தேவதையின் விழிகள் 08...
விழிகள்
குடோனில் நெற்றியில் வழிந்த இரத்தத்தோடு அரை மயக்கத்தில் இருந்த அஜயை போடோ எடுத்த அந்த உருவம் அடியாட்களைப் பார்த்து "இத அந்த போலீஸ் கார நாய்க்கு அனுப்புங்கடா " என்றது.
போலீஸ் ஸ்டேஷனில்..
மித்ரன்: "இந்த பொண்ணு தற்கொலை பன்னிக்க வாய்ப்பு ரொம்ப கம்மிடா.எந்ந பொண்ணும் வயித்துல குழந்தையோட தூக்கு மாட்டிக்காது. எனக்கு என்னமோ இது மர்டர் கேஸா இருக்கலாம்."
ருத்ரன்: " ம்ம். தற்கொலை ன்னாலும் இதுக்கு பின்னாடி ஒரு கருப்பாடு இருக்கும்."
மித்ரன் ஏதோ பேச வாயேடுக்க முன்னர் அவனது போனில் மெஸேஜ் வந்ததற்கு அறிகுறியாக நோடிபிகேஸன் வந்து விழுந்தது.
அதைப்பொருட் படுத்தாமல் மீண்டும் கேஸ் பைல்களில் கவணமாக சில நிமிடங்களில் ஒரு போன் கால் வந்தது.
அதை ஏற்றவன் " ஹலோ மித்ரன் ஸ்பீகிங்" என்றதும் மறு முனையில் இருந்த அந்த உருவம் " யோ போலீஸு உனக்கு ஒரு போடோ அனுப்பிருக்கன் அதப் பார்த்தா நீயே கூப்பிடுவ" என்று போனை கட் செய்தது.
இங்கு தியாவின் வீட்டில் மாப்பிள்ளை வீட்டார் வந்து குவிந்திருக்க அறைக்குள் அழகுப் பதுமையாய் இருந்த தியாவின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது.
இருந்தும் அவன் மீதிருந்த எதோ நம்பிக்கையில் மீண்டும் அஜய்கு அழைத்தாள்.
குடோனில் இருந்த அஜயின் போன்
காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ 🎶🎶
ரிங்டோன் ஒலிக்க அது அந்த அடியாளின் கையால் உடைந்து சிதறியது.
தன்னவளுக்காக வைத்த பிரத்தியேக போன் ஒலியில் அஜயின் மயக்கம் தெளிய அவனின் காதுகளில் நான் "செத்து போய்டுவேன்" என்ற தியாவின் வார்த்தை மீண்டும் மீண்டும் ஒலிக்க அந்த ஆறடி ஆண்மகனின் கண்களில் நீர் கசிந்தது.
போடோ வை பார்த்த மித்ரன் அஜயின் நிலை கண்டு பதட்டம் அடைந்து மீண்டும் அந்த உருவத்திற்கு அழைப்பை ஏற்படுத்தினான்.
ருத்ரன் : " என்னாச்சு ஏன் டென்ஷனா இருக்க"
மித்ரன்: "அஜய ஒருத்தன் தூங்கிட்டான் "
போனின் ஊடாக ஹலோ என்ற குரல் கேட்க
மித்ரன்: " உனக்கு என்ன வேணும்.அவனுக்கு எதுவும் தெரியாது. அவன் அப்பாவி டா"
அவ்வுருவம் " ஹஹ்ஹா...ஹா" வெடித்து சிரித்தது.
மித்ரன்: "இப்படி பேசுவன்டு நினச்சியா. அவன் மித்ரனோட தம்பிடா . அவன் ஜாலியான டைப் தான் ஆன அவனுக்கு கோபம் வந்தா செத்திங்கடா"
போனை கட் செய்த அவ்வுருவம் " டேய் அவன போட்டு தள்ளுங்கடா" என்று கத்த அஜயை அடியாட்கள் சூழ்ந்து கொண்டனர்.
" ருத்ரா அஜயோட ஜி.பி.எஸ் ட்ராக் பன்னு குவிக் . எவ்வளவு சமாளிப்பனோ தெரியாது " என்று மித்ரன் புலம்பிக் கொண்டிருந்தான்.
இங்கு கையில் கத்தியோடு அடியாள் ஒருவன் அஜயை நோக்கி வர அவனின் கையை முறுக்கி மறு புறம் திருப்பி அவனின் முதுகில் முஷ்டியால் அடிக்க அவன் அவ்விடத்திலேயே சுருன்டு விழுந்தான்.
அஜய்கு அழைத்த தியா அவனது போன் சுவிட்ஸ் ஆப் என்று வரவே அவளது நம்பிக்கை முற்றாக அழிந்து போனது.
" பொண்ண அழச்சி வாங்க" என்ற உறவினர் குரலில் அஜய் மீது வெறுப்பை வளர்த்து கொன்டவள் மாப்பிள்ளை வீட்டார் முன் கண்ணில் நீருடன் தலைக் குனிந்து நின்றாள்.
விழிக்கும்....
கனவுகளின் இளவரசி RS musha
✍️ Muhsina saththar
நெல்லியகம பலாகல.
No comments