி விட்டபடி " நான் உன்னை எவ்ளோ லவ் பன்னேன். நீ ஏன்டா போலீஸ் ஆ இருக்க. நீ போலீஸ்னு முன்னாடியே தெரிஞ்சிருப்பி நான் உன்னை லவ் பன்னிருக்க மாட்டேனே" என்று உள்ளுக்குள் மருகியபடி உறங்கிப் போனாள்.
தியா கட்டிலில் அமர்ந்து " அஜயோட அண்ணா ஒரு போலீஸா இது எப்படி எனக்கு தெரியாம போச்சு. அவன் அம்மா பத்தி சொன்னான். அண்ணா பத்தி எதுவும் சொல்ல இல்லை" என்று அஜய்கு திட்டிய படியே தன் இரவை கழித்தாள்.
இங்கு அஜயின் பக்கத்தில் அமர்ந்த மித்ரன் மணி பத்தைக் கடக்கவும் செல் போனை எடுத்து பார்க்கவும் ராஜியின் அழைப்பே இருபத்தைந்து இருக்க " ஐயோ அஜய்கு இப்படி இருக்குன்னு உங்க கிட்ட எப்படி ராஜிம்மா சொல்லுவேன். ஸாரி ம்மா " என்று மனதுள்ளே தாயுடன் பேசியவன் போனை சைலண்ட் மோடில் வைத்து விட்டு அஜயின் தலையருகே தலை சாய்த்து அவனின் தலையை வருடி விட்டபடி உறங்கிப் போனான்.
காலையில் சூரியன் பூமித் தாயுடன் உறவாடிக் கொண்டிருக்க முதலில் கண் விழித்த மித்ரன் டைம் எட்டைக் காட்டவும் அஜயை பார்க்க அவன் சிறு குழந்தை போல் தன் கழுத்தை கட்டி உறங்கிக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் அஜய் கண்விழிக்க ரமேஷை அழைத்த மித்ரன் டீ சர்ட் மாற்றி அஜயை அழைத்து கொண்டு வீடு சென்றான்.
வீட்டுக்கு வந்த மித்ரன் அஜயை அறையில் படுக்க வைத்து விட்டு ராஜியிடம் ஆயிரம் மண்ணிப்பு வேண்டி " சாப்பிட்டு போடா கண்ணா " என்ற ராஜியின் குரலுக்கு " டைம் "இல்லம்மா அங்க போய் பார்த்து கிறேன்" என்றவன் கஞ்சி போட்டு அயன் பன்னிய காகி உடை மாற்றி ஸ்டேஷன் சென்றான்.
விழிக்கும்...
✍️ Muhsina saththar
கனவுகளின் இளவரசி Rs Musha
நெல்லியகம பலாகல.
No comments