தேவதையின் விழிகள் 09...
விழிகள்
" பொண்ணை அழைச்சிட்டு வாங்க" என்ற உறவினர் குரலில் " என்ன ஏமாத்திட்டல்ல, எல்லா ஆம்பளைங்களும் ஒன்னு தான் " என்று அஜய் மீது வெறுப்பை வளர்த்து கொன்டவள் மாப்பிள்ளை வீட்டார் முன் கண்ணில் நீர் கோர்க்க தலை குனிந்து நின்றாள்.
குடோனில் சண்டையிட்டுக் கொண்டிருந்த அஜயின் காதுகளில் தன்னவளின் கண்ணீர் குரலே கேட்டுக் கொண்டிருக்க கட்டையால் அடிக்க வந்தவன் முகத்தில் தன் ஒட்டுமொத்த பலமெல்லாம் திரட்டி ஒரு குத்து விட அவன் அவ்விடத்திலேயே மயங்கி சரிந்தான்.
போலீஸ் ஸ்டேஷனில்...
" என் அஜய் இரத்தத்தையே என் கண்ணுல காட்டிடல்ல இனி உனக்கு நான் தான் டா எமன் " என்று நினைத்த மித்ரன் அஜயின் ஜி.பி.எஸ் மவுண்ட் ரோடு பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு குடோனில் காட்ட வீறு கொண்ட சிங்கமாக அவ்விடம் நோக்கி புறப்பட்டான்.
" தியா தலை நிமிர்ந்து மாப்பிள்ளை தம்பியை பாரும்மா " என்ற அம்பிகாவின் குரலில் கண்ணீர் கன்னத்தை நனைக்க அதை பிறர் அறிய வண்ணம் நாசுக்காக துடைத்து கொண்டாள் தியா.
சண்டையிட்டுக் கொண்டிருந்த அஜயின் பின்னால் வந்த உருவம் அவன் தலையில் இரும்பு ராடால் ஓங்கி அடிக்க அவ்விடத்தில் புயல் போல் உள்ளே நுழைந்த மித்ரன் தன் தம்பியை தோளில் சாய்த்துக் கொண்டு ஒவ்வொருத்தராக பந்தாடிய மித்ரனின் தோள்கள் அஜயின் சூடான இரத்தத்தை உணர ருத்ர மூர்த்தியாக மாறிப் போய் இருந்த மித்ரன் குற்றுயிராக இருந்தவர்களின் உயிரை முழுவதுமாய் குடித்திருந்தான். இதற்கிடையில் நைசாக மறைந்த அவ்வுருவம் யார் கவனத்திலும் பதியவில்லை.
உணர்வற்று கிடந்த அஜயை கைகளில் ஏந்திக் கொண்ட மித்ரனின் கண்கள் முதன் முறையாய் கண்ணீரை உணர்ந்தது.
ஜீப் சீட்டில் அமரவைத்த அஜயின் தலை சாய்ந்து விழ அவனின் கன்னத்தை பற்றிய மித்ரன் அவன் கன்னத்திலே பலமாய் தட்ட " ஆஆஹ்" என்று மூச்சை இழுத்து விட்டான் அஜய்.
ஜீப்பை ஸ்டார்ட் செய்த மித்ரனின் கையை இறுகப் பற்றிய அஜய் " அண்.. அண்ணா.. தி.. தியா " என்று கூற வர "அப்புறம் பேசிக்கலாம் " என்ற மித்ரன் மின்னல் வேகத்தில் மருத்துவமனை வலாகத்தை அடைந்தான்..
தலை நிமிர்ந்து பார்த்த தியாவின் முன்னால் இரத்தம் படிந்த காகி உடையில் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு நின்றிருந்தான் மித்ரன்.
மிதரனை கண்டதும் தங்களிடையே சலசலத்தவர்களை ஒற்றை பார்வையில் அடக்கியவன் அதிர்ந்து போய் நின்ற தியாவின் முகத்தின் முன் சொடக்கிட்டு " நீ என் தம்பி அஜய்கு சொந்தமானவ" என்ற மித்ரன் பக்கத்தில் நின்ற அம்பிகா, சதாசிவத்தை ஒரு பார்வை பார்த்தவன் அவ்விடத்தில் இருந்து புயலேன வெளியேறினான்.
விழிக்கும்...
✍️ Muhsina saththar
கனவுகளின் இளவரசி RS musha
நெல்லியகம பலாகல.
No comments